Sunday, April 29, 2018

ஒரு தலை ராகம் - இன்றைய இளைஞர்கள் பார்த்தால் என்ன சொல்வார்கள்

ஒரு தலை ராகம் படத்தை இன்றைய இளைஞர்கள் பார்த்தால் என்ன சொல்வார்கள். புறனாணூற்று காதல் என்று தான் சொல்வார்கள்.

பெண்களை விடுங்கள் ஆண்களே தனக்கு உன்மேல் விருப்பம் காதல் என்று சொல்ல தயங்கிய காலத்தில் எடுக்கப்படம்.

ஒரு தலை ராகத்தில் பாடலிலும், இலைமறை காயாக தான் அவனின் காதல் வெளிப்பாடுகளை காட்டுவான். அதுவும் பணக்கார அப்பாவின் இரண்டாம் மனைவியின் மகன் என்ற தயக்கம் அவனுக்கு, அவளுக்கோ ஓடிப்போன அப்பா தனியாக தாய் வளர்க்கும் இரண்டு பெண்களில் ஒருவர் என்ற தயக்கம் படம் திரைக்கதையில் ஆங்காங்கே குறுக்கிடுவது கவிதையாய் அமைந்த படம்.

கோடை விடுமுறையில் கோவிலுக்கு செல்வதும் அங்கே இவனும் அவளும் மனதிலே பேசிக்கொள்ளும் காட்சிகளும் கவிதையே.....

அது அந்த காலம், இது குழந்தை பாடும் தாலாட்டு போல் தரமான பாடல்களும் இசையும் வந்துக்கொண்டிருந்த காலம். என்ன ஒரு பாடல் இன்றைக்கு நினைத்தால் கூட ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு இயலாமையை காட்ட அத்தனை இயலா காரியங்களையும் தொகுத்து எழுதிய கவிதையாய் அந்த பாடல்.

ஆருதலாக பேசும் தோழி எத்தனை பேருக்கு கிடைப்பார்கள், அதுவும் உடல் நிலை சரி இல்லை என்றது வீடு வரை வந்து விசாரித்துவிட்டு போகும் தோழி என்று அருமையான ஒரு பாத்திரம். புது புத்தகம் என்றதும் உரிமையுடன் வாங்கி பெயரை எழுதித்தரும் தோழியாய்......

கல்லூரியின் கடைசி நாள் அனேகமாக அனைவரின் மன நிலையும் அப்படி தான் இருந்திருக்கும். அது வரையில் எப்போது முடியும் வீட்டிற்கு போகலாம் என்று இருக்கும் மனது அன்றைக்கு இனிமே அவ்வளவு தான் என்று தெரியும் போது படும் வேதனையை வெளிப்படுத்த வார்த்தைகளே கிடையாது........

என்ன ஆனாலும் பரவாயில்லை என்று கடைசியில் தைரியமாக காதலை தெரிவிக்க வரும் அவள் போன்ற தைரியமான பெண்கள் என்றைக்கும் உண்டு என்று அன்றைக்கே காட்டிய படம்.

அவளின் மனது என்ன என்று ஆழகாக வருணித்து பாடும் வாசமில்ல மலரிது பாடல் என்னே ஒரு பொருத்தம்.

மயிலாடுதுறையின் பக்கத்தில் இருக்கும் வயல்வெளி, செம்மனார்கோவுல், மணல்மேடு மற்றும் பூம்புகார் இடங்களில் அழகாக படமாக்கி இருப்பார் பாடல்களை.

ஆங்காங்கே காவிரி நீர் வாய்க்காலில் பாசனத்திற்கு பாய்வதை பார்க்கும் போது ஏக்கமாகவும் இருக்கிறது.....

உண்மை தான் அந்த இரயிலும் படத்தின் ஒரு பாத்திரம் தான், பார்க்கும் பெண்களின் மீது எல்லாம் காமப்பார்வையும் வக்கிர பேச்சுக்களையும் வீசும் இரவீந்திரனை சென்று முகதிலே ஒரு விடு விட்டால் என்ன என்று தான் இருந்தது.

ஒரு பெண்ணை விரும்புகின்றேன் என்று சொல்ல இரண்டு ஆண்டுகள் ஆனது அப்போது, ஆனால் இன்றோ நிலைமையே வேறு என்று படத்திலும் கதைகளிலும் பார்க்கும் போது அப்படியா என்று இருக்கிறது...........

0 comments: