Thursday, June 15, 2017

அம்மாவும் சின்ன குழந்தையும், மோடியும் பின்னே நாமும்

அம்மா தனது சின்ன குழந்தைக்கு சோறூட்டும் போது வாயை பிளக்கும் வண்ணம் கதைகள் சொல்வாள். பெரும்பாலும் அந்த கதைகளில் சம்பவங்கள் இருக்கிறதோ இல்லையோ பாவனைகள் அதிகம் இருக்கும்.

அவன் அங்க வந்தானா ம்ம்ம்ம்ம் வாய திற, அப்புரம் அந்த இடத்தில கத்திய பார்த்தானா ம்ம்ம்ம்ம் இந்த பெரிய உருண்டைய வாங்கிக்கோ அப்புரம் தான் அடுத்து என்னன்னு சொல்வேன் அதிகாரமா.

ஒரே உப்பு சப்பு இல்லாத கதையை வித விதமா நிறைய முக பாவங்களுடன் தினம் தினம் அந்த குழந்தைக்கு சொல்லி உண்டதே தெரியாமல் அந்த குழந்தைய சாப்பிடவைக்கும் வலிமை அவளுக்கு மட்டுமே உண்டு. அதுவும் அந்த சின்ன குழந்தைக்கு சில குறிப்பிட்ட சொல்லாடல் இல்லை என்றால் சில குறிப்பிட்ட பெயர்கள் மட்டும் மிகவும் பிடித்து போகும். மீண்டும் மீண்டும் அந்த பெயர்களை கொண்ட கதைகளை தான் விரும்பி விரும்பி கேட்க்கும் குழந்தை.

அம்மாவும் அடவு கட்டாத குறையாக அந்த சாப்பாட்டு கிண்ணத்துடன் அந்த குழந்தை ஓடும் இடத்திற்கு எல்லான் இராசா, தங்கம் இல்லை எங்க அப்பா இல்லா, எங்க அம்மா இல்ல என்று சொல்லும் அந்த செல்ல வார்த்தைக்கு எல்லாம் மந்திரமாக கட்டுப்பட்டு அவளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் குழந்தை.

வளர்ந்த பிறகு அந்த கதை எல்லாம் காலத்திற்கு ஏற்றார் போல் சரித்திர கதைகளாகவும், விஞ்ஞான மற்றும் கற்றுக்கொள்ள வேண்டிய கதைகளாகவும் மாற்றி மறுபடியும் ஒரு கதைக்காக காத்து இருக்க வைப்பாள் அம்மா. பிற்காலத்தில் நன்றாக வளர்ந்த பின்பு கேட்க்க நினைக்கும் சொந்தகாரர்களது கதைகளாகவும் அது மாறும்.

இதே நுட்பம் தான் மோடி கடைப்பிடிப்பதும் ...ம்ம்ம்ம்ம்ம்ம் அதோ பார் ஊழல் ஓட்டு போடு......ம்ம்ம்ம் அதோ பார் பசு மாடு.....ம்ம்ம்ம்ம்ம் 15 இலட்ச ரூபாய் உனக்கு கொடுப்பேன் இன்னும் நிறைய ஓட்டு போடு......ம்ம்ம்ம் மேக்கின் இந்தியா ஆனா வல்லபாய் சிலையை சீனா செஞ்சு கொடுக்கனும்......ம்ம்ம்ம்ம்ம்ம் மாட்டுகறி.......இன்னும் நிறைய ஓட்டு போடு......ம்ம்ம்ம்ம்ம் உன்னை விட உனது ஊரின் அண்ணாச்சி கடைகாறர் அதிகம் சம்பாதிக்கிறார் அதனால் உன்னுடைய பணத்தை எல்லாம் வங்கிகளில் போட்டு அவர்களுக்கு சேவைக்கட்டணம் கட்டு....ம்ம்ம்ம்ம்ம் இன்னும் நிறைய ஓட்டு போடு.......ம்ம்ம்ம்ம்ம்ம் இதோ பார் அமெரிக்கா போரேன் ம்ம்ம்ம்ம் நிறை ஓட்டு போடு

ம்ம்ம்ம்ம் இதோ பார் மொரீசியசுக்கு 3000 கோடி கொடுக்கின்றேன் அவங்க பாவம் இல்லையா ம்ம்ம்ம்ம்ம்ம் இன்னும் பெரிசா ஓட்டு போடு.......வேண்டாம் எனக்கு இந்த கதை பிடிக்கல வேண்டாம்.....ம்ம்ம்ம்ம்ம் அதோ பார் பசு மாடு, மாட்டுகறி.....அதோ பாரு முசுலீம் மக்கள்.......எல்லையில இராணுவ வீரன கேளு.......ம்ம்ம்ம்ம்.... இல்ல அந்த இராணுவீரனுக்கு சாப்பாடே போடலயாமே......ம்ம்ம்ம்ம்ம் அப்படினா கதை எல்லாம் சொல்ல மாட்டேன் ....... இல்ல இல்ல கதை சொல்லு.....ம்ம்ம்ம்ம் அதோ பாரு பசு மாடு.....ம்ம்ம்ம்ம் அதோ பாரு பசு கன்னுக்குட்டி....ம்ம்ம்ம்ம் அதோ பாரு பசு சானம் ம்ம்ம்ம்ம்ம் அதோ பாரு கோமியம் .......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

போடு போடு ஓட்டு இல்லன்னா பசு கதைய சொல்ல மாட்டேன் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

போ மோடி ஓட்டு எல்லாம் போட மாட்டேன் பாரு அங்க அந்த அம்மா எல்லாம் எவ்வளவு அழகா வாசனையா சமைச்சு வித விதமா தறாங்க நீங்க எப்பவுமே ஒன்னுமே இல்லாத கையை மட்டுமே நீட்டுறீங்களே.....ம்ம்ம்ம்ம்ம் அதோ பார் இருட்டில் எல்லையில் இருந்து எதிரி ஊடுருவுரான் அதுக்காக என்னக்கு ஓட்டுபோடு.......ம்ம்ம்ம்ம்ம்.... அப்படி வந்தா காத்துகொள்ள தான் இராணுவம் இருக்கே.......ம்ம்ம்ம்ம்ம் அதுவும் நான் ஆட்சிக்கு வந்த பிறகு தான் நடக்குது. இல்லன்னா நீங்கள் எல்லாம் என்ன கதி ஆளாயி இருப்பீங்க.......ம்ம்ம்ம்ம்ம் அப்ப அந்த 15 இலட்சம் ம்ம்ம்ம்ம்ம் அதோ பாரு பசு மாடு.... பசு கன்னுகுட்டி ம்ம்ம்ம்ம்ம்ம் அதோ பாரு ஊழல் ம்ம்ம்ம்ம் அமெரிக்கா ஆப்ரிக்கா அண்டார்டிக்கா........

இப்படி வெறும் கையில் முழம் போடுவதற்கும் வெறும் வாயை மெல்ல வைத்து அதற்கு வரி கொடு என்று வாங்க நம்மை மாதிரியான மக்கள் இருக்கும் வரையில் இன்னும் எத்தனை மோடிக்கள் வந்தாலும் ஏமாற்ற முடியும்.....ம்ம்ம்ம்ம்ம் அதோ பாரு பாவம் செஞ்சவன் வருகிறான் போய் அவனை அடித்து கொல் என்றும் இது பரிணாமித்து நிற்கிறது..........

0 comments: