Tuesday, December 16, 2008

மத்திய இல்லினாய் தமிழ்சங்கத்தின் 2008ன் தீபாவளி விழா

நவம்பர் 16ஆம் நாள் 2008ல் அர்பனாவின் சமுக கூடத்தில் மத்திய இல்லினாய் தமிழ்சங்கத்தின் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.

குறித்த நேரத்திற்கு தமிழ்த்தாய் வாழ்த்துகளுடன் விழா துவங்க பெற்றது. விழாவின் விருந்தினர்களையும் உறுப்பினர்களையும் தலைவர் திரு.சுப்பு வரவேற்று விழாவினை துவக்கி வைத்தார்.

விழாவின் நாயகி ரோசலின் துவக்க உரையுனுடன் முதல் நிகழ்ச்சியாக சேம்பைன் தமிழ் பள்ளியின் மாணவர்களின் தமிழ் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல், இரண்டு, மூன்று என்று மூன்று குழுவாக வந்து குழுப்பாடல்களை மாணவர்கள் பாடிச்சென்றார்கள்.

நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் தமிழ் பள்ளி தான் இது வரையில் மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வியின் பலனை பெற்றோர்கள் அனைவரும் பார்த்து மகிழ்ந்தை அங்கே காணமுடிந்தது. என்ன சாதித்தது சேம்பைன் தமிழ் பள்ளி என்று கேட்க நினைக்கும் அனைவரும் பதில் செல்லாமல் செல்லி சென்றது. வாழ்க வளர்க சேம்பைன் தமிழ் பள்ளியும் அதன் சேவையும்.அடுத்தாக நடன மாலையாக ஒரு குழு நடனம். இது சின்னம் சிறு சிறுவர்கள் அதிக நேரம் ஆடமுடியாத குழந்தைகளாக

உள்ளவர்களுக்காக அமைக்கப்பட்ட நிகழ்ச்சி. இதில் நான்கு பாடல்களுக்கு நான்கு குழுக்களாக சிறுவர்கள் கையில் விளக்குடனும், தீபாவளி தீபாவளி என்ற நாட்டிய கலபு நடனமாகவும், பஞ்சாப்பியரின் பாரம்பரிய நடனமாகவும், நகரத்து குரும்பு சிறுமிகளாவும் வந்து நடன விருந்தை கொடுத்தார்கள் மத்திய இல்லினாய் தமிழ்சங்க உறுப்பினர்களின் எதிர்காலங்கள்.இதை தொடர்ந்து நாக்கு முக்கா என்ற பொருள் பொருந்திய தமிழிசை பாடலுக்கு சிறார்களும் சிறுமிகளுமாக ஆடிய நடனம் காற்றிலே பறந்து ஆட்டிய முழுப்பாடல் ஆட்டம் அது. ஆண் பாடும் பாடலையும் பெண் பாடும் பாடலையும் இணைத்து ஆறு நிமிடங்களுக்கு வரும் பாடலாக அமைத்து அந்த பாடலை நடனமாடி காண்பித்தார்கள்.


இரண்டு நடனங்களை பார்த்த மகிழ்ச்சியில் இருந்த எங்களுக்கு அடுத்த விருந்தாக சேம்பைன் தமிழ் பள்ளி மாணவர்களின் தீபாவளி பிறந்த கதையை ஆங்கில நாடகமாக நடித்து காட்டினார்கள். அவர்கள் பேசும் ஆங்கிலமும் இந்திய வரலாறும் என்று மிகவும் வித்தியாசமாக அமைந்தது அந்த நாடகம்.அடுத்தாக மகளீர் மன்றம் வழங்கிய கோலாட்டம் நிகழ்ச்சி. கலைஞன் படத்தில் வரும் தில்லு பரு சானே என்ற பாடலுக்கு அழகாகவும் நளினமாகவும் அருமையானதொரு நடனத்தை வழங்கினார்கள். ஒவ்வொரு முறையும் இப்படி நிகழ்ச்சிகளை கொடுக்கும் போதெல்லாம் இவ்வளவு திறைமைகளை இத்தணை நாள் எங்கே மறைத்து வைத்தீர்கள் என்று கேட்கும் விதமாகவே அமையும். இன்றும் அப்படியே அமைந்தது அந்த நடனம்.சிக்காக்கோ தமிழ்சங்கத்தின் சார்பாக விழாவில் கலந்துகொண்ட திருமதி மீனாசுபி அவர்கள் விழாவில் சிறப்புரையாற்றினார்கள். விழாவையும் மத்திய இல்லினாய் தமிழ்சங்கத்தையும் வாழ்த்தி பேசினார், பொங்கல் விழாவிற்கு சிக்காகோ தமிழ்சங்கத்திற்கு வரும் படியாக அழைப்பையும் விடுத்தார்கள்.

மத்திய உணவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. புளுமிங்குடன்னின் இந்தியா பவனில் இருந்து தருவிக்கப்பட்ட மத்திய உணவு வழங்கப்பட்டது. உணவு இடைவேளையில் காதுக்கும் உணவாக இசை மாலை தொகுத்து வழங்கப்பட்டது.

உணவு இடைவேளைக்கு பிறகு செல்வி சுபாலட்சுமியின் பரதம் நடைபெற்றது.
இவர் சேம்பைன் அர்பனா பல்கலைகழத்தில் மேற்படிப்பு மாணவர். நடனம் கற்றுக்கொள்ளும் சேம்பைன் தமிழ் பிள்ளைகளுக்கு எப்பவும் ஒரு தூண்டுகோலாக இவரது பரதம் அமைவது உண்டு. இந்த முறையும் அப்படியே அமைந்தது.

அடுத்தாக மேடையேறிய பெப்பரபே குழுவினர்கள் மாரி + மாரி = மும்மாரி என்ற ஒரு வித்தியாசமான நாடகத்தை நடத்தினார்கள். தற்பொழுதை சென்னை நகரின் முக்கிய இடங்களின் பெயரில் அரசர்கள் காலத்து கதையாக அமைந்தது அவர்களது நாடகம். ஒரு வகையில் சொன்னால் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் வகையில் இருந்தாலும், நிறைய வித்தியாசமான திருப்பங்களை கதையில் கொண்டு நடத்தி காட்டினார்கள்.

தொடர்ந்து மேடையேறிய செல்வி லாவண்யாவின் குழுவினர்களின் மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது. முத்தாக மூன்று பாடல்களை பாடி அசத்தினார்கள் அந்த குழுவினர்கள். ஒரு கித்தார், மின்னனு இசை கருவி மட்டுமையுமே வைத்துக்கொண்டு சவாலாக அவர்கள் பாடிக்காட்டியது விழாவில் அனைவரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றது.

இதை தொடர்ந்து பெப்பரபே குழுவினர் பெருங்காயம் என்ற ஒரு நாடகத்தை நடத்தி காட்டினார்கள். இந்த நாடகம் சோ இராமசாம 20 வருடங்களுக்கு முன் சென்னை தொலைக்காட்சிக்காக தயாரித்து வழங்கிய சரசுவதியன் செல்வன் நிகழ்ச்சியின் பாதிப்பாக இருந்தாலும் கோலங்கள், செல்வி, அண்ணாமலை என்று அமெரிக்க தமிழர்களை துன்புருத்தும் தொடர்களை துவைத்து கிழித்து காய போட்டபடி இருந்தது இந்த நாடகம்.


நாடகத்தை தொடர்ந்து பிங்கோ விளையாட்டு நடந்தது. எக்கச்சக்கமான சுற்றுகளுக்கு பிறகு முதல் பரிசு அறிவிக்கப்படது.


பிங்கோ விளையாட்டோடு விழாவை முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. நிகழ்சிகள் யாரும் இனிதே முந்தது. அடுத்தாக வரும் புத்தாண்டில் மீண்டும் சந்திப்போம் என்ற அறிவிப்போடு அனைவரும் விடைபெற்றார்கள். 2008 க்குகான தீபாவளி விழா இனிதாக முடிந்தது.

2 comments:

')) said...

வாவ்..குழந்தைகள் ரொம்ப க்யுட்..பகிர்வுக்கு நன்றிங்க :-P

')) said...

புனிதாவின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. இங்கு வந்தால் கவிதையாய் சொல்வீர்கள் என்று நினைதேன்....