Tuesday, December 13, 2016

அடுத்த அமைய இருக்கும் பாசகவின் தமிழக முதல்வர் யாராக இருக்கும்

தமிழக பாசகவை பொருத்த அளவில் வெளியில் பெயர் தெரியும் அளவிற்கு இருப்பவர்கள்

தமிழிசை - பாசகவினால் தான் இந்தியாவில் மட்டும் அல்ல உலகிலேயே தங்கமும் எண்ணைவிலையும் குறைந்துள்ளது என்று அறிவார்ந்த வாதம் புரிந்தவர். இது தவிர நாள்தோரும் அவர் கொடுக்கும் பேட்டியை படித்தீர்கள் ஆனால் முதல்வர் பதவிக்கு இவர் எவ்வளவு தகுதியானவர் என்று தெரியும்.

வானதி சீனிவாசன் - இவர் தொழில் முறையில் வழக்குரைஞர் ஆகையால் அந்த புலமையை எல்லாவற்றிலும் அழக்காக காட்ட கூடியவர். சென்ற பொங்களுக்கு எப்படின்னு சொல்ல மாட்டேன் ஆனால் சல்லிக்கட்டு நடக்குதா இல்லையான்னு பாருங்க என்று முதலில் தந்தி ரங்கராசுகும் அதை தொடர்ந்து தமிழகத்துக்கும் அல்வாவை அள்ளி வீசிய வாய் சொல் வீரங்கனை இவர். வார்த்தைகளிலேயே மோடி மேடையில் அடவு கட்டி ஆடும் கூத்தை வார்த்தையிலேயே அழகாக ஆட தெரிந்தவர்.

பொன் இராதாகிருட்ணன் - இவர் அதிகம் பேசவதில்லை இருந்தாலும் சத்தம் போடாமல் அதாணியின் வேலைகளை சிவனேன்னு சிரத்தில் ஏற்றி சத்தமே இல்லாமல் தமிழகத்தில் நிறைவேற்றி முதலளிக்கு சாமரம் வீசும் விசுவாசி.

குருமூர்த்தி - ஏழை எளியவரின் தங்கத்தை பிடுங்கி வைத்துக்கொண்டு பாரதத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்று பாசக வென்றதும் மக்களுக்கு இந்து மற்றும் தினமணியில் மிக தைரியமாக செய்தி சொன்னவர். அவர் சொன்ன பாதையில் தான் இப்போது கட்சியும் பயணிக்கின்றது.

எச்சி இராசா - பேசவும் தெரியாது கேள்வி கேட்கவும் தெரியாது. 2 நிமிடத்திற்குள் தான் என்ன சொன்னோம் என்ற ஞாபகம் கூட இல்லாமல் சொல்லவே இல்லையே என்று தன் மானத்தையே தானே மக்கள் முன் வாங்கிகொள்ளும் அறிவாளி. இந்த அழகில் இவர் தான் பாசகவின் தேச தலைவர் அந்த பதவிக்கு என்ன மதிப்பு என்று இவரை வைத்தே தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

இவர்களை தவிர மற்ற ஒருவரையும் பாசக என்று சொன்னால் கூட தமிழகத்தில் ஒருவரும் நம்ப மாட்டார்கள். இவர்கள் தவிர இன்னும் சில மக்கள் தொகவில் விவாதத்திற்கு வருவது உண்டு. அப்படி வருபவர்கள் அனைவருமே கையில் ஒரு நீதிமன்ற தீர்பை கையில் வைத்து இருப்பார்கள், நாம் ஏதாவது கேட்டால் நீதிமன்ற தீர்ப்பில் சொல்லி இருக்கிறது என்று சொல்வார்கள். சரி நீதிமன்றதில் செயலலிதா குற்றமற்றவர் என்றும் தான் சொல்லி இருக்கிறார்கள் நீங்கள் ஒத்துகொள்கிறீர்களா என்றால் இல்லை என்பார்கள்.

ஆகையால் அவர்களை எல்லாம் இந்த எடுபிடி வேலைகள் தவிர மற்ற உயர் பதவிக்கு எல்லாம் கூப்பிடுவார்கள் எந்த சந்தேகமும் வேண்டாம் அவர்கள் எல்லாம் கடைசிவரையில் நிறுவன விளம்பரங்களில் தொடங்கி விளம்பரங்களிலே வாழ்கை முடியும் விளம்பர நடிகர்களாக மட்டும் கொள்வோம்.

ஆக போட்டி இந்த 4வருக்கும் தான், யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. தமிழிசையும் எச்சி ராசாவும் ஒரே இரகம் உளரி கொட்டுவதில் கை தேர்ந்தவர்கள் ஆக அவர்களுக்கு அடவு கட்டி மேடைகளில் மோடி போல் கூத்தாட எல்லாம் தெரியாது என்றது வெளிச்சம்.

குருமூர்த்தி இந்திய நிதி அமைச்சர் பதவிக்கு தகுதியானவராக தன்னை நினைத்து கொள்பவர் ஆக முதல்வர் பதவியே ஆனாலும் தனக்கு வேண்டாம் என்று சொல்லும் குணமுடையவர்.

மீதம் இருப்பது பொன்ராவும் வானதியும் தான், இதில் வானதி இதுவரையில் எந்த முதலாளியின் வேலையாளாய் கடமை நிறைவேற்றியவர் இல்லை ஆனாலும் மோடி மேடையில் ஆடும் கூத்தை தாளம் தப்பாமல் இவரும் வார்த்தைகளிலேயே ஆட கூடியவர். ஆனாலும் சசியை முன்னிருத்தும் எண்ணம் ஒரு சாராருக்கு இருப்பதால் மீண்டும் இரு மகளீர் போட்டியா என்ற கேள்வியில் இவருக்கு வாய்ப்பு குறைவு தான்.

அனேகமாக பொன்ராவுக்கு தான் அந்த வாய்ப்பு வழங்கப்படும்.

தமிழகத்தில் இனி எல்லோரும் குர்த்தாவும் பைசாமாவும் தான் அணிவார்கள், பேசும் போது எல்லாம் வாங்க்ச்சி போங்கச்சி என்று தான் பேசுவார்கள். திருமண வைபவங்களில் அந்த லட்டுச்சியை கொஞ்சம் இந்த இலைச்சியில் வைங்கச்சி என்று பேசி அகமகிழ்வார்கள்.

எல்ல தெருக்களிலும் திடீர் திடீர் என கணேசும் அனுமாரும் தோன்றுவார்கள், மக்கள் எல்லாம் நெற்றியில் செந்தூரமை நாமமாம இட்டுக்கொண்டும் வாயில் பீடாவை கொதப்பியபடி தான் அலைவார்கள்.

வட நாட்டில் இருந்து வருபவர்கள் எல்லாம் என்ன ஏதோ ஒரு நாடோடி கூட்டத்தில வந்து மாட்டிகிட்ட மாதிரி இருக்கு என்று பேந்த பேந்த முழிப்பார்கள்.

கிட்டதட்ட கல்கத்தா கலவரத்திற்கு பிறகு கல்கத்தா எப்படி தன்னை கீழ்தரமான ஒரு மத கலவரத்துக்கு தயார்படுத்திக்கொண்டதோ அப்படி ஒரு தோற்றத்திற்கு பாசக தமிழகத்தை இழுத்து சென்று, போதை நல்லா ஏறிகிச்சி இப்ப கைஎழுத்து போட சொல்லு நீட்டுர இடத்துல எல்லாம் போடுவான் பார்ன்னு சொல்லி சிரிப்பார்கள்.

இது புரியாம பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் மாணவர்களுக்கு பாசக வந்தால் ஊழல் ஒழியும் உங்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் தனியாக வங்கி கணக்கு தொடங்கி அதில் இந்திய அரசு சார்பில் 15 இலட்சமும் தமிழக அரசு சார்ப்பில் 20 இலட்சமும் கொடுப்பப்படும் என்று பரப்புரை செய்வார்கள். அவர்களும் அப்படியே வாய் பிளந்து கனவில் அலைந்து திரிந்து எங்கே எத்தனை இடம் வாங்குவது என்ற கணக்கில் ஓட்டுகளை அள்ளிவிடும்.

பாசகவின் 5 ஆண்டு ஆட்சிக்கு பிறகு பீகாருக்கு தமிழ் மக்கள் மறுபடியும் கூலி வேலை பார்க்க கிளம்ப வேண்டியது தான் தயாராய் இருங்கள்.

பாசக நல்லவங்க எல்லோரும் வராங்க உடமைகளை எடுத்து பத்திரமா வச்சுகுங்க இல்ல கள்ள சொத்து இல்லை கள்ள பணமும் சொல்லி பிடிங்கிகிட்டு போய் 120 கோடி 69 கோடின்னு வச்சுகிட்டு நமக்கு வாட்சப்புலே படம் எடுத்து அனுப்புவானுக.......