Friday, June 23, 2017

GSTயால் மக்களுக்கு நன்மையா தீமையா -- விட்டில் பூச்சுகளாய்

இந்த வரிவிதிப்புக்கு எவ்வளவு அழகாக திட்டம் தீட்டி உங்கள் ஊரில் இருக்கும் அண்ணாச்சி கடைக்காரர் உங்களை விட அதிகம் சம்பாதிக்கிறார். கருப்பு பணமாக சம்பாதித்து அவர் அனுபவிக்கும் வசதிகளை பாரீர் என்று வீர வசனங்கள் பேசியது போல் இப்போது இந்த வரிவிதிப்பை அழகாக பேசி ஏமாற்றி இருக்கிறார்கள்.


பாசக அரசின் திட்டங்கள் அனைத்தும் முதளாலிகளின் கொள்ளை இலாபத்திற்கு தானே அன்று மக்களின் வசதிக்கு என்றும் கிடையாது.


இதை பக்கம் பக்கமாக எழுதி நிருபிக்க வேண்டியது இல்லை இங்கே சுருக்கமாக பார்ப்போம்........


இந்தியா சுதந்திரம் அடந்ததில் இருந்து சென்ற முறை ஆட்சியை பாசக அரசு பிடிக்கும் வரையில் பெட்ரோல் மீதான வரியை ஒரு கணக்கில் சேர்த்து வைத்து அந்த கணக்கில் வரும் வட்டியை வைத்துக்கொண்டு, டீசல் மற்றும் மண்ணெணை விலையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்துதார்கள் அன்றைய அரசு.


எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் விலைவாசி ஒரு சின்ன ஏற்றத்திற்கு மேல் ஏற மறுக்கிறதே என்று அன்றைய பாசகவின் ஆயோக்கியர்கள் அமர்ந்து யோசித்ததில் அவர்கள் கண்டுபிடித்தது. இந்த டீசல் மானியம் எல்லா அதார பொருளின் விலையையும் கட்டுக்கோபில் வைத்துள்ளது. அப்படி டீசல் விலையை உடைக்க வேண்டும் என்றால், இந்த மானியத்தை உடைக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று பார்த்து ஒரு சதி திட்டத்தை தீட்டினார்கள்......


அது தான் இந்த நாற்கர சாலை, இந்த சாலையை அமைப்பதின் மூலம் இன்றைக்கு நீங்கள் பலனை எதிர்பார்க்க முடியாது. 10 ஆண்டுகளுக்கு பிறகு பாருங்கள் இந்திய பொருளாதாரம் எப்படி பறக்கிறது என்று பாருங்கள் என்று அன்றைய பாசக அரசு மார் தட்டி சோதிடம் கூறியது.


இந்த டீசல் மானியத்திற்காக வைத்து இருந்த பணத்தை காலி செய்து நாற்கர சாலையும் வந்தாகிவிட்டது. 10 ஆண்டுகளும் கடந்துவிடாச்சு, ஆனால் நிலைமை என்ன, அந்த நாற்கர சாலையை பராமரிக்க என்று உங்களிடமும் என்னிடமும் ஒவ்வொரு முறை கடக்கும் போதும் கப்பம் வசூலிக்கிறார்கள்.


 நீங்களும் நானும் அன்றைக்கு செலவு செஞ்சதை விட பன்மடங்கு இப்போது செலவு செய்கின்றோம், இந்த நாற்கர சாலையினால் நமக்கு செலவு தான் அதிகமானதே அன்றி எந்த பலனும் விளையவில்லை. அப்படி இருக்க இந்த சாலை எதற்கு ஏன் என்ற கேள்விக்கு பதில், அன்றைக்கு இலட்சங்களில் வியாபாரம் செய்த முலளாலிகள் இன்றைக்கு கோடிகளில் வியாபாரம் செய்கிறர். கோடிகளில் இலாபம் பார்த்தவர்கள் இன்றைக்கு இலட்சம் கோடிகளில் இலாபம் பார்க்கிறார்கள்.


அப்படியே நட்டம் வந்தாலும் அதை வராக்கடனில் வைத்து சரி செய்யத்தான் நமது பணத்தை கட்டாயம் வங்கிகளில் வைத்துள்ளார்களே.........


எப்படி அந்த நாற்கர சாலைகளால் சாமானியனுக்கு எந்த பலனும் இல்லாமல் சுமை ஏறியதோ அதே போல் இந்த வரிவிதிப்பால் சுமை தான் அதிகமாகுமே தவிர எந்த இலாபமும் இல்லை. அப்போ யாருக்கு தான் பலன் என்றால் இந்த வியாபாரம் செய்தால் இவ்வளவு வரி என்று இருக்கிறது முதளலிகளுக்கு அதை இனி அவர்கள் அவ்வளவும் கட்டமாட்டார்கள் மேலும் குறைவான வரியை கட்டினால் மட்டும் போதும்.


அப்போ மீதி இருக்கும் வரியை எல்லாம் யார் கட்டுவார்கள்....அது தான் நீங்கள் இருக்கிறீர்களே........


உங்களுக்காக மானிய விலையில் டீசலும் மண்ணெணையும் கிடைக்க வைத்து இருந்த பணத்தை எடுத்து வீனாக்கி அதனால் ஏற்படும் சுமையை சாதாரண மக்களின் மீது சுமத்தி முதளாலிகள் இன்னும் இலகுவாக வியாபாரம் செய்ய ஏற்பாடுகள் செய்ததை போல் இன்றைகு இந்த GST வரிவிதிப்பு.


என்ன பாதிப்புன்னுனே தெரியாம இந்த மக்கள் எல்லாம் இனிப்பு கொடுத்து எல்லையில் இராணுவ வீரன் வரிகட்டுறான் ஒனக்கு என்ன என்று ஏக வசனம் பேசுது.......


சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும், உள்ளே இருப்பது எல்லாம் பிரிவினைவாதமும் வக்கிரமும் அது தான் வித விதமான பெயர்களில் சர்க்கரை தடவிய நச்சாக வெளிவருகின்றது. விட்டில் பூச்சுக்களாய் மக்கள் ஐயோ பாவம் என்று இருந்துவிட முடியவில்லை, இந்த விட்டில் பூச்சிக்களால் நாமும் தானே அவதியுறுகின்றோம்...........

2 comments:

Anonymous said...

These shoes can be found in all parts of the world and can be
found at leading stockists and distributors.

Anonymous said...

That does not mean anyone else loves your dogs.