Thursday, December 29, 2016

மோடியையும் அவரது அரசையும் கேலி பேசும் ப சிதம்பரத்தை வன்மையாக கண்டிப்போம்

என்னமோ மோடி கையாலாகதவர் போல் சித்தரித்து பேட்டியளித்து வருகிறார் ப சிதம்பரம்.

சமீபத்தில் ஒரே மாதிரியான கேள்விகளுக்கு ஒரே மாதிரியான பதிலை திரும்ப திரும்ப தமிழில் இருக்கும் ஊடகங்களுக்கு கேள்வி பதிலாக அளித்து வருகிறார் ப சிதம்பரம்.

சிதம்பரம் சிலாக்கித்து சொல்லும் செய்திகளுல் உள் குத்துகள் இவைகள்

1) மோடிக்கோ மோடி அரசுக்குகோ திட்டமிடல் என்றால் என்ன என்றே தெரியாது என்று இந்த செல்லா நோட்டு விவகாரத்தில் காட்டி இருக்கிறார்கள் என்று பொருள் பட மிகவும் நக்கலாக பதிலுரைக்கிறார், இதிலே பாரத பிரதமரை நான் நக்கல் செய்யமாட்டேன் என்று முகவுரை வேறு

2) மோடியும் மோடி அரசும் மூச்சுக்கு 300 தடவை பொய் சொல்கிறார்கள், அவர்கள் சொல்லும் எதையும் நம்புவதற்கு இல்லை என்று சொல்கிறார்.

3) மோடியும் மோடி அரசும் வெறும் வசனம் மட்டுமே பேசுபவர்கள் அவர்களுக்கு செயல் எதுவும் செய்ய துப்பு கெட்டவர்கள் என்றும், உதாரணமாக இந்த செல்லா நோட்டு விவகாரத்தில் கருப்பு பணம் ஒழியும் என்று சொன்னார்கள், எங்கே கருப்பு பணம் என்று நாங்களும் மக்களோடு சேர்ந்து கேட்கையில், இல்லை இது ஊழலை ஒழிக்க என்று சொன்னார்கள். புது நோட்டிலேயே இலஞ்சபணம் பிடிப்பட்டதே என்று சொன்னதும் பணமில்லா வர்த்தகம் என்று சொல்கிறார்கள் என்று பொய்யான புகார்களை அடுக்குகிறார்.

4) 50 நாளில் இந்த இடர்பாடுகள் நீங்கவில்லை என்றால் என்னை தீயில் இட்டு கொளுத்துங்கள் என்று பெரும் நம்பிக்கையில் மோடி சொன்னதை அப்படி செய்யலாமா என்று கேட்க்காது தான் சொச்சம் மற்றபடி சுற்றி வளைத்து அங்கே கொண்டு வந்து விடுகிறார்

5) மோடிக்கும் மோடி அரசுக்கும் கருப்பு பணம் என்றால் என்ன என்றே தெரியவில்லை என்று வேறு குறிப்பிடுகிறார், கருப்பு பணம் என்றால் என்ன என்றே தெரியாமல் எப்படி கருப்பு பணத்தை ஒழிப்பார்கள் என்று வேற நக்கல் பேசுகிறார்.

6) 100ரூ பொருளை நான் எதற்கு 102ரூக்கு வாங்கனும் என்று வேற வியாக்கானம் பேசுகிறார், மக்கள் இப்போது 10ரூ சில்லரையை கூட கேட்டு வாங்குவது இல்லை என்று ப சிதம்பரத்திற்கு தெரியாமல் போனது ஏனோ, மோடி கூப்பிட்டு தான் விளக்கனும் போலும்.

7) நாட்டில் கள்ளப்பணம் எப்படி உருவாகுகிறது என்று எளிமையாக சொல்கிறேன் என்று மருத்துவ கல்லூரி, மருத்துவர்கள் மற்றும் வக்கீல்களை உதாரணமாக சொல்கிறார்.

8) இது வரையில் சும்மா கொஞ்சோண்டு கிடைத்த 500 கோடி புது நோட்டுக்களை என்னவோ மோடியும் மோடி அரசும் கொண்டு போய் அந்த பிடி பட்டவர்களிடம் கொடுத்ததை போல் சித்தரித்து பேசுகின்றார்.

9) மோடியும் மோடி அரசும் நாட்டின் எல்லையில் மட்டும் பாதுகாப்பு வீரர்கள் நின்றால் பத்தாது வீட்டில் இருக்கும் அனைவரும் நாட்டின் காவலர்கள் ஆகவேண்டும் என்ற உண்ணதமான நோக்கில் பணம் எடுக்கின்றேன் என்ற போர்வையில் உள் நாட்டை பாதுகாக்கும் பணியில் இலவசமாக தாய் நாட்டுற்கு கடமையாற்றுபவர்களை, பணம் இல்லாமல் மக்கள் வங்கி வங்கியா பணம் தேடி அலைகிறார்கள் என்று கேலி செய்கிறார்.

10) ப சிதம்பரத்திற்கே ஒரு சின்ன அளவிற்கு தான் 2000 நோட்டு கிடைத்ததாம், பிறகு எப்படி அடுத்தவர்களுக்கு கிடைக்கும் என்று பொய் சொல்லுகிறார். முன்னமே சொன்னது போல் அரசு அதிகாரிகளே 500 கோடிகளுக்கு புது பணம் வைத்து இருக்கும் போது ஒரு அரசியல்வாதி அதுவும் நிதியமைச்சராக இருந்தவர் அவருக்கா தேவை என்றால் பணம் பெற்றுக்கொள்ள தெரியாது. யாரை ஏமாற்றுகிறீர்கள் சிதம்பரம் விளக்கம் சொல்லுங்கள்.

11) இவைகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல் இந்த பண தட்டுப்பாடு நீங்க இன்னனும் 6 மாதம் ஆகுமாம், பொருத்து இருந்து பாருங்கள் சிதம்பரம். மோடியும் மோடி அரசும் சனவரி 1 கூட இல்லை 31லேயே இந்த பண தட்டுப்பாட்டை ஓர் இரவில் நீக்குகிறார்களா இல்லையா என்று பாருங்கள்.

12) வங்கி கணக்கில் பணம் இருக்கிறது பணம் எடுக்கப்போனால் தர மறுக்கிறார்கள் இது சட்ட மீறல் என்றும் நக்கலடிகிறார்கள். போகிற போக்கில் நாட்டின் எல்லையில் இராணுவ வீரர்களை குளிரில் நிறுத்தி துன்புறுத்துகிறார் மோடியும் மோடி அரசும் என்று சொல்வார் போல. எல்லையில் இருக்கும் இராணுவ வீரர்கள் எப்படி கேள்வி கேட்க்க கூடாதோ அதே போல் மோடி அரசில் நாட்டில் வாழும் யாரும் கேள்வி கேட்க்க கூடாது என்ற அடிப்படை கூட புரியாத மனிதர் இந்த ப சிதம்பரம்

போங்கையா போய் வேறு வேலை ஏதாவது இருந்தால் பாருங்கள்.

பாசகவின் செய்தி தொடர்பாளர்கள் சொன்னது போல் இன்னும் 100 ஆண்டு காலம் மட்டும் இல்லை இந்த பூமி அழியும் வரை நிரந்தர பிரதமர் மோடி தான். ஏன் நாளை காங்கிரசே ஆட்சிக்கு வந்தாலும் மோடி தான் பிரதமர் அவர் சொல்வது தான் சட்டம். இந்த சாதாரண செய்தியை கூட புரிந்து கொள்ள பொருத்துக்கொள முடியாத மனிதர் ஐயா நீங்கள்........என்ன அரசியல்வாதியோ நீங்கள்..........

4 comments:

')) said...

நான் கண்டிப்பாக 10 ரூபா
சில்லரையை கேட்டு்வாங்குவேன்...

Anonymous said...

Idhuku per thanga, vanja igazchi.

Br Christo

')) said...

தாய் நாட்டிற்காக அந்த 10 ரூபாயைக்கூட விட்டு தரமாட்டீர்களா அருண், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

')) said...

கிரிட்டோவையும் வன்மையாக கண்டிப்போம். பாருங்கள் பாசகவின் பொருளாதார நிபுணர் உர்சித்து பட்டேல் சொல்லி இருக்கிறார், இனி இந்தியாவில் 1 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் அதை 1ரூ + விற்பனை வரி +மின்னனு கட்டணம் + வங்கி ஏடியம் கட்டணம் + மாலில் பார்க்கிங்கு கட்டணம் என்று தான் எதிர்கால இந்தியாவில் வர்த்தகம் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

நல்ல உணவை வீட்டிலே சாப்பிட்டு விட்டு வீட்டிலே அமர்ந்துக்கொண்டு தொகா பார்த்து வயிறு வளர்க்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் காலை மாலை மற்றும் மதிய உடல் பயிற்சியோ அல்லது யோகமோ செய்வது இல்லை. பிறகு உங்களது உடல் நலம் எப்படி பேணமுடியும்.

ஆகவே அண்ணாச்சி கடையிலும் வீட்டு வாசலுக்கு வந்தி கீரை விற்கும் பெண்மணியிடம் வாங்கி சோம்பேரியாக இருந்தது எல்லாம் போதும். வீட்டை விட்டு வெளியே வாருங்கள். மால்களை பாருங்கள், உங்களுக்காக அங்கே எவ்வளவு பார்க்கிங் வசதிகளும், குளிரூட்டமும் உள்ளே வரும் நபர்களை வெடிகுண்டு கொண்டு வருகிறார்களா என கண்டறிய விசைகளும் ஆட்களும் என்று எவ்வளவு பொருட்செலவில் பெரிய அண்ணாச்சி மால் வைத்து இருக்கிறார் வந்து பாருங்கள்.

இனிமேல் பப்பர மிட்டாய் வாங்கி தின்றாலும் அது பெரிய அண்ணாச்சி மால்களில் தான் வாங்கி திங்கோனும் ஆமாம்.

இனிமேல் அரிசி சாதம், கோதுமை சப்பாத்தி எல்லாம் சாப்பிடுவதும் எதிர்காலத்தில் தேச துரோகமாக அறிவிக்க உள்ளோம். ரோம்ப அடம்பிடிதீர்கள் என்றால் அரிசியோ கோதுமையோ விளைவிப்பதோ விற்பதோ தேச துரோக செயல் என்று அவசர சட்டம் கூட வரும் அப்பு. பாத்து நடந்துகோங்க அம்புட்டு தான் சொல்லிபுட்டோம்.

இனி இந்தியாவில் எந்த பொருள் வாங்கினாலும் பொருள் விலை + விற்பனை வரி +மின்னனு கட்டணம் + வங்கி ஏடியம் கட்டணம் + மாலில் பார்க்கிங்கு கட்டணம் என்று தான் வாங்கனும். முடியாது என்றால் பாக்கிட்தானத்திற்கு போங்கள் வேறு எங்காவது போனீர்கள் என்றால் பிடித்துக்கொண்டு வந்து சிறையில் அடைப்போம் தேசதுரோகிகளா......

தங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி சகோ