Monday, October 27, 2008

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டியது தமிழகம் மட்டும் அல்ல முழு இந்தியாவும் தான்.

இன்றைக்கு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு என்று சொன்னாலே என்னவோ ஒரு நாட்டு துரோகியை பார்ப்பது போல் ஒரு கூட்டம் பார்க்கவும், எழுதவும், பேசவும் செய்துக்கொண்டு இருக்கிறது. அதோடு மட்டும் நில்லாது, ஆதரவு தெரிவிப்போரை கைது செய்யவேண்டும், தூக்கிலிடவேண்டும், இன்னமும் என்ன என்ன கொடுமைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்து கொடுமைகளையும் அந்த ஆதரவு தருவோருக்கு கொடுத்து கொடுமை படுத்தவேண்டும் என்று துடித்துக்கொண்டு இருக்கிறது.

இந்த பசப்பு வார்த்தைகளை தேசியம், இந்தியாவின் ஒற்றுமை, இந்தியாவின் இறையாண்மை, என்று எத்தணை நாட்டுபற்று வார்த்தைகள் உள்ளனவோ அத்துனை வார்த்தைகளையும் அதன் மேல் தேனாகவும், அமிழ்தாகவும் ஊற்றி அந்த வார்த்தைகளின் பெயரில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தரக்கூடாது என்று மறைமுக கட்டளையும் மிரட்டலையும் அந்த கூட்டம் வீசுகிறது.

இதிலே கொடுமை என்ன என்றால், ஆதரவு தெரிவிக்க்லாம் ஆனால், ஆதரவு தெரிவிக்ககூடாது என்று சொல்வது தான் அந்த கொடுமை. குழப்பமாக இருக்கிறதா, எனக்கும் அப்படி தான்.

இலங்கை தமிழர்களுக்காக நாம் நமது வருத்தத்தை தெரிவித்தால் போதுமா, மற்ற படி அரசியல் நடவடிக்கைகளோ, பண உதவியோ, மருத்துவ உதவிகளோ செய்வது எல்லாம் கூடவே கூடாதாம். அது தானாம் அந்த ஆதரவு தெரிவிக்கலாம், ஆனால் ஆதரவு தெரிவிக்கூடாது என்ற தாம்.

அது எப்படிங்க ஆதரவு தெரிவிப்பதாக ஆகும் என்றால், அந்த ஆதரவு மட்டுமே கொடுத்தால் அங்கே இருப்பவர்களது துயருக்கு அது ஒரு நீதியை பெற்று தரும் என்று கேட்டால். இப்படி எல்லாம் நீ பேசினால் நீ நாட்டுக்கு துரோகம் இழைத்ததாக பொருளாக கொண்டு உன்னையும் கைது செய்து இப்போது சிறையிலே போட்டவர்களோ கூட இல்லை திகாருக்கு அனுப்பபடுவாய் என்றும் சொல்கிறார்க.

இவர்களது வார்த்தைகளில் நீதி என்ற பொருளில் ஒரு எழுத்து கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அப்படி உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் தெரிவிக்கவும்.

அப்பாவி தமிழர்களை கொல்லாமல் இருக்குமாறு இலங்கை தேசிய வாதிகளுக்கு அழுத்தம் கொடுங்கள் என்று சொன்னால் அது அவர்களது இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்ததாக அமையும் என்று தைரியத்தின் மொத்த சொந்தகாரி என்று சொல்லிக்கொண்டு அலையும் அந்த அதி விளம்பர பிரியை 'பயத்தில்' நடுங்கு நடுங்கு என்று கை கால்கள் எல்லாம் உதரல் எடுத்தபடி சொல்கிறார்.

சரி அம்மா நீங்கள் சொல்வது சரி என்று எடுத்துக்கொண்டாலும், அந்த தேசியவாதிகளின் இராணுவத்திற்கு நவீன ஆயுத பயிற்சிகளையும், ஆயுதங்களையும் ஒரு பைசா காசுக்கூட வாங்காமல். எப்படி தமிழகத்தின் உழைக்கும் நடுத்தரவர்க்க மக்கள் தாங்கள் வருடம் முழுதும் மழை, புயல், வெள்ளம் என்றும் பாராமல் உழைத்து உழைத்து கட்டிய வரிப்பணத்தில், அவர்களது பணத்தை கொண்டே அவர்களது அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு பயிற்சியும் ஆயுதமும் வழங்குவது மட்டும் எப்படி உங்களுக்கு மனித நேயமாக பட்டது.

சாதாரண வார்த்தைகளில் சொல்வது என்றால் எனது வீட்டு பணத்தை என்னிடம் வரி என்கின்ற பொருளில் வாங்கி எனது வீட்டு தம்பிகளையும், தங்கைகளையும், கொன்று குவித்துக்கொண்டு இருப்பவனுக்கு, இந்த இந்த கத்தியில் குத்து இன்னமும் அழகாகவும் அதிக சிரமம் இல்லாமலும் கொல்லலாம் என்று இந்திய அரசு செய்துகொண்டு இருப்பதை கண்டித்தால். அப்படி சொல்வது பிரிவிணை வாதமாகும் அவர்களை உடனே கைது செய்து அணு அணுவாக இலங்கை தமிழர்களை சிங்களம் கொடுமைபடுத்துவது போல் படுத்தவேண்டும் என்று சொல்லும் தைரிய பெண்மணியாக சொல்லிக்கொள்ளும் பெண்ணே, இது மன நோய் பிடித்தவரின் வாதம் போல உமக்கே தெரியவில்லை சொல்லுங்கள்.

கேள்வி இந்த தைரிய லெட்சுமிக்கு மட்டும் இல்லை, இவரை போல் ஒரு பெரும் கூட்டமே மேடை பேச்சாகவே இதை சொல்லிக்கொண்டும். பிரிவினை பேசுகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் அந்த கூட்டத்தையே கேட்கிறேன், நீங்கள் சொல்வதி எள்ளவேயானும் நீதியுண்டா??????????????????????????

உண்மையில் இலங்கை தமிழர்களது நலனுக்கு எதிராக பொருளுதவிகளும் சரி, ஆயுத உதவிகளும் செய்யும் வரையில் தமிழர்கள் யாரும் வரியே கட்டக்கூடாது. அப்படி வரி பணம் கட்டமுடியாது என்று சொன்னால் எத்தணை காலத்திற்கு மற்ற மாநிலங்கள் பணம் கொடுத்து பொருளதவி செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

இப்படி மேடைகளில் பேசுவதோடு நில்லாமல், ஆயுதம் தூக்காமலே இந்திய அரசை நமது கோரிக்கைகளை நிரவேற்றிக்கொள்ள முடியும். இன்றையில் இருந்து இனியாரும் வரிக்கட்ட போவது இல்லை என்று முடிவு எடுப்போம், தமிழர்களுக்கு முழு ஆதரவை அளிப்போம்.

இந்த செய்கையையும், அந்த கூட்டம் ஓடி வந்து இதுவும் நாட்டு துரோகம் தான் என்று வாதிட்டு, தமிழர்கள் அனைவரையும் சிறையில் இட்டு உத்திரபிரதேசத்து ஆட்சி தான் இனி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரையில் போகக்கூடும்.

அதற்கு நாம் சொல்வோம், கார்கில் போர் மூண்ட போது தமிழகம் கொடுத்த நண்கொடை அளவிற்கு வேறு எந்த மாநிலமும் கொடுக்கவில்லை, நமது மாநிலம் பணத்தை வசூலிக்க துவங்கிய போது தான் மற்ற மாநிலங்களும் அதை பற்றியே சிந்திக்க துவங்கியது. அது மட்டும் இல்லாது குசராத்தில் பூகம்பம் வந்த போதும் கூட அவர்களுக்கு என்று அவர்களது மக்களுக்கு அடுத்து அதிக தொகை கொடுத்து உதவியதும் தமிழகமே.

அன்றைக்கு இந்தியாவின் மற்ற பகுதியில் பாதிப்புகள் நேர்ந்த பொழுது எல்லாம் தமிழர்கள் யாரும் கேட்காமலேயே ஓடி ஓடி உதிவினோமே எதனால் எங்களுக்குள் உருக்கும் மனித நேயமும் சகோதரத்துவமுமே. இன்றைக்கு எங்களுடைய சொந்த மக்களை அடுத்த நாட்டில் அடித்து கொன்று குவித்துக்கொண்டு ஒரு மத வெறிக்கூட்டம் அலைகிறது. எங்களது சொந்தங்களை காபாத்துங்கள் என்று நாங்கள் கேட்டால், காப்பாற்றுவதை விட்டு விட்டு நீங்களும் அடித்தான் எப்படி என்று கேட்போம்.

இந்தியாவின் மேல் தமிழர்கள் காட்டிய அன்புக்கும் பரிவுக்கும் இந்தியா திருப்பிகாட்டும் கைமாறா இது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தரவேண்டியது இந்தியாவின் கடமை அல்லவா தமிழர்கள் இந்தியர்கள் என்றால். அப்படி இந்தியா நடந்துகொள்ளவில்லை என்றால் இந்தியாவே தமிழர்களிடம் பிரிவினையை காட்டியது போல் ஆகாதா.........

சிந்திக்குமா இந்தியா......அதன் அரசியல் நெரியாளர்கள்.

நாங்கள் இரவல் கேட்கவில்லை எங்களது உரிமையை தான் கேட்கிறோம். சும்மா பூச்சி எல்லாம் காட்டாதீர்கள் அந்த கூட்டமே.

5 comments:

')) said...

///அவர்களது இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்ததாக அமையும் என்று தைரியத்தின் மொத்த சொந்தகாரி என்று சொல்லிக்கொண்டு அலையும் அந்த அதி விளம்பர பிரியை 'பயத்தில்' நடுங்கு நடுங்கு என்று கை கால்கள் எல்லாம் உதரல் எடுத்தபடி சொல்கிறார்.///

ஹா ஹா செம டோஸ்

Anonymous said...

சுத்தப்பேத்தல்!

')) said...

மோகன் வருகைக்கும் கருத்தும் நன்றி

')) said...

வாங்க அனானி, எது சுத்த பேத்தல் விளக்கமாக சொல்லவும், ஆர்வமாக எதிர்பார்க்கிறோம் நண்பரே.

Anonymous said...

அனைவரும் பூமித்தாயின் குழந்தைகள் என்பதை

பூமித்தாயே எழுந்து வந்து தான் உணர்த்த வேண்டும்.