Sunday, December 28, 2008

மக்களாட்சி தத்துவங்கள் அழிந்துகொண்டு வருகிறதா??????


இன்றைக்கும் பசுமையாக நினைவில் இருக்கிறது அந்த காட்சிகள். நண்பர்களின் பெற்றோர்களை விமானம் கூட்டிச்செல்லும் படிக்கட்டுகளின் வரையில் சென்று வழியனுப்பி வைத்தவைகள். அங்கே அப்போது காவலர்கள் இருந்தது இல்லை, பதிலாக விமான நிறுவன ஊழியர்கள் இருப்பார்கள். என்ன நீங்களும் செல்லவேண்டும் என்று இருக்குமே என்று அவர் பகுடி செய்ய வேதணை சிரிப்போடு வீடு வருவோம்.



ஆனால் இன்றைக்கு நடப்பது என்ன, பயண சீட்டு இல்லாமல் விமானதளம் அருகில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தல் கூட பிடித்து விசாரிக்கும் நிலையில் உலகம் இருக்கிறது. மக்கள் கூடும் பொது இடங்களில் ஓயாமல் ஒலிக்கும் ஓசை இது, சந்தேகிக்கும் படி பொருளோ நபரோ இருந்தால் எங்களுக்கு தகவல் கொடுக்கவும் என்று 2 நிமிடங்களுக்கு ஒரு முறை அனைத்து நாடுகளிலும் சொல்லப்படுவதை தவறாமல் காணமுடிகிறது.



யாரோ சிலர் செய்யும் செயல்களுக்கு இப்படி எவ்வளவு மக்கள் அவதியுறுவது. ஒரு 17, 20 மனிதர்கள் விமானதளத்தில் குற்றம் செய்தார்கள் என்றதற்காக எத்தணை கோடி மக்கள் 3 மணி நேரம் 4 மணி நேரம் வரிசையில் நின்று தனது உடமைகளை பரிசோதணைக்குள்ளக்க வேண்டும்.



அதிலும் தப்பி தவறி இசுரேலு எதுவும் போய்விட்டீர்கள் என்றால் அவ்வளவுதான், அவர்கள் படுத்தும் பாடுக்கு இனி அந்த நாடு பக்கம் தலைவைத்து படுப்பது கூட இல்லை என்று முடிவுகட்டி விடுவீர்கள். அந்த அளவுக்கு பாதுகாப்பு கெடுபிடிகள் அங்கே.



மக்களாட்சியில் அனைவருக்கும் சம உரிமை கொடுக்கப்படவேண்டும் என்றதில் ஒருவருகும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதே வேளையில் ஒரு சிலர் குற்றம் செய்தார்கள் என்றதற்காக அனைவரையும் குற்றவாளிகள் போல் நடத்துவதையும் ஒருவரும் ஒத்துக்கொள்ள முடியாது.



எங்களை ஏன் குற்றவாளிகைகளை போல் நீங்கள் நடத்த வேண்டும். நாட்டில் இருக்கும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு ஒழிக்க எத்தணையோ நிறுவணங்கள் மக்களது வரிப்பணத்தில் இயங்கிக்கொண்டு இருக்கிறது உலகின் அத்தணை நாடுகளிலும்.



வெடிகளை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் ஒன்றும் காற்றில் இருந்து பெறப்படுவது இல்லை. அவைகளை கொணர்ந்து கொடுப்பதற்கு என்ற முகவர்களும் மற்றும் நிறுவணங்களும் உண்டு. அவர்களை தணிக்கை செய்தாலே பாதி வேலைகள் முடிந்தார்போல். அது மட்டும் அல்லாது கடத்தலில் வரும் பொருட்களை கண்டு பிடிக்கவேண்டியது கடலோர காவல்படையின் (காவலர்கள், சுங்கதுறை, கப்பற்படை) கடமை. எங்களுக்கு தெரியாமல் என்று எத்தணை நாட்கள் காரணம் சொல்லிக்கொண்டு இருக்க போகிறீர்கள்.



