Wednesday, November 9, 2016

துக்ளக் மோடி-அதாணியும் அம்பாணியுமா மூட்டைய தூக்கிக்கிட்டு பணம் மாத்த போறாங்க

அவரசத்துக்கு ஆகும்னு ஒன்னு இரண்டா சேர்த்து வைத்திருப்பவனும், 1 இலட்ச்ச ரூபாய் முதல் 10 இலட்ச ரூபாய் வரையிலும் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளும் தான் இந்த சிக்கலில் மாட்டி தவிக்க போகிறார்கள்.

மாத சம்பளக்காரர்களும் பெரும் பண முதளைகளும் வெறு கணக்கு தாள்களில் அல்லவா பணத்தை வைத்துள்ளார்கள். அவர்களுக்கு எப்போது பணம் வேண்டுமோ அப்போது எடுக்கும் போது அன்றைக்கு அடித்த தாளாக அல்லவா கொடுப்பார்கள்.

இந்த அடித்தட்டு மக்களுக்கு நன்மை புரியத்தான் துக்ளக் மோடி பிரதமராக வரவேண்டும் என்று பாசகவும் அதன் அடி பொடிகளும் நாங்கள் வந்தான் அனைவருக்கும் வேலை வாங்கித்தருவோம் என்று ஏமாற்றி வாக்கை அள்ளினார்கள் (தமிழ் நாட்டின் நிலை வேறு).

இந்த அடித்தட்டு மக்களை நோகாடிப்பதிலும் சாகடிப்பதிலும் அப்படி ஒரு மகிழ்ச்சி பாசகவிற்கு.

கிராமத்து சுப்பன்,குப்பன் வரையில் வண்டியில் சென்றார்கள், இன்றைக்கு பெட்ரோல் வானத்திற்கு பறந்தது.

அனைத்து விடுகளுக்கும் சமையல் வாயு இணைப்பை வாங்கினார்கள் - இன்றைக்கு வாங்க முடியாத அளவிற்கு விலையை உயர்த்தியாச்சு.

சாலையிலும் இரயிலிலும் அடித்தட்டு மக்கள் பயணித்தார்கள், இன்றைக்கு 10% மட்டும் வாங்கக்கூடிய விலையில் மற்றவை எல்லாம் பணம்படைத்த மக்களுக்கு மட்டுமே.

BSNLல் சேவை பெற்று அனைவரும் செல்லும் இணையமும் பயன்படுத்தினார்கள். இன்றைக்கு அனேக இடங்களில் இந்த சேவையை கிடைக்காத வண்ணம் செய்தாச்சு. மக்கள் அதாணிக்கும் அம்பாணிக்கும் கொட்டிக் கொடுக்கபட்டுவிட்டார்கள்.
.
.
.
.
.

அனேகமாக இன்னும் கொஞ்ச காலத்தில், சுமார் 40 வருடங்களுக்கு முன் வெளியூர் போவதாக இருந்தால் மாட்டு வண்டியை பூட்டி, கட்டு சோற்கட்டி செல்வது போல் அடி தட்டு மக்களை காவடி எடுக்க வைத்துவிடுவார்கள் போலும்.

ஏன்டா இந்த நிலைமை என்று கேட்டீர்கள் என்றால் பல் இருப்பவன் பட்டாணி சாப்பிடுகிறான் என்று எகத்தாளம் பேசுவார்கள்.

பாசகவிற்கு ஓட்டு போடாதே என்று அன்றே சொன்னோம், அன்றைக்கு பாலாறும் தேனாறும் அல்லவா பாயப்போகிறது என்று சொன்னர்கள். எங்களை நம்பாமல் அவர்களை நம்பி இப்படி விட்டில் பூச்சாய் போனீர்களே, உங்களுக்கு இதும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

அடுத்த தேர்தலிலும் இந்த துக்ளகையே தேர்ந்து எடுங்கள் இன்னும் நிறைய உங்களிடம் இருந்து பிடுங்கவேண்டி இருக்கிறது அந்த வகிரம் பிடித்த கட்சியினருக்கும் துக்ளக்கிற்கும்.

ஆனாலும் ஒரு இந்து ஆட்சியரை பார்த்து அவரை போல் நடந்துக்கொண்டு இருக்கலாம், இந்து மதம் என்று சொல்வது எல்லாம் சும்மா பேச்சுக்கு தான் போலும்............

2 comments:

')) said...

நல்ல காமெடி பீஸ். இப்படியே எழுதங்க.குப்பனும் சுப்பனும் இதை வரவேற்கிரார்கள்.உங்களை போன்ற இரெண்டுங்கெட்டான்ககள் தான் கூப்பாடு போடுகிறார்கள்.

')) said...

வாழ்க உங்க சமூக சிந்தனை, கெடுவான் கேடு நினைப்பான்னு உங்களுக்கு எல்லாம் சொல்லிக்கொடுக்கல போலும். கருப்பு பணத்தை ஒழிக்க துப்பு கெட்ட பயலுகளுக்கு எகத்தாளத்த பாருங்க. இன்னும் இதே பாணியில ஊழலையும் சமூக அவலங்களையும் ஒழிக்க சொல்லுங்க உங்க துக்ளக் மோடிய...........யாருப்பா அங்க நல்லவன் வரான் சொம்பை தூக்கி உள்ள வையுங்கப்பா.........

பசுமாட்டை பற்றிய கட்டுரை பரிட்ச்சையில எழுத சொன்னா, தென்னைமர கட்டுரைய எழுதி அதுல தான் இந்த பசுமாட்டை கட்டி இருந்தார்கள் என்று சொல்லி முழு பதிப்பெண்ண கொடுங்கன்னு ஒரு 5ஆம் வகுப்பு சிறுவன் சொன்னானம் அந்த கதையா இருக்குது துக்ளக் மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை.........