Sunday, September 28, 2008

அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் மெக்கைன்னு மற்றும் ஒபாமாவின் முதல் விவாத மேடை

ஒவ்வொரு முறை அதிபர் தேர்தல் வரும் போதெல்லாம் இப்படி ஒரு விவாதத்தை நடத்தி மக்களுக்கு ஒரு எண்ண ஆக்கம் நிகழ்த்துவது சிஎன் என் தொலைகாட்சியின் வழமை. அப்படி ஒரு விவாதத்தை நேற்று நடத்திகொடுத்தது.

விவாதத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் இதோ இங்கே உள்ள தொடுப்பை சொடுக்கவும், அவர்களை இணையத்தில் முழு விவாதத்தையும் பார்க்கலாம். மூன்று பாகங்களாக பிரித்து கொடுத்துள்ளார்கள் பார்க்கவும்.

http://www.cnn.com/video/#/video/politics/2008/09/26/sot.debate.obama.mccain.military.strategy.cnn?iref=mpvideosview

விவாதத்தின் முக்கிய பொருட்களும் இருவரது பேச்சும்

முதலில் விவாதம் முடியும் வரை ஒபாமாவையை ஒரு முறைகூட பார்க்காமல் தவிர்த்தது ஏன் என்று மெக்கைன்னு விளக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். ஒபாமாவை பார்ப்பதற்கு அவருக்கு இவ்வளவு பயமாக இருந்திருக்கலாம் அல்லது இவனை எல்லாம் என்ன பார்த்து பதில் சொல்வது என்ற திமிராகக்கூட இருக்கலாம்.

உலகமே எதிர்பார்த்து இருக்கும் ஒரு பொது மேடையிலே இப்படி ஒரு சின்னத்தனமாக நடந்துகொள்ளும் விதம் மெக்கைன்னின் தடுமாற்றத்தின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது. இப்படி எல்லாம் நடந்துக்கொண்டால் தான் நல்லது என்று எடுத்து சொல்ல அவ்வளவு மக்கள் இருந்தும் ஏன் இந்த இருமாப்பு என்று தெரியவில்லை.

சரி இந்த கர்வம் அவரது விவாதத்தில் தெரிந்ததா என்றால், தமிழ்மணத்தில் மக்கள் பொழுது போக்குகாக போடும் மொக்கை பதிவுகளை விடக் கேவலமாக இருந்தது அவரது பேச்சு.

முதல் கேள்வியாக சரிந்து உரு தெரியாமல் சென்று கொண்டு இருக்கும் பொருளாதாரத்தை எப்படி சரி செய்ய போகிறீர்கள் என்று கேட்டால், அதற்கு மெக்கைன்னு சொல்கிறார் இப்படி.

வேலை தரும் நிறுவனங்களுக்கு 35% இருக்கும் வரிவிதிப்பை 11%மாக குறைப்போம். அப்படி செய்வதால் அவர்கள் இன்னமும் அதிக வியாபாரத்தில் முதலீடு செய்வார்கள். அதன் மூலம் பெருகும் வேலை வாய்ப்பால் இந்த பொருளாதாரமே அப்படியே வானுக்கே போகப்போகிறது பாருங்கள் என்று ஒரு போடு போட்டார் பாருங்கள்......

அமெரிக்காவில் நடக்கும் வேலைகளை எல்லாம் உலகம் முழுதும் உள்ள நாடுகளிடம் கொடுத்து செய்ய சொல்லவேண்டுய அவசியம் என்ன வந்தது. குறைந்த முதலீட்டில் இமாலய இலாபம் என்று வருவதால் மட்டுமே. இது பொருளாதாரமோ வியாபாரமோ இன்னமும் என்ன என்ன படிப்புகள் எல்லாம் இருக்கிறதோ அதன் அரிச்சுவடி கூட தெரியாதவனுக்கே தெரியுமே. அவர்களது இலாபத்தில் 35% சதவிகிதம் விதித்துள்ள வரியை இவர் 11%மாக் குறைப்பாராம்.

இதனால் என்ன நன்மை சம்பளம் வாங்கும் மக்களுக்கு நிகழப்போகிறது என்று கேட்டால் ஒன்றும் இல்லை. அந்த 35% விகித வரியிலும், எப்படி எல்லாம் கள்ள கணக்குளை காட்டவேண்டும் என்று அம்பானிகளுகே கத்து தரும் அமெரிக்காவுக்கு இனிமேல் வரியே இல்லை என்று சொல்கிறார் இந்த மனிதன் மெக்கைன்னு.

எந்த ஒரு நாடாக இருந்தாலும், அந்த நாட்டின் அரசாங்கம் நாட்டில் வரும் வரிப்பணத்தில் தான் தனது வளர்ச்சி திட்டங்களையும் வேலைகளையும் செய்யும். அதன் கொள்கைகளையும், செயல்களையும் நடத்திக்கொடுக்கும் நிறுவணங்களுக்கு இவர்களது வேலைகளை செய்து தரும் பணியை ஒப்படைப்பது தான் இத்தணைகாலமாக நடந்துவரும் வழமை. அதை விடுத்து அரசாங்கத்தை போண்டியாக ஒரு திட்டத்தை கையில் வைத்துக்கொண்டு இருகிறேன் என்று உளருவார் என்று எதிர்பார்க்கவில்லை.

ஒபாமா என்ன சொன்னார், நாட்டில் இருக்கும் வேலைகளை திரும்பவும் நாட்டுக்கே கொண்டு வருவது தான் எங்களது முதல் வேலை. நாட்டில் வேலை வாய்ப்புகளை பெருக்கி அடிமட்டத்தில் இருக்கும் மனிதனும் 8 ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டு இருந்த வாங்கும் திறனுக்கு அழைத்து செல்வது தான் சரியான பாதையாக இருக்க முடியும். அதை விடுத்து பணம் குவிந்தவர்களிடம் இன்னமும் பணத்தை குவிக்கும் வேலை எல்லாம் வாதத்திற்கு கூட சரி இல்லை என்று அல்லவா சொன்னார்......

இரண்டாவதாக ஈராக்கின் பிரச்சணையை பற்றி உங்களது கருத்து என்ன என்று கேட்டதற்கு மெக்கைன்னு இப்படி பதிலுரைகிறார்.

நாங்கள் ஈராக்கில் வெற்றி பெற்று கொண்டு இருக்கிறேம் இன்னமும் வெற்றி பெற்றுகொண்டே இருப்போம், வெற்றி பெற்றுக்கொண்டு தான் இருப்போம் என்றார்.

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற தத்துவம் போலும், இத்தணை முறை சொல்கிறார் போலும். அதுவும் அங்கே போராடும் தளபதியின் பணி மகத்தான பணி என்றும் அவரது வீர தீரங்களையும் வீரர்களது வீரத்தையும் புகழ்ந்து தள்ளினார் பார்க்கணும்.......

இங்கே மெக்கைன்னுக்கு ஒரு கேள்வி, பின்ன என்ன ஐயா சொத்தையான ஒரு தளபதியையா கொண்டு இருக்கும் உங்கள் இராணுவம், அல்லது அல்பைகளாக கொண்ட ஒரு அணியையா அயல் நாட்டு சண்டைக்கு ஒரு நாடு அனுப்பும். எந்த நாடாக இருந்தாலும் தனது மிகச் சிறந்த ஒரு தளபதியையும் அவரது கருத்துக்களை அப்படியே அச்சு பிசக்காமல் செயலாக்கும் ஒரு மிக சிறந்த ஒரு அணியும் தான் நாடு அனுப்புமே தவிற பாக்கிட்த்தான் நடத்தும் கபட நாடகம்போல பேருக்கு ஒரு குழுவை அனுப்பிவிட்டு ஒரே இரவில் ஆப்கானித்தானில் இருந்த ஒன்னரை இலட்சம் பேரும் காணாமல் போனார்கள் என்று கள்ள கணக்கை காட்டும் அணியையா அனுப்பும் அமெரிக்கா......

ஏன் இந்த புகழ்ச்சி, தனது முதுகை தானே சொறிந்துகொள்ளும் வேலை, கேள்வி என்ன ஈராக்க் நடவடிக்கை பற்றிய கருத்து. அதுக்கு எங்களது இராணுவம் அது இது என்றால் அப்போ ஒபாமா என்ன இந்தியாவின் அதிபர் தேர்தலுக்க நிற்கிறார் மெக்கன்னு, அவரும் அதே பெருமை மிகு முப்படைக்கு தலைவனாகத்தான் போடியிடுகிறார் நினைவில் கொள்ளவும்.