தன்னையும் மாய்த்து ஆயிரம் ஆயிரம் உயிர்களையும் பழிவாங்கும் மனிதனின் தனிமனித இலாபம் என்ன என்று உலகுக்கு தெரியாதா. அப்படி கிடைக்கப்பெறும் ஆதாயம் அவர்களுக்கு கிடைக்காமல் செய்ய முடியாதா என்ன ஒரு நாட்டால். அப்படி அந்த பொருள் பேசிய வண்ணம் அவர்களது குடும்பத்திற்கு கிடைக்கவில்லை என்று தெரிந்தால் அடுத்தவன் அதே போல் தன்னை பலியிட்டு குடும்பத்தை காப்பாற்ற நினைப்பானா........இது எல்லாம் அரசாலும் மக்களாட்சியாலும் முடியாத செயல் என்று ஒருவராலும் ஒப்புக்கொள்ள முடியாது.



ஒரு குறிப்பிட்ட மதம், இனம், குழு, தீவிரவாதத்திலும், பயங்கரவாதத்திலும் ஈடு படுகிறது என்று சொன்னால். முதலில் அந்த இனத்தையே ஒதுக்கிவைபோம், தணிக்கை செய்யவோம். அந்த இன மத குழிவில் யார் யார் எல்லாம் இப்படி செய்கிறார்கள் என்று தெரியும் வரையில் ஒதுக்கிவைப்போம். அதைவிடுத்து அந்த இன,மத,குழுவையும் நம்மோடு சேர்த்துக்கொள்வோம் என்று சொல்லிக்கொண்டு, சம்பந்தமே இல்லாத மக்களை எல்லாம் குற்றவாளிகள் போல் ஏன் நடத்தவேண்டும்.



நல்லபடியாக நடக்கும் வரையில் தான் உரிமைகள் எல்லாம், என்றைக்கு பாதை மாறுகிறதோ அன்றோடு இந்த வாழ்க்கை எல்லாம் இல்லை என்று அந்த இன,மத,குழுவில் உள்ள அனைவருக்கும் புரியும் பொழுது. நாம் சென்று அந்த குற்றவாளிகளை பிடிக்கவேண்டாம் அவர்களே காட்டிக்கொடுப்பர்கள், ஒதுக்கியும் வைப்பார்கள், விரட்டியும் விடுவார்கள்.


மக்களாட்சி தன்னை சீர்தூக்கி பார்க்கும் நிலைக்கு வந்து வெகு நாட்கள் கடந்துவிட்டது. சிந்திப்பர்களா, நமது சட்ட வல்லுனர்களும், அரசியலர்களும். சுதந்திரம் சுதந்திரத்தின் கையையே கட்டிப்போட்டு விடக்கூடாது.

(படம் நன்றி குமுதம் இணையதளம்)

2 comments:

Anonymous said...

//ஒரு குறிப்பிட்ட மதம், இனம், குழு, தீவிரவாதத்திலும், பயங்கரவாதத்திலும் ஈடு படுகிறது என்று சொன்னால். முதலில் அந்த இனத்தையே ஒதுக்கிவைபோம், தணிக்கை செய்யவோம். அந்த இன மத குழிவில் யார் யார் எல்லாம் இப்படி செய்கிறார்கள் என்று தெரியும் வரையில் ஒதுக்கிவைப்போம். அதைவிடுத்து அந்த இன,மத,குழுவையும் நம்மோடு சேர்த்துக்கொள்வோம் என்று சொல்லிக்கொண்டு சம்பந்தமே இல்லாத மக்களை எல்லாம் குற்றவாளிகள் போல் ஏன்//

ஆஹா அழகு. முஸ்லீம்கள் தீவிரவாதிகள் முஸ்லீம் மதத்தினரை ஒதுக்கி வைப்போம். ஹிந்துக்கள் குண்டு வைத்து கொன்றார்கள். ஹிந்து மதத்தினரையும் ஒதுக்கி வைப்போம். அப்புறம் ......... ....., .... .... .
எல்லாரையும் ஒதுக்கி வைத்து விட்டு யார் வாழ்வது.

')) said...

உங்களுக்கு இருக்கும் அதே கோபம் தான் எனக்கும் நண்பரே. நீங்கள் சொன்ன இரண்டும் மதமாக பார்ப்பதை விடுத்து குழுவாக பாருங்கள் தீர்வு கிடைக்கும்........