Wednesday, December 10, 2008

ஒரு மனநோய்( psycho ) கோமாளி நாட்டின் மனநோய்( psycho ) தளபதியின் கோமாளி தனமான பேச்சு.


இலங்கையை ஆண்டுக்கொண்டு இருக்கும் குடும்பம் இலங்கையின் வம்சாவழியினர் தானே அன்றி அந்த நாட்டில் பிறந்த குடிமக்கள் இல்லை. அவர்கள் அனைவரும் அமெரிக்க குடிமக்கள்.

என்றைக்கு இலங்கையில் காரியம் கையை மீறி செல்கிறதோ அன்றைக்கு அமெரிக்காவிற்கு எங்களை காப்பாத்துங்கோ என்ற உடன் அழைத்துக்கொண்டு போக அமெரிக்க படையே வரும் என்ற தைரியத்தில் இன்னமும் தைரியமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு இருக்கிறது அந்த குடும்பம்.

வேறு ஒரு நாட்டின் குடிமக்கள் இலங்கையில் சென்று ஆட்சி செலுத்தலாம். சட்ட திட்டங்களை வகுக்கலாம், அதிகாரம் செய்யலாம். ஆனால் அங்கேயே ஆண்டு ஆண்டு காலமாக பிறந்து வளர்ந்து வரும் மக்கள் சிங்களம் பேசவில்லை, புத்தணை தொழவில்லை என்ற இரண்டே காரணத்திற்காக மட்டுமே வாழவே தகுதியே இல்லை என்று உரைத்து, ஐநா முதல் ஆப்ரிக்கா அந்த கொடிய காரியங்களை சர்கரையும் நெய்யையும் தடவி விற்று வருகிறது இந்த மனநோயாளி குடும்பம்.

உலகில் எந்த ஒரு நீதி தெரிந்த மனிதனிடமும் சென்று இந்த செயல் சரியா என்றால், எதைகொண்டு அடிப்பார் என்று கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை.

சாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்று பாரதிமுதல், சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் இட்டார் பெரியோர், இடாதார் இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி என்று அவ்வையார் முதல் இன்று இருக்கும் அத்தணை புரட்சி கருத்தாளர்களும் சொல்லிவரும் இந்த வேளையில். இப்படி ஒரு பிற்போக்கு தனமான ஒரு இழி கொள்கையை மனநோயாளியை( psycho ) போல் பரப்பி. அந்த மனநோயாளி செயலுக்கு 100 ஆயிரக்கணக்கில் பிணங்களை அடுக்கி அந்த பிணங்களின் இரத்ததை பருகி குளித்து இன்னமும் என்ன என்ன வன்செயல்கள் செய்ய முடியுமோ அத்தணையும் செய்யும் மனநோயாளி( psycho ) பிணம் தின்னும் குடும்பம் இந்த குடும்பம்.

இந்த மன நோயாளி கோமாளி சொல்கிறார், வைகோவும் பழ.நெடுமாறனும் கோமாளிகளாம்.

மக்களாட்சி நாட்டில் அரசியல் செய்யும் வைக்கோவும், முன்னாளில் அரசியலும் இன்னாளில் மக்கள் இயக்கம் நடத்தும் பழ.நெடுமாறனும் கோமாளி என்று சொல்ல என்ன தைரியம் வந்து இருக்கவேண்டும் அந்த மன நோயாளிக்கு ( psycho ).

நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமாக பிணங்களின் கணக்குகளை பார்த்து இன்றைக்கு இவ்வளவு தான் நாளிழலுக்கு எல்லாம் சொல்லிவிடு என்றும். அப்படியே கொஞ்சம் ஆபாசமாக எண்ணம் வந்தால் இறந்தவர்களை அம்மணமாக்கி தெருமுனையில் சிறுவர் சிறுமியர்கள் பார்ப்பதற்காக அனுப்பியும் வைக்கும் இந்த மனநோயாளி ( psycho ) சொல்கிறார் கோமாளி தனத்தை பற்றி.

முன்பு ஒரு நாள் அனைதுலக மக்களை கூப்பிட்டு கொண்டு புலிகளின் பகுதிக்கு இராணுவமாக சென்ற இந்த மனநோயளியை( psycho ) நோக்கி பறந்து வந்தது புலி குண்டுகளும் எரிகணைகளும். தரையில் இறங்காமலேயே ஓடி ஒளிந்துகொண்டார் இந்த மனநோயாளி( psycho ).

