Monday, July 25, 2016

கபாலி - மோசடி , கெட்ட கனவு - தினமணியின் கண்டுபிடிப்பு

கபாலி - ஒரு கெட்ட கனவு!

"தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக அரைத்துக் கொண்டிருக்கும் அரதப் பழசான நல்ல தாதாவுக்கும் கெட்ட தாதாவுக்குமான மோதல்தான் கதை. அந்த தாதாக்களின் கதையை அப்படியே படமாக்கினால் "முற்போக்குவாதி' பட்டம் கிடைக்காது என்பதனால், அதில் தமிழ் உணர்வையும், ஜாதிக் கொடுமையையும் கலந்து படமாக்க முற்பட்டிருக்கிறார் பா.ரஞ்சித்.

மலைகளாகக் கிடந்த மலேசியாவை சீராக்கி பொன் விளையும் பூமியாக மாற்றிய தமிழர்களுக்குத் தலைமை தாங்குகிறார் கபாலியாக வரும் ரஜினி. அந்த முன்னேற்றம் பிடிக்காத மலாய் முதலாளிகள் ரஜினியையும், அவரது குடும்பத்தையும் சிதறடிக்கிறார்கள். பின் அந்த முகாமுக்குள் நடக்கும் தீப்பொறி உரசலில் வெடித்துக் கிளம்பி, "தமிழன் முன்னேறினா பிடிக்காதா..! ஒரு தமிழன் ஆளக் கூடாதா? நான் ஆளப் பிறந்தவன்டா...' என ரஜினி தரும் பதிலடிதான் கபாலியின் கதைக் களம்."

கபாலி மோசடி! 

"50 நிறுவனங்களைக் கொண்ட டி.வி.எஸ். குழுமத்தில் 39,000 தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை பார்க்கிறார்கள். அவர்களது ஆண்டு பற்றுவரவு ரூ.42,000 கோடி. முருகப்பா குழுமத்தின் 28 நிறுவனங்களில் 32,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களது வருடாந்திர விற்று வரவு ரூ.26,000 கோடி. அமால்கமேஷன் குழுமத்தில் 47 நிறுவனங்களில் 50 தொழிற்சாலைகள், 15,000-க்கு அதிகமான தொழிலாளர்கள். ஆண்டு பற்றுவரவு ரூ.9,300 கோடி. அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாத, அவர்களுக்கு முக்கியத்துவம் தராத ஊடகங்கள், "கபாலி' போன்ற திரைப்படங்
களுக்கு, அதிகபட்சம் ரூ.1,000 கோடி புரளும், சினிமா துறைக்கு இவ்வளவு முக்கியத்துவமும் விளம்பரமும் தருகின்றனவே, இதற்குக் காரணம் என்ன? ரசிகர்கள் முட்டாள்களாக இருப்பதுதானே!"

மேலே சொன்ன 2 செய்திகளும் கபாலியை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கில் எழுதவில்லை நடுநிலையோடு தான் எழுதினோம் என்றும் சொல்வார்கள் தினமணியை அனுகினால். 

நாமும் அட நல்லது தானே சொல்கிறார்கள், நல்லது சொன்னால் கேட்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்களே என்றும் கூட தோன்றும்.

தினமணி செய்திதாள் துவங்கி இலாபம் பார்க்க துவங்கியது முதல் இன்றைக்கு வரை தமிழகத்தில் உள்ள அத்தனை பள்ளி இல்லா ஊர்களிலும் பள்ளிகளை கொண்டுவந்து கொடுத்துள்ளது.

தமிழகத்து விவசாயிகளின் நலன் காக்க காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படும் கர்னாடக அரசை நிர்பந்திக்க உச்ச நீதிமன்றத்தை அனுகி உத்தரவை பெற்று இரணுவ நடவடிக்கைக்கு உட்படுத்தி தமிழகத்தை காத்து நின்றது.

தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு அரசு துறைகளில் மட்டும் இல்லாமல் தனியார் துறைகளிலும் வேலை வாங்கிக்கொடுத்து வாழ வைத்து அழகு பார்த்தது.

இப்படி ஏதாவது இது வரை தினமணி செய்ததுண்ட அதன் இலாபத்தில். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் செய்து இருக்கலாம்.

தான் ஒரு செய்தி வியாபார நிறுவனம் என்றதை சாதகமாக பயன்படுத்தி திரைபடமும், பொழுதுபோக்கு ஊடகங்களும் அதன் தயாரிப்புகளினால் நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு என்றது போல் ஒரு பிம்பத்தை விதைக்க எண்ணி துனிகின்றது.

கிரிகெட் விளையாட்டாலும் அதன் சமீபத்திய வடிவமான ஐபியல் ஆகட்டும் இல்லை உலக கோப்பையாகட்டும் இதனால் நாட்டிற்கு விளையும் நன்மை என்ன என்று இது வரை எழுதாது ஏன். அந்த விளையாட்டாலும் அதனால் பணம் பெறும் விளம்பர மற்றும் விளையாட்டு வீரர்களால் எல்லாம் இந்த தொழில் நிறுவன ஊழியர்களுக்கு என்ன என்ன கிடைத்தது என்று தினமணி தான் சொல்ல வேண்டும்.

அவரவர் அவர்களின் வேலைகளை பார்கிறார்கள். என்ன அதையும் தாண்டி சமூக சிந்தனை, அக்கறை, சீர்திருத்தம் என்றும் கூட சென்று செய்வது அவர்களது தனி தகுதி. ஆனால் அது தான் அவர்களது வேலை கிடையாது. எப்படி தினமணி தன் வேலையை மட்டும் பார்கிறதோ அதே மாதிரி.

தனக்கு வந்தால் இரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சாரு என்ற எண்ணத்திமிரில் இருந்து வெளிவரவும்.

சமூகத்தில் வெறுப்பை விதைப்பதில் இருந்து வெளியேறி நல்ல செய்திகளை பரப்பவும். உங்களது செய்திவியாபாரம் தன்னால் வளரும், இப்படி குறுக்கு வழியில் வாழ்வை தேடுவதை நிறுத்திக்கொண்டால் நல்லது.

பின் குறிப்பு: தினமணியின் செய்தியில் இருந்து ஒருசில பகுதிகளை எடுத்து இணைதுள்ளேன். பின்னாளில் அவைகள் தூக்கப்படலாம் என்ற நிலைக்காக

1 comments:

Anonymous said...

Super Bro. Also,Dinamani writting in one side only. Kabali net released on the same day. Even producer went to court,It is notpossible to prohibited that.

Appa film only stopped for 3 days only.Now its running insinglescreen in Multiplex .Its normal for all star movie release to collection.