Wednesday, June 14, 2017

பார்த்திபனின் புதிய பாதையை - Beauty and the Beastஆக Disney தயாரித்து வெளியிட்டுள்ளது

1989ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய புதிய பாதை படத்தை அப்படியே அப்பட்டமாக காப்பி அடித்து ஆங்கிலத்தில் Beauty and the Beast படமாக எடுத்துள்ளார்கள்.

தமிழில் வந்த கதையை எப்படி அழகாக ஆங்கிலத்தில் மாற்றி இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

தமிழில் பார்த்திபன் ஒரு குட்டி சுவரான ஒரு வீட்டில் குடி இருப்பதாக காட்டுவார்கள், ஆங்கிலத்தில் அதுவே பாழடைந்த ஒரு பழைய காலத்து அரண்மனையாக காட்டிவிட்டார்கள்.

படத்தின் நாயகனின் அம்மா இல்லாமல் ஒரு வஞ்சிக்கப்பட்ட அப்பாவால் மிகவும் தற்பெருமையும், பண கர்வமும் கொண்ட ஆணாக வளர்ந்தவனாக ஆங்கிலத்தில் காட்டியுள்ளார்கள்.

அதாவது பெற்றுவிட்டு குப்பை தொட்டியில் எறியப்பட்ட பார்த்திபனின் வாழ்க்கையை ஒரு அரச குடும்ப கதையாக மாற்றிவிட்டார்கள்.

பார்த்திபனுடன் எப்பவும் ஒரு சின்ன பையன் அதிக பிரசங்கி தனமாக பேசிக்கொண்டு சம்பந்தமே இல்லாமல் வருவான். அவனது உருவில் மெழுகுதிரி தாங்கியாக ஒரு பாத்திரத்தை படைத்துவிட்டார்கள் ஆங்கிலத்தில்.

பார்த்திபனின் வீட்டிற்கு அருகில் இருக்கும் மனோரமாவை போல் ஒரு டீ குடுவை பாத்திரமாக ஆங்கிலத்தில் படைத்துள்ளார்கள்.

சீதாவின் அப்பா ஒரு பெண்பித்தர், தனது மகளின் பிறந்த நாளுக்கு ஒரு சித்தியை பரிசாக தருவதாக காட்டி இருப்பார்கள்.

இதையே ஆங்கிலத்தில் நாயகியின் அம்மா ஒரு தியாகியாகவும் அவளின் அப்பாவிற்காக ஒரு அரக்கனை கூட திருமணம் செய்ய தயாராக இருக்கும் ஒரு பாத்திரமாக மாற்றியுள்ளார்கள்.

சீதாவின் மேல் நாசருக்கு ஒரு கண் அவளை கொண்டுவந்து நாசரிடம் விடு என்று சொல்வதில் தகறாறு துவங்கும்.

ஆங்கிலத்திலோ ஒரு தற்பெருமை மற்றும் கிறுக்கு பிடித்த இராணுவ வீரனுக்கு நாயகியின் மேல் ஒரு கண், அவள் இல்லாமல் தன்னால் உயிர் வாழமுடியாது என்றது போல் நடிப்பவனாக காட்டியுள்ளார்கள். அவர்கள் கூடி குடி கூத்தடிக்கும் இடத்தில் தனது மகளை காப்பாற்றும் படி நாயகியின் தந்தை விளிப்பதில் துவன்ப்க்கும் தகறாறு.

ஆங்கிலத்தில் அரக்கனாக இருக்கும் அவன் அவளை தன் தந்தையை காப்பாற்ற போக வேண்டும் என்று செல்லும் போது அவளை போகவிடும் மனிதனாக நடந்து கொள்கின்றான் தமிழில் பேட்டை ரௌடியாக இருக்கும் பார்த்திபன் சீதாவை வீட்டில் வைத்துக்கொண்டு அவளுக்காக உணவு வாங்குவதும் வீடு கட்டுவதாகவும் காட்டியுள்ளார்கள்.

அரக்கனின் அரண்மனையில் இருந்து தப்பித்த நாயகியை ஓநாய் கூட்டம் தாக்கும் போது குறுக்கே நின்று காப்பாற்றும் காட்சிகளை பார்த்திபன் சீதாவிற்காக உணவு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரும் வழியில் கத்தியால் குத்தும் காட்சியை மாற்றி எடுத்து இருக்கிறார்கள்.

 நாசரின் கூட்டம் பார்த்திபனை தாக்கி கொல்ல நினைக்கும் இடத்தில் வரும் சண்டைகாட்சிகளை ஊர்மக்களை திரட்டி அந்த அரண்மனையை அழிக்க மக்களை கொண்டு அழிக்க நினைக்கும் காட்சிகளாக அழகாக மாற்றி எடுத்துள்ளார்கள்.

என்ன டிசுனி படம் எப்போதும் முடிக்கும் போது சுபமாக மட்டுமே முடிப்பார்கள் ஆகவே தமிழில் சீதா சாவதை போல் காட்டாமல் எல்லாம் சுபமாக முடிந்தது என்று காட்டிவிட்டார்கள்.

மகதீரா படத்தை பார்த்து இந்தியில் அனுமதியில்லாமல் படம் எடுத்தார்கள் என்று வழக்கு தொடுத்ததை போல் பார்த்திபனும் எனது படத்தை ஆங்கிலத்தில் என்னிடம் அனுமதி இல்லாமல் உருட்டிவிட்டார்கள் என்று வழக்கு தொடுக்கிறாரா என்று பார்ப்போம்.

ஆங்கிலத்தில் கதை திரைக்கதை வசனம் என்று போடாமல் திரைக்கதை அதுவும் அந்த கால கதையில் இருந்து எடுத்தாளப்பட்டது என்று மிகவும் கவனமாக போட்டு இருப்பதால் பார்த்திபனினால் வழக்கு தொடுக்கமுடியும் என்று தோன்றவில்லை.

2 comments:

Anonymous said...

Beauty and the Beast (French: La Belle et la Bête) is a traditional fairy tale written by French novelist Gabrielle-Suzanne Barbot de Villeneuve and published in 1740 in La Jeune Américaine et les contes marins (The Young American and Marine Tales).

')) said...

ஐயா/அம்மா நன்றி, ஆனால் இது வரை புதிய பாதை Beauty and the Beast கதையை தான் மாற்றி அமைத்துள்ளார் என்றது கூட தோன்றவில்லை ஆங்கில படத்தை பார்க்கும் வரையில்.

பார்த்திபனிடம் வேலை பார்த்த விக்ரமனின் முதல் படம் புது வசந்தம், அந்த படத்திற்கும் That thing you do இந்த படத்திற்கும் இதே போல் தான் தொடர்பு.

வஞ்ச புகழ்சியணியில் எழுதியது மன்னிக்கவும்