ஒபாமா இப்படி பதிலுரைகிறார், 9/11 தாக்குதலக்கு திட்டமிட்டவன் ஒசாமா பின் லேடன், அவன் பதுங்கி இருப்பது ஆப்கானிதானிலோ அல்லது அதன் அண்டை நாடானா பாக்கிட்தானிலோ அவனை இன்னமும் பிடித்து தண்டித்த பாடாக தெரியவில்லை. அல்லது எப்போது பிடிப்போம் என்றோ தெரியவில்லை. அந்த முக்கியமான வேலையை விட்டு விட்டு ஈராக்கில் சென்று அமெரிக்க இராணுவத்தை பலிகொடுத்துக்கொண்டு இருப்பது யாருக்காக என்று கேட்டிகிறார். 4000 வீரர்கள் இது வரையில் மடிந்திருக்கிறார்கள் 30,000 வீரர்கள் இது வரையில் ஊனமாகி வந்திருக்கிறார்கள். இவ்வளவு விலையை கொடுத்தும் ஈராக்கில் அமெரிக்க இரணுவ கட்டுப்பாட்டில் நாடு வந்துவிட்டதா என்றால் இல்லை.

பிறகு வெற்றி கொண்டோம் என்றால் எதை வெற்றி என்று சொல்கிறார் மெக்கைன்னு என்றால் இப்படி விவாதத்தை திசை மாற்றும் செயலாக கைக்காப்பை காட்டி ஒரு அன்னை இப்படி சொன்னார் என்று குரல் நடுங்க ஒரு உருக்கமான கதை வேறு. இப்படி ஒரு சப்பைக்கட்டு கட்டத்தான் பலியாடாக உங்களை உங்களது கட்சி அங்கே அனுப்பியதா மெக்கைன்னு வெட்க்கம்.

இது வரையில் மில்லியன் கணக்கை எல்லாம் தாண்டி இட்டிர்லியன் கணக்கில் அங்கே பணத்தை கொட்டியது யாருக்கா, எதற்காக, அங்கே அணு ஆயுத தயாரிப்பு நடக்கிறது என்று சென்ற இராணுவத்தால் ஒரு ஆதாரத்தை கூட ஈட்டமுடியாத நிலையில், அங்கே மக்களாட்சியை ஈட்டுத்தருவோம் என்று சொல்லிக்கொண்டு இவ்வளவு பணத்தை கொட்டவேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார் ஒபாமா. இந்த பொருளற்ற நடவடிக்கையை விட்டு விட்டு ஒசாமாவை பிடித்து தருவதாக சும்ம ஒரு பொய்யை சொல்லிவிட்டு தனது இராணுவத்தை காட்டிக்கொடுத்த முசாரப்பை இன்னமும் நம்பிக்கொண்டு 10 பில்லியன் இடாலர் வரை கொட்டிக்கொடுத்ததை எல்லம் நிறுத்துவது மட்டும், இல்லாது.

அமெரிக்க படையே நேரடி தேடுதலில் இறங்க வேண்டும் என்று அல்லவா பதிலுரைத்தார். இந்த 6 ஆண்டுகளில் நல்ல பொருட்க்களை தேடி வைத்துக்கொண்டு இன்றைக்கு அங்கே ஆப்கானில் இருக்கும் அமெரிக்கை படையை நோக்கி அல்குவைதா இராணுவ தாக்குதலை தொடுக்கிறது. அதை எதிர்கொள்ள அமெரிக்க இராணுவம் திணருகிறது. உடன் இருந்து காக்கவேண்டிய பாக்கிட்த்தான் இராணுவமோ எதிரிகளுக்கு அமெரிக்க இராணுவ இரகசியங்களை காட்டிக்கொடுத்து எங்கே எப்போது தாக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்து மறைமுகமாகவே நண்பன் என்று சொல்லி முதுகில் குத்தும் பாக்கிட்த்தானின் போக்கிரித்தணத்திற்கு ஒரு முடிவுக்கட்ட வேண்டும் என்று பொருப்புடனும், தள அறிவுடனும், கடமையாக கருதும் ஒபாமா சொன்ன செய்தியை, என்ன அழகாக திரித்து விடுகிறீர்ரே மெக்கன்னு, நீர் என்ன உண்மையில் ஒரு மக்கைன்னு தானோ......

