Saturday, December 17, 2016

ஏன் சசிகலா அதிமுக முதல்வராக கூடாது

சசி தலைவராவதும் முதல்வராவதும் அவரது மற்றும் அதிமுகவின் தொண்டர்கள் விருப்பம். இதிலே பாசக ஒன்றும் அறிவுரை செல்ல தேவையில்லை.

என்னமோ நல்லவர்கள் போல் குறுக்கு வழியில் பதவிக்கு வரவேண்டிய தேவை எல்லாம் எங்களுக்கு இல்லை என்று எச்சி ராசா பதில் சொன்னார்.

அதை தொடர்ந்து குருமூர்த்தி வழக்கு தொடுக்கிறார், சேகர் கருத்து சொல்கிறார். இவர்களின் அல்ல கைகள் இணையத்தில் நகைப்பாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் அதிமுகவிற்கு தெரியும் யாரை தேர்ந்தெடுப்பது என்று.

இதிலே சாக்குலேட்டுடன் ஒட்டி இருந்தால் அந்த அட்டையை யாரும் சாப்பிடமாட்டாங்க என்ற நக்கல் வேறு.

 நாமும் தெரியமல் தான் கேட்ப்போம், செயலலிதிலா எந்த அரசியல் பாரம்பரியத்தில் வந்தவர். எந்த எந்த இயக்கங்களில் சேவையாற்றி இருக்கிறார். அவருடைய அரசியல் நம்பிக்கைகள் என்ன. அல்லது நோக்கங்கள் தான் என்ன.

முன்னால் முதல்வரின் ஆசை நாயகியாக இருந்தவர், முதல் முறை ஆட்சி கிடைத்ததும் என்ன செய்வதென்றே தெரியாமல் நடராசனிடன் ஆட்சியை ஒப்படைத்து  விட்டு தோழியுடன் ஓய்வெடுத்தவர். சித்தன் போக்கு சிவன் போக்கு என்று நடராசனோ எங்கே எல்லாம் காசு வருகின்றதோ அங்கே எல்லாம் கல்லாகட்ட கடைசியில் சுடுகாட்டு ஊழல் வரை கதை நீண்டதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

அதன் பிறகு வந்த ஆட்சியில் எல்லாம் திமுக தொடங்கி முடிக்கும் தருவாயில் இருக்கும் திட்டங்களுக்கு பெயர் மாற்றுவது இல்லை திமுகவின் பழைய திட்டங்களை புதிய என்ற பெயருடன் செய்வதை தவிர செயா இது வரையில் வேறு எதையுமே செய்தவர் இல்லை.

என்னமோ இரும்பு பெண்மணியாம், அசைக்க முடியாதவராம். அரசியல் ஞானம் கொண்டவராம். எவ்வளவுடா அளந்து விடுவீங்க அதுவும் பாசகவின் சார்பில். அதிமுக அடிக்கின்ற சால்ராவைவிட உங்கள் சால்ரா தாங்கமுடியவில்லை சகிக்கவும் இல்லை.

சசியின் பிடியில் சிக்கி வெளிவர முடியாமல் சண்டை வரும் போது எல்லாம் வனவாசம் போகின்றேன் என்று ஆளுனருக்கு கடிதம் அனுப்பியது எல்லாம் பாசகவிற்கு தெரியாது போலும்.

செயா இறக்கும் வரையில் சசியிடம் இருந்து யாராலும் பிரிக்கமுடியாத தோழியாக வைத்துக்கொண்ட இரும்பு பெண்மணி சசி.

அன்றைக்கு எப்படி எந்த தகுதியும் இல்லாமல் இறக்கும் வரை முதல்வராக இருந்தாரோ அதே போல் சசியாலும் இருக்கமுடியும்.

அதிமுகவை பொருத்த வரையில் மக்கள் பார்க்க ஒரு பெண்ணின் காலில் விழுந்தால் கோடி கோடியாக கிடைக்கும் என்றால் காலிலேயே விழுந்தே கிடக்க கூட அவர்கள் தயார். அதில் உங்களுக்கு என்ன சங்கடம்.

தமிழகத்தில் திமுகவை எதிர்த்து நிற்க ஒரு ஆள் வேண்டும் அவ்வளவு தான் அது யார் என்றது எல்லாம் முக்கியம் இல்லை.

ஏன் அன்புமணி, விசயகாந்து, சீமான் எல்லாம் ஆசைபடலியா. அந்த மாதிரி ஆசைபடலாம் ஆனால் எத்தனை பேரால் பதவிக்கு வரமுடியும்.

அதிமுக ஆட்சிகாலத்தில் எப்படி எல்லாம் திட்டம் தீட்டப்பட்டது எங்கே என்ன பேச வேண்டும், யார் யார் எல்லாம் வேலை முடித்து கொடுப்பார்கள். எந்த எந்த ஆளுக்கு என்ன என்ன கொடுக்க வேண்டும் என்று நரசிம்ம ராவு காலத்தில் இருந்து மோடி காலம் வரை கூடவே இருந்து பார்த்த அனுபவம் கொண்டவர் சசி.

ஆகவே அரசாள கொடுத்தால் கடைசிவரையில் காலம் ஓட்ட தெரிந்தவர் சசி. செயா எப்போதாவது வெளியில் வந்து அண்ணா நாமம் வாழ்க புரட்சி தலைவர் வாழ்க என்று சொன்னது போல் சசியால் செயல்பட முடியாதா என்ன.

அதே நடராசன் இருக்கிறான், அன்றைக்கு செயாவிற்கு தப்பு தப்பாக சொல்லி கொடுத்த அல்ல கைகளும் இருக்கிறார்கள் அவர்கள் சேர்ந்து சசியை ஒழிக்கனும் என்று நினைத்தாலும் அந்த கால அனுபவத்தை மனதில் வைத்து கடைசிவரை மாட்டாமல் எப்படி தப்பிப்பது என்று சசிக்கு தெரியும்.

அப்படியேதும் மாட்டினால் கொமாரசாமி கிடைக்காமலா போய்விட போகிறார்கள். 2+2= 0 என்று சொல்ல ஒரு பெங்களூரு கணக்கி கிடைக்காமலா போய்விட போகின்றது.

மரியாதையா போய் உங்கள் வேலையை பாருங்கள், சசி தமிழகத்திற்கு மட்டும் தலைவியாக போவது இல்லை இந்தியாவை ஆளப்போகும் இரும்பு பெண்மணி. அவரை பற்றி எல்லாம் தப்பும் தவறுமாக பேசுவதையும் எழுதுவதையும் நிறுத்திக்கொள்ளுங்கள் வயிற்றெரிச்சல்காரர்களே......

0 comments: