Thursday, December 4, 2008

மும்பை தாக்குதலின் அரசியல் நோக்கம் என்னவாக இருக்கும்.....

தாக்குதலின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று ஆராய்வதற்கு முன் இரண்டு நிகழ்வுகளை இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஒன்று சமீபத்தில் நிலவருகில் செலுத்திய விண்கலம், இரண்டாவது கடல் கொள்ளையர்களை தாக்கியழித்தது.

முதலாவது நிகழ்வு நாட்டின் அறிவியல் வளர்ச்சியை உலகுக்கு உணர்த்திய ஒன்று. இன்னமும் கிரயோ வடிவமைப்பை முழுமை பெறாத நிலையில் கையில் இருக்கும் வெணையை வைத்தே சமாளி என்று சொல்லி செயல்பட்டவிதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தாமல் இல்லை. இது இரு உலக இந்திய சாதணையே......

இரண்டாவது என்ன தான் அடுத நாடு இந்தியாவை தீண்டினாலும் அவர்கள் எதுவும் செய்யவோ செயல்படவோ மாட்டார்கள். உலகில் இரண்டாம் பெரிய இராணுவம் இருந்தும் என்ன அது தூங்கும் இராணுவம் என்று பகுடி பேசும் உலகுக்கு நடுவில் சென்று கொள்ளையர்களை தாக்கு அழித்து வந்த படை நடைவடிக்கை உலகுக்கு சொல்வது என்ன.

மேற்கு புற கடலில் நமது ஆதிக்கத்தை அது காட்டுகிறது. இராணுவ நடவடிக்கைகளில் நமது நாடு மிகவும் அனுபவம் படைத்த படையது. நான்கு முறை நேரடி களம் கண்ட படைகள் நமது படை. அந்த அனுபவத்தின் தொடராக, பல பன்னாட்டு கப்பல்களை கடத்தி வைத்துக்கொண்டு பணம் பறிக்கும் கொள்ளையர்களை தாக்கி அழித்தது உலகில் மேற்கு கடலில் நாம் கொண்டுள்ள கடலாதிக்கத்தை காட்டுகிறது.

இந்த இரண்டும் யாருடைய கண்ணில் மிகவும் உருத்தலாக இருந்திருக்க வேண்டும், பாக்கிட்த்தானை விட்டுத்தள்ளுங்கள் அவர்கள் பேட்டை கொள்ளையர்களுக்கு சமம், தெரு நாய்க்கு என்றும் கூட சொல்லலாம். ஒரு எலும்பு துண்டை எடுத்து வீசினால் காலை நாவால் நக்கும் நாய்க்கு சமமான செயல்புரியும் நாடு அது. இந்த கேவல பிழைப்பு பிழைத்து மதத்தை காப்பதை விட வேறு ஒரு தொழில் கூட செய்து பிழைத்தால் மனிதன் என்ற ஒரு தகுதியாவது இருந்திருக்கும்.

வேறு யாருக்கு எல்லாம் இது உருத்தலாக இருந்து இருக்கும். சீனாவிற்கு என்று சொல்லலாம், நாம் விண்கலம் செலுத்துவோம் என்றதும் உடனே ஒரு மனிதனை விண்வெளி பாதைக்கு அனுப்பி சிகப்பு கொடியை அவசர அவசரமாக காட்டிய முனைப்பிலேயே அவர்கள் நம்மீது இந்த செயலில் எவ்வளவு காழ்ப்பில் உள்ளார்கள் என்று தெரியும்.

என்ன தான் படைபலம் என்று அவர்கள் வாய்கிழிய கத்தினாலும் அறிவியல் முன்னேற்றத்தில் நமது நாட்டுக்கு அருகில் கூட அவர்கள் கிடையாது. இரசியாவின் துணையுடன் கொண்ட சொற்ப முன்னேற்றங்களாக கொண்டு அவர்கள் போட்ட ஆட்டத்துக்கு எல்லாம் இந்த சந்திர விண்கலம் வயிற்றில் புளியை கரைத்துதான் இருக்கும்.

இவர்களை விட பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் தள்ளாடிகொண்டு நிற்கும் அமெரிக்காவை வெறுப்படைய வைத்திருக்கும் இந்த இரண்டு செயல்களும். அமெரிக்க டாலர் வீழ்ந்ததும் இந்தியா விழுந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு தோற்று போனாலும். மத்திய கிழக்கு பகுதியில் தனது படைகளை நிலை நிறுத்தியுள்ள நிலையில். இந்தியா இப்படி ஒரு படை நடவடிக்கையை மேற்கொண்டு பெயரை தட்டிக்கொண்டு செல்வது கட்டாயம் அவர்களுக்கு பிடிக்காது தான். அதுவும் அவர்களது மொழியில் நாம் எல்லாம் மூன்றாம் தர நாடு ஆயிற்றே.......

ஆக இந்த தாக்குதலில் யாருக்கு அதிக இலாபம் என்று பார்த்தால் சீனாவிற்கும் அமெரிக்காவுக்கும் தான். பாக்கிட்தானுக்கு இல்லை.

யார் பொருட் செலவில் இந்த தாக்குதல் நடந்து இருக்கும் என்றால், அமெரிக்க உளவு நிறுவனத்தை சொல்லலாம். அவர்களது கணிப்பு இப்படி இருக்கும், இந்த தாக்குதலின் அடிப்படையில் பாக்கிட்தானும் இந்தியாவும் மோதும். அந்த மோதலின் விளைவால் இரண்டு நாடுகளும் அழியும். இனிமேல் அங்கே இருக்கும் ஒரே எதிரி சீனா மட்டும் தான். அவர்களுக்கும் ஒரு மூன்று ஆண்டுகள் ஒரு நெருக்கடியை கொடுத்தால் சரியாக போகிறது என்று கருதி இருக்கலாம்.

அல்லது சீனாவோ, இப்போது ஒரு போர் மூள வைத்துவிட்டால். முடிவில் இரண்டு நாடுகளும் அணு ஆயுத போராக மாற்ற வைத்துவிடலாம். பிறகு, இந்தியாவின் பெரும் பகுதியும், பாக்கிட்தானிம் முழு பகுதியும் அழியும். இன்னமும் ஒரு 500 ஆண்டுகளுக்கு தனக்கு அருகில் யாரும் எதிரி இல்லை என்றும் திட்டம் தீட்டி இருக்கலாம்.

அல்லது இவ்வளவு ஏழ்மைகளையும் தனது கந்த துணிக்குள் மறைத்துக்கொண்டு நாடு மேற்கு உலக நாடுகளின் அறிவுத்தேவைகளை பூர்த்தி செய்து அதிக பணம் செய்கிறார்களே. நாமோ ஒருக்கும் அனைத்து மக்களையும் வயது வரம்பு இல்லாமல் வேலை வாங்கினாலும் இவர்கள் வாங்கு பொருட்களின் அளவே வருகிறதே என்ற வயிற்றெரிச்சல்.

அமெரிக்கர்களுக்கும் மேற்குலக மக்களுக்கும் இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றால். உடனே வேலைகளில் உள்ள அனைத்து மேற்குலக மக்கள் எல்லாம் ஊரை காலி செய்து சொந்த ஊருக்கு திரும்பி போனகையுடன். அங்கே எல்லாம் சென்று இனிமேல் வேலை எல்லாம் பார்க்க முடியாது என்று சொல்லவைத்தல். அதன் மூலம் தற்பொழுது இருந்து வரும் பணி பரவலாக்கம் இந்தியாவில் இருந்து ஓழித்தல் இவர்களது நோக்கம்.

ஒபாமாவானாலும் சரி, புசு ஆனாலும் சரி, கான்டலிசா ஆனாலும் சரி நீங்கள் போருக்கு போனால் நாங்கள் ஆதரவளிப்போம் என்று மூச்சுக்கு முன்ணூரு தடவை சொல்வதை பார்த்தால். இவர்கள் சண்டைக்கு போகமாட்டார்கள் போல, அட அடிடா அவனை என்று கூட்டத்தில் இருந்து தள்ளுவதை போல இருக்கிறது இவர்களது செயல்.

இதில் எது உண்மை என்று அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தெரியவரும்.

முதலில் தனக்கும் இந்த தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றது பாக்கிட்த்தானம். பிறகு அவர்களிடத்து உள்ள அத்தணை இரணுவத்தையும் எல்லையில் கொண்டு வந்து நிறுத்திக்கொண்டு. போருக்கு நாங்கள் தயார் என்று சொல்கிறது. நீங்கள் தான் சம்பந்த படவே இல்லையே பிறகு எதற்கு நடுங்குகிறீர்கள்.

அப்படியே உங்களை நாங்கள் அடிக்க வேண்டும் என்றால், இனிமேல் ஆப்கானித்தானில் இருங்கும் அமெரிக்க படையை கொண்டு தான் அடிப்போம். அடித்துவிட்டு அடிக்காதிங்கோ அமெரிக்க அண்ணா அடிக்காதிங்கே என்று பதிவு முதல், நாழிதள் வரை எழுதி தீர்ப்போம். நீங்களும் திருடனுக்கு தேள் கொட்டியது போல் மனதுக்குள் அழுவீர்கள்.........

ஆப்பசைத்த குரங்காக நீங்கள் படப்போகும் பாட்டை நாங்கள் பார்த்து நகைக்கும் நாட்கள் தூரத்தில் இல்லை கோமாளிகளே.......

ஆதாரம் வேண்டுமாம் ஆதாரம், பெரியண்ணன் அடிப்பான் அவன் கிட்ட கேளு கொடுப்பான் கிலோ கணக்கிலும் மீட்டர்கணக்கிலும்............

அமெரிக்காகிட்ட சொல்லுங்க நாங்க அணுவல்லரசு, யாரையும் தாக்கியழிக்கும் திறன் எங்களுக்கு இருக்கு. எங்கள் மீது கைவைத்தல் நடப்பது வேறு என்று அங்கே சொல்லுங்கள் எங்களிடம் இல்லை. நாங்கள் இனி உங்களை ஒன்றும் செய்வது இல்லை, வேண்டும் என்றால் ஒன்றே ஒன்று கடைசியாக செய்யலாம். மாட்டினானே உங்கள் நாட்டின் மடையன் அவனை உலக தொலைகாட்சியின் முன் நிறுத்தி பாக்கிட்தான் அமெரிக்க மக்களாக பார்த்து பார்த்து கொல்ல சொன்னது என்று சொல்ல வைக்கலாம். அதை அமெரிக்க அலை வரிசைகள் மூன்று நாட்களுக்கு ஒளிபரப்பும். பிறகு இருக்கிறது கச்சேரி உங்களுக்கு. ஆதாரம் வேண்டுமாம் ஆதாரம்..........

7 comments:

')) said...

அட!!!!!!

')) said...

சூப்பர் பாஸு... நல்ல பதிவு

')) said...

வாங்க துளசி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

வாங்க கண்ணன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

//என்ன தான் படைபலம் என்று அவர்கள் வாய்கிழிய கத்தினாலும் அறிவியல் முன்னேற்றத்தில் நமது நாட்டுக்கு அருகில் கூட அவர்கள் கிடையாது. இரசியாவின் துணையுடன் கொண்ட சொற்ப முன்னேற்றங்களாக கொண்டு அவர்கள் போட்ட ஆட்டத்துக்கு எல்லாம் இந்த சந்திர விண்கலம் வயிற்றில் புளியை கரைத்துதான் இருக்கும்.//

சீனா பற்றி மிகவும் குறைந்த மதிப்பீடு இது. பூமியிலிருந்து செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தினால் சமீபத்தில் பெரியண்ணனையே உலுக்கியவர்கள்.

கட்டுரைபற்றி கருத்து சொல்லுமளவிற்கு அனுபவம் போதாது.. :)

')) said...

கையேடு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் சொல்வது சரியே அவர்கள் தொழில் நுட்பங்களை பெருக்கிக்கொண்டு தான் வருகிறார்கள். இல்லை என்று சொல்வதற்கு இல்லை தான். 2001ல் பெரியண்ணனின் உலவு விமானத்தை ஆட்களுடன் பிடித்து வைத்துக்கொண்டு மன்னிப்பு கேட்ட பிறகு தான் ஆட்களை மட்டும் விட்டார்கள். புதிய அணை ஒன்றினை மஞ்சளாற்றின் குறுக்கே கட்டி வழக்கத்திற்கு மாறாக வேகமாக அதை நிறப்பியது.

நாட்டின் தேவைக்காக என்று எல்லா பக்கங்களிலும் அதிவேக சாலைகளை அமைத்தது என்று இருந்தாலும். அவர்களது அறிவியல் முன்னேற்றம், குழந்தைகள் குடிக்கும் பால் தூளில் மெலமைனை கலந்து விற்று, இன்றைக்கு ஆயிரக்கணக்கான கைகுழந்தைகள் சிறு நீரகம் இழந்து நிற்கிறார்கள்.

இன்னமும் தோன்டப்போனால் என்ன என்னவெல்லாம் வருமோ வெளியிலே........

தான் சரியாகத்தான் செயல் படுகிறோம் என்றால் பக்கத்துவீட்டு மனிதனை பார்த்து போட்டி போடுவான் ஏன். அவன் மேல் வரும் பயம் தானே காரணம், அதுவும் அவன் இன்னமும் 10 ஆண்டுகளில் நிலாவிற்கு செல்வான் என்றால் உடனே இப்பவே நாங்கள் சென்றோம் பார் என்று காண்பிக்கும் அவசரத்தை சொன்னேன்.

இந்தியாவின் எல்லா செயல்பாடுகளுக்கும் பாக்கிட்தான் மூலம் தொடர்ந்து இரசியா வீழ்ந்ததில் இருந்து இப்படி தொந்திரவுகளை கொடுப்பதே அவர்களுக்கு வேலை.

அதுவும் ஐ நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆகிவிடக்கூடாது என்றதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

ஐ நா துவங்கிய போது, நம்மை வந்து சேர்ந்துகொள்ளும் படி அழைப்பு விடுத்த போது நேரு, சீனாவை முதலில் சேர்த்துக்கொள்ளுங்கள் பிறகு நாங்கள் வருகிறோம் என்று சொன்ன நம்மை சேர்த்துக்கொள்ள கூடாது என்று அடம்பிடிக்கும் அவர்களது அரசியல் அடாவடி தனத்தையும் தான் சொல்ல வந்தேன்......

')) said...

நீண்ட விளக்கத்திற்கு நன்றிங்க திரு.பனிமலர்.

கண்டிப்பாக நீங்கள் குறிப்பிட்டுள்ள பலவற்றுள் எனக்குடன்பாடுண்டு. ஆனால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இணையான எதிரியாகவே (போட்டியாளராகவே) கருதவேண்டும் என்று மட்டும் குறிப்பிட விரும்பினேன்.

நன்றி.