Monday, June 5, 2017

உண்மையில் மாடு விற்பனை தடை இதனால் தான் விதிக்கப்பட்டது

திரும்ப திரும்ப பாசக மக்கள் அனைவரும் சொல்வது கறியை வாங்குவதையோ விற்பதையோ இல்லை சாப்பிடுவதையோ தடை செய்யவில்லை. மாறாக மாட்டை விற்பதற்கு மட்டும் தான் தடைவிதித்துள்ளோம்.மாட்டை வாங்க கூட தடையில்லை ஆனால் விற்க மட்டும் கூடாது என்றும் மட்டும் தான் இருக்கின்றது என்று அழகாக சொல்வார்கள்.

இதில் அவர்கள் சொல்லும் உண்மை மாட்டை இந்தியாவில் ஒருவரும் விற்கக்கூடாது. ஆனால் வாங்கலாம் திங்கலாம் தடை எல்லாம் ஒன்றும் இல்லை.

இல்லாத மாட்டை எப்படி வாங்குவார்கள் அல்லது உண்பார்கள் என்ற கேள்வியுடன் நீங்கள் தயாராகுவது தெரிகின்றது.

அந்த பதிலை சொல்லும் முன் கடந்த 8, 10 ஆண்டுகளாக ஏழை எளிய மக்கள் முதல் அரசன் வரை என்று மருத்துவ காப்பீட்டை விற்று வருகின்றது வெளிநாட்டு நிறுவனங்கள்.

நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு எட்டாத மருத்துவ காப்பீட்டை எப்படி வாங்குவார்கள் என்று கேட்டபோது தகுதியுள்ளவர்களுக்கு அரசை காப்பீடு வழங்குங்கள் என்று அதே காப்பீட்டு நிறுவனகளால் வழங்கப்பட்டது.

அப்படி பட்டி தொட்டி எல்லாம் மருத்து காப்பீட்டுகளை அள்ளி வழங்கி மக்களை காத்துவிட்டதாக அரசுகளும் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவங்களும் வீர வசனம் பேசியது.

சரி இனி நாடுமுழுவதும் வரும் நடுத்தர மற்று கிராமத்து ஏழை மக்களுக்கு மாரடைப்பு சர்க்கரை வியாதி என்று மாதா மாதம் மருந்துகளை விற்று கல்லாகட்டுவோம் என்று பாமகவின் அன்புமணியின் துணையில் இந்தியாவில் இருக்கும் அரசு மருந்து கம்பெனிகளை எல்லாம் மூடிவிட்டு அவர்களது ஆலைகளை திறந்து புட்டி மருந்துகளை பெட்டி பெட்டியாக அடுக்கி வைத்துக்கொண்டு காத்து கிடந்தது.

அரசு மாத தவணைகள் தவிர காசு கல்லாவை எட்டி பார்க்கவில்லை. என்னடா இது நமது காப்பீட்டு மற்றும் மருந்து கம்பெனிகளுக்கு வந்த சோதனை என்று பாசகவின் ஆயோக்கியர்களுடன் ஆலோசனை நடத்தியது.

அட மடையன்களா நடுத்தர மற்றும் ஏழைமக்கள் எல்லாம் உழைக்கும் மக்கள் அவர்களுக்கு சர்க்கரை வியாதி வருவது அரிது என்றும் மேலும் அவர்கள் உண்ணும் உண்வுகளிலும் குறிப்பாக மாட்டிறைச்சியும் ஏ2 இரகத்தை சேர்ந்தது என்றதால் இருதயம் மற்றும் அதை சார்ந்த உயர் இரத்த அழுத்தமும் அதிக கேலரி உணவினால் வரும் சர்க்கரை வியாதியும் வருவது இல்லை என்று பாசகவின் ஆயோக்கியர்கள் கண்டு அறிந்தனர்.

அப்படி என்றால் சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயை உண்டு செய்யும் ஏ1 மாட்டு பாலும் மாட்டு இறைச்சியையும் மக்கள் இனிமேல் உட்கொள்ள வழி செய்ய வேண்டும் என்று பாசகவின் ஆயோகியர்கள் பணிக்கப்பட்டார்கள் காப்பீடு மற்றும் மருந்து கம்பெனிகளால்.

ஆதலால் இந்திய ஏ2 மாடுகளை அழித்தால் இது நடக்கும், முதலில் காளை மாடுகளை அழி பிறகு பசு மாடுகளை அழி என்று உத்தரவு.

களமிறங்கிய பீட்டா காளைகளை வளர்க்கவும், சந்தை படுத்துதலையும் தடுத்தது. இப்போது பசுக்களை மக்களுக்கு சுமையாக்கி மாடு வைத்து இருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளை அழித்தால் அவர்களும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் வீட்டுக்கு 5 பேருக்கு சர்க்கரை மற்றும் இருதய சிகிச்சை மருந்துகளை அவர்கள் ஆயூட் காலம் வரை விற்க ஆயத்தம் ஆகி வருகின்றது.

அது மட்டும் இல்லாது இந்திய உணவை விற்கப்போகும் உணவகங்கள்  GST காரணம் காட்டி மூடப்போவதாக அறிவித்து இருக்கின்றது. மூடும் இடங்களில் அதிக கொழுப்பு உணவுகளான பீசாவும் பர்கர்களையும் பெப்சி கோலாவுன் கொடுப்பார்கள்.

மீண்டும் ஒரு சுதேசி இயக்கத்துக்கு இந்தியா தன்னை தயார்படுத்திக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளதை மக்கள் எப்போது தான் உணர்வார்களோ......

1 comments:

')) said...

இதான் காரணமா??! புரிந்துக்கொண்டேன்