அன்று முதல் 4 மாத காலத்திற்கு இந்த மனநோயாளி( psycho ) எங்கே இருக்கிறார் என்ற தகவல் அவருக்கே கூட தெரிந்து இருக்குமா என்று கூட தெரியவில்லை. ஏன் அப்படி ஓடி ஒளிந்து கொண்டார் இந்த வீரர்.

நாடே இவரது கட்டுப்பாட்டில் என்றும், நாட்டின் பாதுகாப்பு இவரது கையில் என்று அனைத்துலக நாடுகளுக்கு சொல்லி வந்த இவர் அத்துணை மாதகாலம் தலைமறைவாக இருந்தது ஏன் என்று சொல்வாரா இந்த கோமாளி.

தனக்கே பாதுகாப்பு இல்லை என்று ஓடி ஒளிந்து கொண்ட மனிதனால் எப்படி நாட்டையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். அப்படி சொன்னால் அது கோமாளி தனமான பேச்சாகத்தான் இருக்கும். இந்த கோமாளி சொல்கிறார் வைகோவையும் நெடுமாறனையும் பார்த்து.

ஒரு வேளை பைத்தியம் அடுத்தவர்களை பார்த்து சொல்லுமே, நீ பைத்தியம், உங்க அம்மா பைத்தியம் என்று அடுக்கிக்கொண்டே போகுமே அது போல இருக்குமோ. இருந்தாலும் இருக்கும் யார் கண்டது இந்த பைத்தியங்களை...........

முதலில் பிணங்களை அடுக்கி அவைகளின் மேல் நடத்தும் வாழ்க்கையையும், பிற்போக்கு தனமான எண்ணங்களையும் மனதில் இருந்து கழுவி புதுமனிதனாக மாறு. இல்லை என்றால் பேசாமல் பிணம் தின்னும் வேலையை மட்டும் பார். அதைவிடுத்து மனிதனாக மனிதனால் ஆளப்படும் நாட்டைபார்த்து பொறாமை எல்லாம் கொண்டு இப்படி கோமாளி தனமாக பேசிக்கொண்டு அலையவேண்டாம் மன நோயாளியே( psycho ).

5 comments:

')) said...

நெத்தியடி !!!

')) said...

வாங்க ஆதித்தன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இப்படி வேற என்ன என்ன எல்லாம் உளற போகிறாரோ அவரும் அவரது குடும்பமும். இதில் புத்தணின் கொள்கையை கட்டிக்காப்பதாக வேற ஒரு ஊளரள். என்ன நாடோ என்ன மக்களோ....மொத்தமாக கோமாளி நாடுதான் அது போங்கள்.

')) said...

//முதலில் பிணங்களை அடுக்கி அவைகளின் மேல் நடத்தும் வாழ்க்கையையும், பிற்போக்கு தனமான எண்ணங்களையும் மனதில் இருந்து கழுவி புதுமனிதனாக மாறு.//

முகத்தில் உமிழ்ந்தது போல் இருக்கிறது. நல்ல சொல்லி இருக்கிறீர்கள், இதைப் படிக்கும் சிங்கள அடிவருடிகள் மற்றும் தமிழ் விரோதிகளில் ஓரிரருவருக்காவது உறைக்கும்.

')) said...

வாங்க கோவி, கொஞ்சம் விட்டால் அகிம்சை என்றால் என்ன என்று கூட பாடம் நமக்கு நடத்தினாலும் நடத்துவார்கள் இவர்கள்.

')) said...

ஹிட்லரின் மறு உருவமாகத் திகழும் இந்த இனவெறி நாயை ஆதரித்து எழுதும் தமிழ் நாட்டுப் பத்திரிக்கைகளை
ஒதுக்கி ஒழிக்க வேண்டும்.
இந்த வெறி நாய்க்கு உதவும் ரா,நாராயணன் போன்ற தமிழின எதிரிகளுக்கும்,அவர்களுக்குத் தூது பாடும் இந்திய நடிகர்கள் மன்மோகன்,பிரனாப் போன்றவ்ர்களுக்கும் இந்த அவமானம் உரைக்கப் போகிறது விரைவில்.
தமிழகக் காங்கிரசு தன்னையே அழித்து ஒழித்துக் கொள்ளப் போகிறது.