உலகில் பெருகிவரும் சக்திவள குறைபாட்டை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு மெக்கைன்னு இப்படி சொல்கிறார். 42 அணு உலைகளை தளமமைத்து அதில் வரும் சக்தியை கொண்டு சமாளிக்க போவதாக சொல்கிறார். இன்றைக்கு உலகம் முழுக்க எதிர்கொள்ளும் எரிஎண்ணை தட்டுபாடு தான் அந்த கேள்வியின் முக்கிய பொருள். ஆனால் அதை எல்லாம் விட்டு விட்டு அணு உலைகளை அமைப்பதால் நிறைய வேலைகளை பெருக்க முடியும் என்று சொல்கிறார். கல்லையும் மண்னையும் சுமக்கின்ற வேலைதான் அமெரிக்கர்களுக்கு சரி என்று முடிவு கட்டிவிட்டீர்கள் போலும் மெக்கைன்னு.

மாற்று எரிசக்த்தி என்ற ஒரு பதம் கூட இல்லை என்றது போல் காட்டிக்கொள்ளும் இந்த மனிதனை தேர்ந்தெடுத்தால் அமெரிக்க மக்கள் எல்லாம் தங்களது வண்டிகளை எல்லாம் இனி குடி இருப்புக்களாக்க மாற்றிக்கொண்டு நாடோடிகளாக அலைய வேண்டியது தான். இந்த கொள்கையை ஒன்றையாவது ஒபாமா கட்சியிடம் கற்றுக்கொள்ள முயற்சியாவது செய்யுங்கள் மெக்கைன்னு.

மெக்கைனின் அரசியல் பேச்சுக்களை கேட்டதும் இல்லை படித்ததும் இல்லை. ஆனால் ஒன்றும் மட்டும் அவரை பற்றி கேள்வி பட்டிருந்தேன். தான் ஒரு முறை தனது படையுடன் எதிரியின் கைகளில் மாட்டிக்கொண்ட போது, மெக்கைன்னை மட்டும் தப்பிக்க வைக்கும் திட்டத்தை முன்வைத்த போது, தனது அணியினர் இல்லாமல் நான் மட்டும் என்றால் அவர்களுடன் இறக்க நானும் தயார் தான் என்று சொன்னவர் என்ற செய்தியை மட்டும் கேள்வி பட்டு இருக்கிறேன்.

ஒபாமாவை பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது என்றாலும் நன்றாக பேசவும் அரசியல்கள் செயல்பாடுகளும் அறிந்தவர் என்று கேட்டதுண்டு.

இந்த அடிப்படையில் இந்த விவாதத்தை பார்த்ததில் மெக்கைன்னு ஒரு மெகப்பெரிய ஏமாற்றம். ஒபாமா நன்றாக விவாதித்தார்.

வருகின்ற அக்தோபர் 3ஆம் தேதி துணையதிபர் போட்டியாளர்கள் விவாதம் வருகிறது பார்ப்போம்.

2 comments:

Anonymous said...

//ஒவ்வொரு முறை அதிபர் தேர்தல் வரும் போதெல்லாம் இப்படி ஒரு விவாதத்தை நடத்தி மக்களுக்கு ஒரு எண்ண ஆக்கம் நிகழ்த்துவது சிஎன் என் தொலைகாட்சியின் வழமை. அப்படி ஒரு விவாதத்தை நேற்று நடத்திகொடுத்தது.
//

This information is incorrect. The debates are organized by an independent non-profit organization called "Commission on Presidential Debates". CNN, like all other television and radio networks, just broadcasts the event. That is it.

')) said...

அனானியாரே கருத்தாக்கம் உருவாக்குவது சிஎன் என்னின் வழமை என்று பொதுவாக சொன்னேன். விளக்கத்திற்கு மிக்க நன்றி.