Thursday, December 15, 2016

மோடிக்கு பதில் அதிமுக சி பொன்னையனை பிரதமராக்கி இருக்கலாம்

இளிச்சவாயன் இந்தியன் திருப்பி கேள்வி கேட்க கூட தயங்குகின்ற இந்தியர்கள் இருக்கும் வரையில் உங்கள் பணத்தையே பிடுங்கி அதில் உங்களுக்கே பப்பர மிட்டாய் வாங்கி கொடுத்து நன்றாக சப்பு கொட்டி சாப்பிடுங்கள் என்று அழக்காக சொல்வார்கள் இந்த பாசகவினர்.

சி பொன்னையன் நிதி அமைச்சராக இருந்த சமயம் தமிழகத்தில் கடும் நிதி பற்றாகுறை. எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருந்த சமயத்தில் இந்த பொருளாதார மேதையான பொன்னையன் ஒரு யோசனையை சொல்லி அதை வலுகட்டாயமாக செயல்படுத்தவும் செய்தார்.

அரசாங்கத்திடம் வேலைபார்க்கும் மக்கள் தங்களது ஓய்வூதிய வைப்பை அப்படியே அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிடித்து வைத்துக்கொண்டு அரசாங்க வருமானமாக கணக்கு காட்டி சமாளிப்போம் என்று சொன்னது மட்டும் இல்லாது.

அந்த பணத்தை நம்பி பல நல்லகாரியங்கள் ஏழை எளியவர்களின் வீட்டில் நடக்கும், அவைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் எகத்தாளாமாக பேசியும் ஏன் என்று கேட்டவர்களை ஏகவசனங்களில் விமர்சிக்கவும் செய்தார் இந்த பொருளாதார மேதை சி பொன்னையன்.

இதே திட்டத்தை முன்னோடியாக எடுத்துக்கொண்ட நம்ப இந்த காலத்து பொருளாதார மேதை மோடி அதை இந்தியா முழுக்க செயல்படுத்தியுள்ளார்.

கருப்பு பணத்தை ஒழிப்பதாக சொல்லிக்கொண்டு ஏழை எளியவர்களின் பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று பொய் சொல்லி வங்கியில் போட சொன்னதுடன். உங்க பணமாகவே இருந்தாலும் நீங்களும் கூட அதை திரும்ப எடுக்கமுடியாது என்றும் பிறகு சொல்லி இருக்கிறார்.

சாதரணமாக இப்படி வங்கிகளில் வைக்கப்படும் நிதிக்கு வட்டி கொடுப்பார்கள். அந்த வைப்பு பணத்தை வங்கி முதலீட வைத்துக்கொண்டு அதன் தொழிலை செய்து வருவதும் தான் வங்கியின் வர்த்தகம்.

ஆனால் இந்த இக்கட்டான காலகட்டத்தில் வலுகட்டாயமாக வைக்கப்பட்ட பணத்திற்கு என்ன வட்டி கொடுக்கப்போகிறார்கள் இந்த பணத்தை வலுகட்டாயமாக வங்கியில் போட சொன்னவர்கள்.

எங்கே எடுத்து உபயோகப்படுத்த படுகின்றது உங்கள் பணம்,யாரேனும் ஒருவராது சொன்னார்களா...

உங்கள் பணத்தை செலவு செய்ய வரம்ப்பை நிர்நயிக்க அரசாங்கத்திற்கு என்ன உரிமை இருக்கிறது. அல்லது அவர்கள் சொன்ன வரம்புக்குள் உங்கள் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்துகொள்ளும் அளவுக்கு அது சரியான தொகையாக இருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் உங்களும் உதவாது உங்கள் பணம் பூதம் காத்த புதையலாக வங்கியில் ஏன் போய் வட்டியில்ல கடனாக நீங்கள் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டும்.

பாசக அரசுக்கு நிதி திரட்ட வேறு வழியே தெரியவில்லையா, ஏழை எளியவரிடம் தான் பிடுங்கி தின்று 35 இலட்ச ரூபாய்கு கோட்டும் சூட்டும் தைத்துக்கொண்டு செல்பி படம் எடுத்து காட்டவேண்டுமா....

சென்றமுறை பாசக அரசு வந்தபோது கச்சா எண்ணை பரிவர்த்தனைகளில் பிடித்த சொகுசு வரியை கொண்டு மண்ணெணையும் டீசலும் குறைந்த விலையில் கொடுத்துக்கொண்டு வந்ததை காண பொருக்காகதவர்களாக. அந்த பணத்தை அப்படியே எடுத்து காலி செய்து தங்க பாதை திட்டம் என்று அழித்தார்கள்.

ஐயய்யோ போச்சே என்று மக்கள் புலம்பிய போது இந்த சாலைகள் அமைப்பதினால் பாருங்கள் இந்தியாவின் பொருளாதாரமும் ஏழைகளின் வாழ்வும் எப்படி மேம்பட போகின்றது என்று சொன்னார்கள். வழக்கம் போல மக்களும் இனிமேல் இந்தியாவில் எல்லாம் சல்லீசாக கிடைக்கபோகுதுன்னு வாய் பிளந்தார்கள்.

இந்த பணத்தை பாசக அரசு ஏப்பம் விடும் முன் 5 ரூபாய்கு மாலையில் சிற்றுண்டியே முடிக்கலாம் ஆனால் இன்று வெளியில் சைக்கில் நிறுத்த கூட இந்த பணம் இன்று உதவாது.

ஆனால் அன்றைக்கு 1000 கோடிகளில் வியாபாரம் செய்து கொண்டிருந்த முதலாளிகள் எல்லாம் இன்றைக்கு இலட்சம் கோடிகளுக்கு வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அந்த ஏழைகளை வாழ வைக்க உண்மையான ஏழைகளின் வயிற்றில் அடித்து தான் பிழைக்க வேண்டுமா என்ன.....

அதே போல் இன்றைக்கு வேறு எந்த எந்த ஏழைகளை பிழைக்க வைக்க உழைக்கும் மக்களின் பணத்தை வங்கியிலே வலுகட்டாயமாக பிடிங்கியது மட்டும் இல்லாது இப்போது தான் ஏழைகள் நிம்மதியாத தூங்குகின்றனர் என்று மேடையில் அடவு கட்டி கூத்தாடினார் மோடி.

நேர்மைனா என்னம்மா என்று குழந்தை கேட்க அமாம்டா கண்ணுன்னு அம்மா சொல்வது போல் நேர்மை தேசப்பற்று என்று எல்லாம் இனிமே பாசக கண்ணுன்னு அந்த அம்மாவை வைதே சொல்ல வைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை.

2 comments:

')) said...

ஆகா
நல்ல கோணம்
தொடர்க
தம +

')) said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி