Sunday, September 28, 2008

இராமன் தேடிய சீதை – திரைவிமர்சனம்

படம் துவங்கியது முதல் இறுதிவரை ஒருவித இருக்கம் படம் முழுவதும் இருப்பது திரைக்கதைக்கும் இயக்குனருக்கும் கிடைத்த வெற்றி. இந்த மாதிரியான கதை பின்னனியில் படங்கள் வந்து வெகுகாலம் ஆனகாலத்தால் படம் அனேக மக்களை கவருவதில் வெற்றியை ஈட்டும்.

திருமணத்திற்கு முன்னே உண்மைகள் தெரிந்தாக வேண்டும் என்று நாயகன் சொல்லும் இடங்களிலும் சரி அதற்கு அந்த பெண்கள் சொல்லும் இடங்களிலும் சரி உண்மை வாழ்க்கை கசப்பு என்று வெளிப்படையாக அழக்காக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

மனதளவில் பாதிப்புக்குள்ளானவன் என்ற குறை இருந்தாலும், அதற்கு பிறகு வந்து இறங்கும் அத்தனை இடிகளிலும் கலங்கிப்போகாமல் இருக்கிறான் என்று காட்டியதற்கு இயக்குனருக்கு பாராட்டு. எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ என்ற குரல் கேட்டுவிடுமோ என்று கடைசிவரையில் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது.

ஒவ்வொரு முறையும் தன்னை வேண்டாம் என்று சொன்ன நபர்களை வாழ்க்கையில் திரும்ப பார்க்கும் போதெல்லாம் எழும் வெறுப்பை மாற்றி கல்லூரி காதலர்கள் நடந்துகொள்வது போல் ஒரு அறியாத்தனமாக காட்டும் காட்சிகள் அருமை.

அதிலும் அந்த நாகர்கோவில் காட்சிக்கள் அருமையிலும் அருமை. திரைக்கதையின் விளையாட்டும் இயக்குனரின் கை வண்ணமும் அங்கே தெரிகிறது.

படத்தில் குறைகள் என்று எடுத்து சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும்

1) பசுபதியை பார்க்கும் போது பார்த்திபனின் குரலும் நக்கலும் இல்லையே என்று மனம் நம்மையும் அறியாம்ல் தேடுகிறது (சபாசு படத்தின் பாதிப்பு போலும்)

2) படம் முழுக்க பாக்கியராசின் காட்சிகளாகவே வருகிறதே அவரது குரலோ நகைச்சுவையோ இல்லையே என்று தோன்றுகிறது.

3) இத்தணை நாளாய் போன வித்தியாசாகரின் இசையை கேட்க்க முடிந்தாலும் பாடல்களில் அந்த அழுத்தங்கள் குறையாகவே இருக்கிறது. உங்களிடம் இருந்து இன்னமும் எவ்வளவோ எதிர்பார்க்கிறோம் வித்தியாசாகர் குறிப்பாக அதிகமாக பாடல்களை.....

4) நெடுமாறனின் சண்டைக்காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். சண்டை போட்டால் தான் வீரன் என்ற இலக்கணத்தை இவரும் விடாமல் பிடித்துக்கொண்டு இருப்பது, இவ்வளவு நல்ல கதையில், பால் திரிந்து போகும் விதமாக பட்ட புளிப்பு போல் ஆனது.

இவைகளை தவிர படம் நன்றாக வந்து இருக்கிறது. பாக்கியராசை போல் இவரும் நிறைய கதைகள் கொண்ட படமாக கொடுப்பார் என்று எதிர்பார்ப்போமாக... வாழ்த்துகள் செகன்நாதன்.

2 comments:

Anonymous said...

எனக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது...அந்த மழை நின்ற பின்பும் பாடல் அருமையாக இருக்கிறது...

மழை நின்ற பின்பும் தூறல் - சில அனுபவங்கள்

நேரம் கிடைத்தால் இந்த பதிவையும் படிக்கவும் :-)

')) said...

புனிதா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, நல்ல படம் தான் கட்டாயம். பார்க்கலாம் வியாபாரமாக இந்த படம் வெற்றி கொள்கிறதா என்று.