Sunday, September 14, 2008

மோடியா!!!! அத்வானியா!!!-- இருவரில் யாரை பிரதமர் ஆக்குவது பாசகா வின் கவலை

குசராத்து கூட்டு கொலைக்கு முன்னாள் வரையில் பாசாகவின் இரும்பு மனிதர் என்று பேசப்பட்டவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான அத்வானி தான் கட்சியின் தலைவர் மற்றும் அடுத்த பிரதமர் என்று அனைவராலும் ஆரூடம் சொல்லப்பட்டவர்.

ஒரே ஒரு கூட்டு கொலை குசராத்தில் அதுவும் எழுந்து ஓடக்கூட முடியாத தனது இனத்தையே சார்ந்த வயது முதிர்ந்த மக்களை அவரகளது அதிகாலை தூக்கத்தில் வண்டி வண்டியாக எண்ணையை ஊற்றி கொளுத்திய செய்க்கைக்கு பின் அதை மற்ற ஒரு இனத்து மக்களின் மேல் பழி போட்டு. அடித்து, துவைத்து ஊருக்கு வெளியில் காயப்போட்ட பிறகு, பத்திரிக்கைகளுக்கு சொன்னார் "இவன்க எல்லாம் இங்கேயும் இந்த இடத்திலேயும் வந்து நல்லா இனபெருக்கம் செய்யுரான்னுக என்று".

இந்த கூட்டு கொலைக்கு பிறகு அத்வானியாவது புத்வானியாவது. இனி குசராத்தின் நிரந்தர முதல்வர் மோடி, ஏன் இந்தியாவின் பிரதமரும் மோடி தான். இவ்வளவு ஏன் அமெரிக்க அதிபர் பதவிக்கு கூட தகுதியான ஒரே தலைவர் மோடி தான்.

இதை எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் அந்த கட்சியின் நிர்வாகிகளும் சரி. மற்றவர்களும் சரி இன்னமும் மெக்கைனு ஒபாமா என்று ஆரூடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதை இதை சொல்லி அவரை இந்தியாவிலேயே கட்டி போடாதீங்க ஐயா. உலக்குக்கும் கொஞ்சம் கர சேவை செய்யட்டும் மகிழ்ச்சிய வழியனுப்பி வையுங்கள்.

இந்திய பாராளுமன்ற வரலாற்றிலே கூட்டு கூட்டத்தை கூட்டி புதுமையா வாக்கு எடுத்ததை போல் ஏதாவது ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்து குசராத்து, இந்தியா, மற்றும் அமெரிக்காவின் அதிபர் பதவியை ஒரே நேரத்தில் வகிக்க குசராத்தில் ஒரு அவசர சட்டம் இயற்ற சொல்லுங்கள்.

பிறகு துக்ளக் சோவையும் ஞானியையும் கொண்டு அமெரிக்க அதிபர் ஆவதற்கு ஒரு சிரிப்பு வேண்டும் அந்த சிரிப்பை உலகிலேயே மோடியால் மட்டும் தான் முடியும் என்று எழுத சொல்லுவோம்.

பிறகு பாருங்கள் வால் மார்டிலும். சேம்சு கிளப்பிலும் மொத்தமாகவும் சில்லைரையாகவும் கோமைய வியாபாரம் அபாரம பாசாக கட்சி முத்திரையுடன் விற்கலாம். என்ன அருகிலேயே மட்டுகறியும், பன்றிகறியும் இருக்கும். என்ன இருந்த நமக்கு என்ன, நாம கண்டது எல்லாம் பதவியும் பணமும் தானே......

6 comments:

')) said...

//அதை இதை சொல்லி அவரை இந்தியாவிலேயே கட்டி போடாதீங்க ஐயா. உலக்குக்கும் கொஞ்சம் கர சேவை செய்யட்டும் மகிழ்ச்சிய வழியனுப்பி வையுங்கள்.//

:)))))

')) said...

ஏங்க, இப்படி ஆளாளுக்கு இளக்காரமா நினைக்கற அளவுக்கு ஆகிப் போனார் அத்வானி?

Anonymous said...

super
:))))

')) said...

வாங்க கோவி, வருகைக்கு நன்றி.

')) said...

இரத்தனேசு அத்வானியை முதலில் பாசாகவில் மதிக்கட்டும், பிற்கு பொது மக்களான நாம் மதிப்போம். வீட்டில் பையன் சம்பாதிக தொடங்கிவிட்டால் அவன் வீட்டிற்கு அப்பாவாகிவிட முடியுமா....... ஆனால் பாசாக குடும்பத்தில் இது தான் நடக்குது.......

')) said...

வாங்க அனானி, வருகைக்கு நன்றி