Thursday, April 5, 2018

எப்போது எல்லாம் தமிழகம் போராடுகின்றதோ அப்போது எல்லாம் இன்ப சுற்றுலா செல்லும் பாசக

முன்பெல்லாம் மறைமுகமகாக இன்ப சுற்றுலாவுக்கு செல்லும் பாசக இப்போது வெளிப்படையாகவே இன்ப சுற்றுலா சென்றுள்ளது.

சல்லிக்கட்டு போராட்டத்தின் போது இதே பாணியில் எங்கே இருக்கிறார்கள் பாசகவினர் என்று சல்லடை இட்டு சளித்து பார்க்கும் அளவிற்கு பதுங்கி இருந்தார்கள் பாசகவினர். அந்த நிலையிலும் எச்ச சர்மா தனது செய்திகளில் தமிழர்கள் பாசகவை தேர்ந்தெடுத்து இருந்தால் இன்னேரம் சல்லிக்கட்டு காளைகள் துள்ளி ஓடி இருக்கும் என்று அறிக்கை விட்டார். பிறகு மெல்ல தமிழக அரசு தான் இப்படி செய்ய வேண்டும் அப்படி செய்ய வேண்டும் என்றும் அறிக்கைகள் விட்டுக்கொண்டு இருந்தார்.

இந்த கரளோபகர அறிக்கைகளுக்கு நடுவே சல்லிக்கட்டு பறிபோக காரணம் காங்கிரசு மற்றும் திமுக தான் காரணம் என்ற பரப்புரை தான் மேலோங்கி இருந்ததே தவிர பிரச்சணையை தீர்க்க ஒரு வழியையோ அல்லது அவர்களது மைய அரசை நாடி ஒரு தீர்வை எட்ட ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.

ஆண்டாள் பிரச்சணை என்றதும் தமிழகத்தின் மூலை முடுக்கு எல்லாம் 'இந்துகளை' கொண்டு வந்து நிறுத்தி சோடா பாட்டிலை வீசி கலவரம் செய்வோம் என்று முழங்கியும் கூட்டத்தை கூட்டியும் காட்டி போராடிய பாசக இன்று இன்ப சுற்றுலா கிளம்பி சென்றுள்ளது.

அன்றைக்கு 'இந்துகள்' சோடாபாட்டிலை வீசினால் அது மக்களின் உரிமையை நிலை நாட்ட நடக்கும் போராட்டம் ஆனால் இன்றைக்கு தமிழகம் போராடினால் வீணாக மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள், அரசியல் இலாபம் அடைய பார்க்கிறார்கள், அறிவில்லாமல் போராடுகிறார்கள், தண்ணீர் வேண்டுமா காவிரி வேண்டுமா, மேலாண்மை வாரியமா அல்லது அதிகாரமே இல்லாத குழுவா, ஆங்கில சொல் திட்டம் என்ற சொல்லின் நீதிமன்ற பார்வை என்ன, தமிழக தலைவர்கள் சுயலாபம் ஈட்ட பார்க்கிறார்கள், தமிழகத்தில் பாசக ஆட்சியாக இருந்து இருந்தால் இன்னேரம் எல்லோர் வீட்டிலும் காவிரி நீர் பொட்டலம் கட்டி வீட்டில் கொண்டு வந்து கொடுத்து இருப்போம், உச்ச நீதிமன்றமே சொல்லிடிச்சு, சீதராமையாவும் காங்கிரசும் தான் காரணம், 44 ஆண்டுகள் பொருத்த தமிழகம் இன்னும் 40 ஆண்டுகாலம் பொருத்தால் என்ன பெரிதாக ஆகிவிட போகின்றது, தண்ணீர் இல்லாமல் பட்டு போன காவிரி டெல்டா இடங்களில் கெயில் குழாய்களை புதைத்து அதாணிக்கு பணம் வர வழி செய்தால் உங்களுக்கு ஏன் கோபம் வருகின்றது, தமிழக மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று தான் தேனி மாவட்டத்தை பாலைவனமாக மாற்ற உள்ளோம், என்று எல்லாம் எகத்தாளமாக அறிக்கை விடுகிறார்கள் பாசகவினர்.

இப்போ தெரிகின்றதா பாசக அவருக்காவும் எவைகளுக்காகவும் மட்டும் போராட்டம் நடத்தும் என்று. இந்த கட்சி தமிழக மக்களுக்கான கட்சியாம், 'இந்துகள்' என்று இவர்கள் சொல்வது போல் இனிமே 'தமிழர்கள்' என்று தான் எழுதனும் போல.

மதியிலும் மா நிலத்திலும் இந்த அராசக அரக்க பாசகவிற்கே வாக்களியுங்கள் மக்க வாக்களியுங்கோ............

0 comments: