Monday, June 12, 2017

பிளாசுடிக் அரிசி மட்டும் ஏன், பிளாசுடிக் பிட்சா, பிளாசுடிக் பர்கர்கள் ஏன் வருவது இல்லை

அது ஏன் எப்பவும் ஏழைகள் சாப்பிடும் உணவில் மட்டும் கலப்படம் அவ்வளவு எளிதாகவும் எல்லைகளை எல்லாம் தாண்டும் பரப்பளவிற்கு வருகின்றது.

பணக்காரர்கள் பயன்படுத்தும் பீட்சா, பர்கர், பாசுதா, வடகத்டியர்கள் பெரிதும் பயன்படுத்தும் கோதுமை என்று எல்லாம் இல்லாமல் தென்னகத்து எளிய மக்களின் அதிக பயன்பாட்டில் இருக்கும் அரிசியில் வந்து இறங்கி இருக்கிறது கலப்படம்.

2, 3 வாரங்களுக்கு முன்பு வாட்சப்பில் தமிழகத்து இட்லிக்கு சிறந்த சிற்றுண்டி என்று உலக அங்கிகாரம் கிடத்துள்ளது என்ற செய்தி பரவிய சுவடு கூட இன்னும் மறையவில்லை அதுக்குள்ளாகவே கலப்படம் வந்திறங்கியாச்சு.

இந்த கலப்பட அரிசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா இல்லை சீனாவில் இருந்து இறக்குமதியானதா என்று ஆராய்ந்து சொல்ல கடமைப்பட்டவர்கள் ஆட்சியர்கள்.

 நன்றாக கவனித்தால் அரியை உட்கொள்ளும் சீனா, சப்பான், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசிய, பிலிபைன்சு, வியட்னாம் வரை எந்த கலப்படமும் இருப்பதாக செய்தி வரவில்லை. மாறாக உலகிலேயே மிக சிறந்து விளங்கும் வல்லரசு இந்தியா அதுவும் பிரிவினைவாத பாசக அரசு ஆட்சி செய்யும் இந்தியாவில் இந்தி பேசாத மாநிலங்களில் உண்ணும் உணவில் மட்டும் கலப்படம் வந்தது எப்படி. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத போது இந்தியாவில் மட்டும் நுழைந்து எப்படி என்று இந்த பிரிவினைவாத அரசு தான் விளக்க வேண்டும். விளக்குமா இல்லை இது ஏழைகளின் பிரச்சனை நாம் மல்லையாக்களை கவனிக்க போவோம் என்று செல்கிறார்களா என்று பார்ப்போம்.

2 comments:

')) said...

குழப்பம் செய்து கொண்டே இருப்பார்கள்...

')) said...

குழப்பம் மட்டுமா செய்கிறார்கள், நாட்டில் அறிவிக்கப்படாத ஒரு பயங்கர நிலை நலவி வருகின்றது. ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலம் போகவே பயமா இருக்கு. அதுவும் வடக்கு என்றால் சுத்தம். நீ இல்லனா உனத்து அம்மாவாக இருக்கும் என்று ஆட்டுக்குட்டியிடம் ஓநாய் சொன்ன கதையாத்தான் இருக்கும் போல.

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை எனது தளத்தில் பார்க்கின்றேன், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே