Friday, October 24, 2008

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் அப்படி என்ன குழப்பம் மக்களே

முதலில் ஒரு செய்தியை உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். என்ன தீர்வை ஆதரிக்கிறோம் என்றதில் வேண்டுமானால் நமக்குள் குழப்பம் இருக்கலாம். எப்படி பட்ட தீர்வாக இருந்தாலும் தீர்வு கிடைத்தாக வேண்டும் என்றதில் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது என்று நம்புகிறேன்.

அடுத்தாக தற்பொழுது வலையில் உலாவரும் செய்திகள் இது. தமிழீழம் மலர்ந்தால் தமிழகம் பிளவு படும் என்ற சொல்லாடல்களும், அதில் வரும் பின்னூட்டங்களில் வந்தால் என்ன என்றும் வராதே என்றும் வரும் விவாதங்களை படிக்கும் போது வேடிக்கையாக இருக்கிறது.

இதன் உச்சம் என்ன தெரியுமா, இந்தியாவுக்கு ஒரு காசுமீரம் போதும் இன்னும் ஒன்று வேண்டாம் என்று சொல்லுவது தான் அபத்தததிலும் அபத்தம்.

என்னவோ காசுமீரம் தவிர, மும்பை, அசாம், ஆந்திரம், கர்னாடகம், குசராத்து போன்ற பகுதிகளில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல். எனக்கு இவ்வளவு இருக்கிறது மற்றதை நீ எடுத்துக்கொள் என்று பக்கத்து வீட்டுகாரர்களை தொந்திரவு செய்வதாக இவர்களுக்கு நினைப்பு(தமிழகம் பிரிந்து போகும் என்று சொல்பவர்களுக்கு).

மேலே சொன்ன இடங்களில் விளையும் குழப்பங்களினால் தமிழர்களின் உணர்வுகளில் என்ன வேறுபாடுகளை தேற்றுவிக்க போகிறது என்று கேட்டால் எல்லோருமே சற்று குழப்பமாகத்தான் விடையளிப்பார்கள்.

ஆனால் அதே நேரத்தில் டெல்லியில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும், மும்பையில் இருந்தும் விரட்டப்படும் தமிழர்களை பற்றிய செய்திகள் வரும்போது கட்டாயம் எல்லோரது மனதிலும் ஆதங்கம் வருவது இயற்கையே. அது மட்டும் இல்லாது இப்படி விரட்டி அடிக்கிறார்களே அது போல நம்ம மாநிலத்தில் நாம் செய்தால் இவர்களுக்கு எப்படி இருக்கும் என்றும் கேட்க தூண்டுவதும் இயற்கையே.

இதில் தனது சொந்தம் என்ற ஒரு உணர்வு இருந்தாலும், இது பின்னாளில் தனக்கு நடக்காது என்று எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை அதனால் இதற்கு இப்பவே ஒரு தீர்வுகாண வேண்டும் என்ற முன் எச்சரிக்கையாவும் கூட எடுத்துக்கொள்ளலாம்.

அந்த அடிப்படையில் தான் கர்னாடகம் தண்ணீர் விட மறுக்கும் போதெல்லாம், கேரளம் பெரியார் அணையிலே பிரச்சனைகளை கிளப்பும் போதெல்லாம், பெட்டி பெட்டியாக பணத்தை பெற்றுக்கொண்டு கிருசுணா நதி நீர் கொடுகிறேன் என்று சொல்லி தனது பணக்கார விவசாயிகளுக்கு வாய்க்கால் அமைத்த ஆந்திரம் செய்கையின் போதும் தமிழர்கள் தங்களது ஆதங்கத்தை கருத்துக்களாகவும் கோபங்களாகவும் வெளிப்படுத்தினார்கள்.

இந்த கோபங்களில் எல்லாம் மக்கள் கேட்டது இது தான், அடுத்த மா நிலம் நமக்கு எதுவும் செய்யாது ஆனால் நாம் மட்டும் ஏன் அவர்களுக்கு இங்கு இருந்து மின்சாரமும், மூல பொருட்களையும் அனுப்பவேண்டும் என்று கேட்டார்கள். சரியான கேள்விகள் தான் ஆனால் விடைதான் என்ன என்று குழப்பம் இருக்கும்.

இந்த கேள்விகளுக்கு படித்தவர்கள் முதல் பாட்டாளிவரை அனைவரது பதிலும் ஏன் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் வரும். என்ன தான் பற்றாக்குறையாக இருந்தாலும் குடும்பத்துக்குள் விட்டுக்கொடுப்பது அன்றாட நிகழ்வு. பொதுவில் மூத்தவர்களில் யார் விட்டுக்கொடுப்பது என்று போட்டியும் கூட போடுவார்கள்.

ஆனால் பொதுவில் இந்த விட்டுக்கொடுத்தல் எப்போதாவது ஒருமுறை நிகழ்ந்தால் தான் இந்த நிலை. அதுவே தினமும் என்றால், கிடைக்காதவர்கள் என்ன எப்பவுமே கிடையாதா என்று கேட்பது இயல்பு. இன்று தமிழகத்தின் நிலையும் இது தான். அது தான் கேட்கிறார்கள் எப்பவுமே தண்ணீரோ வாய்ப்புகளோ கிடையாதா என்று.

அந்த குடும்பத்தில் அது சரி என்றால் தமிழகத்தில் கேட்பதும் சரியே.

தமிழகம் பிரிந்து போகும் என்று சொல்பவர்களே, இந்த காரணங்களுக்காக தமிழகம் பிரிந்து போகும் என்று ஏன் இதுவரை நீங்கள் கணிக்கவில்லை என்று தெரிந்துகொள்ளலாமா..........

ஒரு குடும்பத்தில் இருக்கும் இளையவர்களை யாராவது வெளியாள் சீண்டினால் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து கொண்டு சீண்டியவனை தாக்குவதை பார்த்தது இல்லையா நீங்கள். அப்படி தாக்கியதால் அந்த குடும்பத்தை அடிதடி குடும்பம் என்று பெயர் சூட்டுவோமா நாம் தான்.

தாயும் மகளும் சேர்ந்து கோவிலுக்கு போகிறார்கள், அங்கே விடலைகள் அந்த பெண்ணை தகாத முறையில் கேலி பேசுகிறார்கள். அங்கே அந்த தாய் தான் ஒரு தாய் அதுவும் ஒரு தமிழ் பெண்மணி ஆகையால் அதிர்ந்து பேசக்கூடாது. என்ன நடக்கிறதோ அது அப்படியே நடக்கட்டும் என்றா இருந்துவிடுவார். தமிழகம் இல்லை உலகில் எந்த இடமாக இருந்தாலும் சரி எல்லா அம்மாக்களின் இயல்பும் இது மாதிரிதான் இருக்கும் இதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இல்லை.

என்றோ ஒரு நாள் நடக்கும் இந்த வித நடவடிக்கைகளுக்கே இப்படி மூர்க்கம் பெரும் சாதாரண பெண்கள். அன்றாடம் தங்களது கண் முன்னாலே தங்களது மகன்களை சுதந்திரம் வேண்டும் என்று கேட்ட ஒரே காரணத்திர்காக அணு அணுவாக துண்பங்களை கொடுத்து, கடைசியில் உயிரை மாய்த்துவிடும் படி கெஞ்சிய பிள்ளைகளை கண் முன்னே பார்த்தவளை பற்றி இங்கே பேசிக்கொண்டு இருகிறோம் நண்பர்களே. கவனத்தில் கொள்க, அவசரப்பட்டு வார்த்தைகளை விடவேண்டாம். கனிவேடு கேட்டுக்கொள்கிறேன்.

தாய் தனது பிள்ளைகள் அளவுக்கு அதிகமாக குரும்பு செய்யும் போது கொன்றுவிடுவேன் கொன்று என்று கடிந்துகொள்வது இயல்பாக பார்க்ககூடிய ஒன்று. அப்படி சொல்லும் எவளும் கொல்வதும் இல்லை ஏன் அடிப்பதும் கூட இல்லை. அதை போலத்தான் இன்றைக்கு மக்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேசியுள்ளார்கள்.

இப்படி கொன்றுவிடுவேன் என்று சொன்ன தாயின் மேல் வழக்கிட்டு வாதாடினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த விதமான பதிவுகள். அந்த பதிவுகளின் அப்பத்த உச்சம் தமிழகம் நாளை பிரிந்து போகும் என்ற ஆருடம்.

மேலே சொன்ன எந்த சிக்கலிலும் பிரியவேண்டும் என்று எவனுமே எண்ணாத வேளையில், பிரியவேண்டும் என்று எண்ணுவார்கள் என்று பதிவிடும் இந்த நண்பர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்.

விடுதலை அடைந்த இத்தணை ஆண்டுகளில் கடந்த 10 ஆண்டுகளாகத் தான் காமராசருக்கு பிறகு உரிய கவனிப்புடன் தமிழகம் இருக்கிறது என்று சொன்னால் மறுப்பதற்கு இல்லை.

இப்படி கவனிப்புடன் இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை போலும், அதனால் தான் இதையும் அதையும் எழுதி தப்பு தப்பாக கருத்தாங்களை உருவாக்க எண்ணி இப்படி எழுதுகிறார்கள் போலும். வீணர்களே உங்களது முயற்சி வீழ்வது நிச்சயம். வாழ்த்துகள்.....

அடுத்தவர் வாழ்க்கையையும் உணர்வுகளையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள், மற்றும் ஒரு முறை இலங்கை தமிழர்களை பற்றிய பதிவிடும் முன் சிந்தித்து எழுதவும். உங்களை இப்படி ஒரு நிலையில் ஒருவர் பேசினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தால் தெளிவாக புரியும்.

17 comments:

Anonymous said...

அருமையான பதிவு...

')) said...

வன்முறைக் எதிராக நடத்தப்படுகிற வன்முறை அகிம்சை தான், வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறை தான்."

Anonymous said...

Good One,.

Krithika

')) said...

Panimalar,

You just can not compare Krishna water issue, cauveri water issue and Periyar dam issue with eelam issue.

As a mature adult we should know the history first.We should know the difference between helping a wounded cat and wounded tiger. Nobody will put the snake going in the wall in thier pockets.

Now More to this issue..what is the request now for.? The request is to stop the war between LTTE and Srilanka army .? Why they should stop the war.? Because common people are killed. The reason is LTTE is using them as shield to create sympathay, they are not allowing the civil people to move out of their place.Since LTTEs are on the verge of loosing this battle they are tigerring parties in Tamilnadu to demostrate protest to stop the war. If the war stops now, Prabahran will utilse this time to consolidate his strength once again the story will be repeated

So What India can do.? India has to wait till LTTE is finished or should help Srilanak army to identfy the exact location where Prabahran is hiding and then finish him off. Then the election can be conducted and whoever wins th election, let him rule eelam.

')) said...

தூயா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

சரியாக சொன்னீர்கள் சிபி அப்பா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருத்திகா

')) said...

அன்பு நண்பரே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் புலிகள் எங்கே வந்தார்கள். புலிகளுக்கு ஆதரவு தர சொல்லியாரும் கேட்கவே இல்லையே. வன்னியை நெருங்கும் இராணுவத்தை நிருத்த வேண்டிய அவசியம் என்ன, அங்கே இருக்கும் 2.2 இலட்சம் மக்களை பாதுகாக்கத்தான். புலிகளுக்கு புகலிடம் கொடுக்க அல்ல.

தினமும் நடக்கும் விமான தாக்குதல்களால் தீர்த்துகட்ட முடியாத புலிகளையா இராணுவம் உள்ளே சென்று கொன்றுவிட போகிறது. அவர்களது நோக்கம் அங்கே இருக்கும் அப்பாவி மக்களை கொன்று குவிப்பது தான். இது சாதாரணமாக எல்லோருக்கும் புரியும் இரு செய்தி உங்களுக்கு புரியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

தவிற உச்ச நீதிமன்றம் இட்ட உத்தரவை மதிக்கதேவை இல்லை என்று சட்டமே இயற்ற முற்பட்ட கர்னாடகத்தை அரசியல் நோக்கர்கள் என்ன என்று சொல்வார்கள் என்று விளக்கவும்.

30 ஆண்டுகாலமாக இதே அக்க போர், ஆண்டுக்கு ஆண்டு வானம் பொய்த போதேல்லாம் இவர்களுடன் மல்லுகட்டியே விவசாயம் படுத்தது. எனக்கு இன்றைக்கும் நினைவில் இருக்கிறது மயிலாடுதுறை, திருத்துறைபூண்டி, காரைகால் எல்லாம் செல்லும் போது எப்படி எல்லாம் வண்டி வலைந்து நெளிந்து செல்லும் நெல் வயல்களின் ஊடே. ஆனால் இன்றைகு நிலை என்ன நண்பரே.........

')) said...

//அன்பு நண்பரே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் புலிகள் எங்கே வந்தார்கள். புலிகளுக்கு ஆதரவு தர சொல்லியாரும் கேட்கவே இல்லையே.//

One should be really a fool, if he/she does/can not understand the stopping of war now will only help LTTE.

By the way Didn't the srilankan Govt gave a call to all tamils living in LTTE territory to leave thier place and settle in other places before attacking LTTE's places.?

I know they did. But the people did not respond, they want only Prabaharan. If they themself did not care about thier life why we should care.

With refernce to your comments on Cauveri water issue, Didn't you ever had quarrel with your brother.? Did'nt you eevr had fight with your neighbour. Similarly we will also fight among ourself as brothers and sisters. But when it comes to nation, we will stand for one nation i.e India.

We will not look whether the wicket was taken by Anil Kumble or Balaji. Hope you understand.

')) said...

உண்மைதான் நண்பரே அழகாக தெளிவுபடுத்தி இருக்கின்றீர்கள். இந்த வகையில் பேசுவது சொல்லவரும் கருத்தின் கனத்தை அதிகரிப்பதே ஒரே நோக்கமாகும். இந்த முறையைக் கூட புரியாதவர்கள் போல் ஊழையிடுகின்றார்கள்.

')) said...

புலிஅழிவை வேண்டிக்கிடப்பவன் சிங்கள இனவாதி, இதன் காரணம் தமிழன் உரிமைய வளங்கும் ஆசையின் நிமித்தம்தான் என்று எவனால் நம்பமுடிகின்றதோ அந்த அறிவுக்குருடனால்த்தான் புலிஅழிவு தமிழருக்கு விடிவு என்று நம்பமுடியும்.
இல்லை என்றால் சோத்துக்கு பிதறுகின்ற மகிந்தாவின் கூலி.

')) said...

சட்டத்திற்கு அப்பால் ஏதும் இல்லை நண்பரே எந்த நாடு ஆனாலும் சரி. ஆனால் இங்கோ நீதிமன்றம் என்ன சொல்வது நாம் என்ன செய்வது என்று கேட்டால் கூட பரவாயில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் விட்டால் சில அரிய மிருகங்கள் நீர் இல்லாமல் காட்டு பகுதியில் சாகும் என்று நீதிமன்றத்தில் சொல்லி குட்டு வாங்கினார் பாருங்கள் அந்த தேசியவாதி, அடே அப்ப என்ன தேச பற்று. இவர் கட்டாயம் எனது சகோதரர் இல்லை நண்பரே, கட்டாயம் இல்லை..........

வன்னியை விட்டு வெளியேறினால், அவர்களது பெண்களும் பிள்ளைகளும் என்னவாகும் என்று அந்த தாய்யுள்ளங்களுக்கு தெரியும்.

அதனால் தான் அவர்கள் அங்கேயே இருக்கிறார்கள்......அவர்கள் ஊர் தேசியவாதிகள் மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.

')) said...

சரியாக சொன்னீர்கள் தேவன், ஒரு கருத்து ஆகிவிடக்கூடாது என்று எவ்வளவு கவனமாக இருகிறார்கள் பாருங்கள். அடிப்பவனும் நசுக்குபவனும் தேசியவாதி, அவனை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டால் தேச துரோகியாம். நல்ல கருத்தாக்கம். இதிலே ஒரு மன நோயாளி பதிவர் எப்படி தூக்கிலிடவேண்டும் என்று பரிந்துரைவேறு செய்கிறார். அபத்தத்திலும் அபத்தம்....

Anonymous said...

In the above comment someone saying that karnataka fight as brothers fight, I was wonder how karnataka brothers raping tamil sisters and how karnatka brothers killing tamilnadu brothers. Still you people want to cheat us in the name of brothers and sisters then there is no meaning for those words.

If you are really a right person at a minimum level you can ask india to stop supplying arms to srilanka. Even pakistan is not killing indians for fishing in thier territory.Indian arms killed 400 indians not srilankans. Wakeup a person who acts like sleeping.

-- Kannan.

')) said...

Panimalar,

Hope you are hearing this comment

//புலிஅழிவை வேண்டிக்கிடப்பவன் சிங்கள இனவாதி, இதன் காரணம் தமிழன் உரிமைய வளங்கும் ஆசையின் நிமித்தம்தான் என்று எவனால் நம்பமுடிகின்றதோ அந்த அறிவுக்குருடனால்த்தான் புலிஅழிவு தமிழருக்கு விடிவு என்று நம்பமுடியும்.
இல்லை என்றால் சோத்துக்கு பிதறுகின்ற மகிந்தாவின் கூலி.
//

Now tell me about
//அன்பு நண்பரே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் புலிகள் எங்கே வந்தார்கள்//

')) said...

Panimalar,

Hope you are hearing this comment

//புலிஅழிவை வேண்டிக்கிடப்பவன் சிங்கள இனவாதி, இதன் காரணம் தமிழன் உரிமைய வளங்கும் ஆசையின் நிமித்தம்தான் என்று எவனால் நம்பமுடிகின்றதோ அந்த அறிவுக்குருடனால்த்தான் புலிஅழிவு தமிழருக்கு விடிவு என்று நம்பமுடியும்.
இல்லை என்றால் சோத்துக்கு பிதறுகின்ற மகிந்தாவின் கூலி.
//

Now tell me about
//அன்பு நண்பரே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் புலிகள் எங்கே வந்தார்கள்//

')) said...

நண்பரே கண்ணன் கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள் பார்ப்போம். சகோதரர் நடந்துகொள்ளும் முறை அது தானா நண்பரே.....