Thursday, June 29, 2017

வனமகன் - George of the Jungle (1997) -- சரக்கு தீர்ந்த இசையின் கடைசி சொட்டில் வந்த படம்

படம் ஒரு வழி தவறிய காட்டுவாசியையும் சொந்தங்களை தொலைத்த ஒரு நகரவாசியையும் பற்றிய படமாம்.

நல்ல வேளை காட்டுவாசி என்றால் தேன் எடுப்பது, மீன் பிடிப்பது, இரவில் கூட்டமாக தீ மூட்டி ஆட்டம் ஆடுவது என்று மட்டும் நிறுத்திவிட்டார்கள். தேனும் தினைமாவும் தின்பது, ஒரு பெரிய பாத்திரத்தில் அந்த வழியாக வரும் மனிதர்களை எல்லாம் போட்டு உயிருடன் கொதிக்க வைத்து கை கால்களை பிய்த்து திங்கும்படி காட்டவில்லை.

தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை ஆங்கிலப்படம் அவதாரிலும் இதையேத்தான் காட்டினார்கள். இந்த காட்டுவாசிகள் உண்மையில் வாழ்க்கையில் என்ன தான் செய்வார்கள் யாராவது ஒருவராவது உண்மையை பதிவு செய்யுங்கப்பா....

கமலின் மகள் இன்னும் ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னால் இருப்பது போல் ஒரு பெண் தான் அந்த நகரவாசி. பெரும் பணக்காரர், எப்படி பட்ட பணக்காரர் தெரியுமா தனது பிறந்த நாளை போரா போரா தீவிலும், காலை விருந்தை சப்பான் நாட்டு உணவில் தொடங்கி இரவு உணவு அமெரிக்க உணவு வரை சாப்பிட்டு பழகிய பணக்காரியாம்.

வசந்த மாளிகைன்னு ஒரு படம் அதிலே ஒரு சமத்தானத்து சமையல் அறையையும் அனைவரும் அமர்ந்து சாப்பிடும் காட்சியையும் காட்டுவார்கள். எல்லாம் மிகையாக இருப்பதாக காட்டுவார்களே அன்றி இப்படி ஒரு பக்கித்தனமாக ஒரு காட்சியை பணக்கார வீடாக காட்டவில்லை. அதே சமயம் இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தில் கமல் Hotdogகை சாப்பிடக்கேட்பார் அதுவும் ஒரு ஓட்டலில் கேட்பார். அதுக்காக அந்தந்த உணவை எல்லாம் வீட்டில் சமைக்க சொல்லி யாரும் கேட்டது இல்லை சமைப்பதும் இல்லை.

இது எந்த ஊரோ இப்படி ஒரு நகரவாசி, அனேகமாக இயக்குனர் பணக்காரர்களை பார்த்து கூட இருக்கமாட்டார் போலும்.....

காட்டுவாசி கடைசிவரை ஒரு ஊமையை போல் காட்டியுள்ளார்கள்.....ஏன் இந்த குழப்பம்.....George of the Jungle (1997)கில் எழுதாக வசனங்களை எப்படி இரவி பேசுவார் அது தான் கடைசி வரை தொண்டை விக்கிகிச்சு

அந்த ஆங்கிலப்படத்தில் குரங்கு கிளி என்று ஏகப்பட்ட விலங்குகளின் மனக்குரல் கேட்க்கும் அதையே காட்டினால் அந்த படம் என்று கண்டுபிடித்துவிடுவீர்கள் என்று கதை களத்தை ஒரு பேராசை பிடித்த மனிதனின் கண்காணிப்புல் வளரும் அனாதை என்று காட்டிவிட்டார்கள்.

படத்தின் பாடல்கள் கார்கியாம் அவரை கூப்பிட்டு வந்து தான் என்னப்பா அது டம் டம் டம் என்று பாடுகிறார்களே மகிழ்மதி பாதிப்பா என்று கேட்க வேண்டும்......

முதல் பாடல் அமெரிக்காவில் தற்பொழுது வானொலிகளில் சக்கை போடு போடும் பாட்டை அது இது என்று தமிழ் வார்த்தைகளை நிறப்பியபாடல், இரண்டாவது வசீகராவின் இன்னும் ஒரு வர்சன், மூன்றாவது பாடல் முதல் பாடலை இருட்டில் எடுத்த பாடல் இசையும் காட்சியும் விளக்கனைத்த பாடல். நான்காவது பாடல் நானே வருவேன் அங்கும் இங்கும் மெட்டில் மறு உருவாக்கம். இந்த பாடலின் நானே வருவேன் சரணம் அனைத்து இடங்களிலும் வந்து வந்து போகின்றது, ஏன் வசீகராவை போட வேண்டியது தானே.....

படம் முடிந்து வரும் போது எந்தப்பாட்டு வரிகளிலும் ஒன்று கூட நினைவில் இல்லாத அளவிற்கு ஒரு வரட்சி இந்த படத்தில். இனியும் மக்கள் ஆரிசு செயராசை சென்று இசையை கேட்கிறார் என்றால்........என்ன சொல்வது.....அதுவும் இந்த படதிற்கு பின்னணி இசையை பற்றி எழுதியே ஆகவேண்டும். என்ன ஒரு மேதாவி தனம், நகரம் வீடு என்றால் புரூ காப்பி, லியோ காப்பி விளம்பரத்தில் வரும் இசையை அப்படியே சப்பிடும் இடம் சமையலரை எல்லாம் வரும் காட்சியில் ஒலிக்கவிடுகிறார். காட்டு வாசி நகரவாசி வீட்டில் வரும் காட்சிக்கு எல்லாம் ஒரு அற்பமான மட்டமான ஒரு இசை அதை நன்றாக இருப்பதாக யாரோ சொன்னார்கள் போலும் அதனால் எல்லா இடங்களிலும் அதே இசையை மறுபடியும் மறுபடியும் போட்டுள்ளார் சகிக்கவில்லை.

செயம் இரவிக்கும் அந்த புது பொண்ணுக்கும் இந்த George of the Jungle (1997) ஆங்கிலப்படத்திற்கு தான் குத்தாட்டம் போடப்போகின்றோம் என்று தெரியாது போலும். அப்படி இருந்திருந்தா கொஞ்சம் அடக்கியே வாசித்து இருப்பார்கள். இன்னும் இது போல் நிறைய ஆங்கிலப்படம் இருக்கிறது எடுத்து அந்தமான் போராளி இலங்கை போராளி என்று எல்லாம் புருடா விடுங்கள் எவன் கேட்க்கப் போகிறார்கள்.....

0 comments: