Saturday, October 8, 2016

ரெமோ - திரைவிமர்சனம் இதுக்கு பேசாம wedding singer கதையையே எடுத்து இருக்கலாம்

wedding singer

என்னமோ வித்தியாசமா படம் என்று சொன்னார்களேன்னு பார்த்தால் கடைசியில இந்த wedding singer கதைய அப்படியே மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு எடுத்து இருக்கிறார்கள் மற்றபடி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

அந்த சிறுமியை காப்பாற்றுவதாக அந்த சிறுவனுடன் டுருபெரி மோரை நடனம் ஆடவைத்து நாயகியின் மனதில் இடம்பிடித்ததை மாற்றி அமைத்து இருக்கிறார்.

 நிச்சயம் ஆன பின்னும் அடுத்த பெண்களின் பின்னழகை ஆபாசமாக விளிக்கும் அந்த ஆடவனின் வசனங்களை இவளை பார்த்ததும் அவளை விட்டு விட்டு வந்துவிட்டேன் என்று சொல்வதாக மாற்றிவிட்டார்கள்.

திருமணங்களில் மட்டும் பாடி சொற்பபணம் ஈட்டும் நாயகன் ஆங்கிலத்தில் இதில் நடிக்க வேண்டி வேலை இல்லாமல் அலைவதாக காட்டியுள்ளார்கள்.

கண்ணாடியில் ஜூலியா கூலியா என்று சொல்லிப்பார்ப்பதையும், நாயகனின் அன்புள்ளம் கண்டு வியந்தலும் என்று இருந்த காட்சிகளை எடுக்க படாது பாடு பட்டுள்ளார் இயக்குனர்.

என்ன அந்த டுருபெரி மோர் காட்டும் அதே அப்பாவி தனம் இந்த நாயகிக்கும் பொருந்தி இருக்கிறது.

பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் இருந்தாலும் இவ்வளவு நல்ல ஆண்களும் உலகில் இருக்கிறார்களே என்று அதிசயக்கும் காட்சிகள் எல்லாம் தமிழில் காணாமல் போனது ஏன் என்று இயக்குனரும் அவரது கதை சொன்ன பட்டாளமும் விளக்கினால் நல்லது.

ஆங்கிலத்தில் நாயகனுடன் பாடும் ஒரு திருனங்கை வருவார் அந்த பாத்திரத்தை பயன்படுத்தி திரைகதையில் மாற்றுவோம் என்று துவங்கி முதல் கோணல் முற்றிலும் கோணலாக சென்று முடிந்து இருக்கிறது.

என்ன அருமையான படம் இந்த wedding singer. அதை கடித்து குதறி குத்துயிரும் கொலை உயிருமாக கொடுத்து இருக்கிறார் இந்த இயக்குனர்.

ஆங்கிலத்தில் படம் துவங்கியதில் இருந்து கடைசிவரை எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் படம் பயணிக்கும். ஆனால் தமிழிலோ சிவா தனது விமர்சனங்களில் அடுத்தவர் படங்களில் பகிடியடிக்கும் அத்தனை நக்கல் சம்பவங்களுமாக இந்த படம் அமைந்தது கொடுமையே.....

எப்பவுமோ சிவாவை பெண் வேடத்தில் பார்க்க சலிப்பாக இருக்கிறது இது அந்த இயக்குனருக்கு தெரியாமல் போனது சோகமே.

2 comments:

Anonymous said...

very correct. mokkaiyo mokka padam.

Anonymous said...

very correct. mokkaiyi mokka padam.