Monday, July 11, 2016

இளிச்சவாயன் இந்தியன் ஏமாறுவதில் அப்படி ஒரு பெருமிதம்

வெளி நாடுகளில் எல்லாம் நல்ல சாலை வசதிகள் இருக்கின்றது. ஒரு இடத்திற்கு போவதென்றால் சட்டு என்று போவோம் என்று கர்வமாகவும் பெருமையாகவும் சொல்லும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நடுவே, இந்தியர்களும் எங்களுக்கும் சாலை வசதிகள் உங்கள் போல் உண்டு என்று சொல்வார்கள்.

ஒவ்வொரு நாட்டின் அடிப்படை தேவைகளில் ஒன்று ஆகுகிறது சாலை வசதி. அப்படி கொடுப்பது அரசின் கடமை. உலக நாடுகளில் முன்னேறிய நாடுகளை போல் நாங்களும் உங்களுக்கு வசதி செய்து தருகின்றோம் என்று சொல்லி இந்திய அரசும் மக்களுக்கு சுங்க சாலைகளை அறிமுகம் செய்தது.

இந்த சுங்க சாலைகள் வருவதற்கு முன்பு வருடம் ரூ200 சாலை வரியாக கட்டினால் போதும். தமிழகத்தில் எந்த இடத்திற்கு வேண்டுமானால் போய் வரலாம். ஆனால் இன்றைக்கு எந்த இடத்திற்கு சொல்வதானாலும் சுங்க வரி செலுத்தாமல் செல்ல முடியாது.

கிட்ட தட்ட ஆங்கிலேயன் காலத்து சட்டம், ஆங்கிலேயன் அமைத்து கொடுத்த சாலையை பயன்படுத்த சுங்கம் என்று சொன்னார்கள்.

ஆனால் இப்போது இந்திய அரசு அமைத்த சுங்கவரி சாலையை பயன்படுத்த இந்தியர்களுகே சுங்கம் என்றது எப்படி இருக்கிறது. சரி சுங்கம் என்று வந்துவிட்டால் கட்டிதான் ஆகவேண்டும். சரி மற்ற நாடுகளில் சுங்கம் செலுத்தவேண்டாம் என்றால் சுங்கம் இல்லா சாலைகள் நாடு முழுக்க உண்டு. என்ன வேலை நேரங்களில் மிகவும் நெரிசலாக இருக்கும் அவ்வலவு தான் சுங்கம் பைசா கட்ட தேவை இல்லை.

ஆனால் இந்தியாவிலோ இருக்கும் ஒரே சாலைக்கு ஆங்காங்கே புறவழி சாலைகளையும் இணைப்புகளையும் மட்டும் கட்டிவிட்டு எவன் எங்கே சென்றாலும் சுங்கம் கட்டினால் தான் ஆச்சு என்றால் எப்படி.

புறவழி சாலைகளையும் அதன் இணைப்புகளும் வேண்டும் என்றால் கூட எதற்கு என்று தான் கேட்க வேண்டும் கொடுக்கலாகாது. எங்களுக்கு வழி செய்து கொடுக்கத்தான் எங்கள் நிலங்களையே கையகப்படுத்தி சாலைகளை அமைத்துள்ளாய். அப்படி இருப்பின் என்னிடம் எப்படி சுங்கம் கேட்க முடியும் கேட்டார்களா இது வரையில்.

ஒரு சில தடங்களில் இன்னும் ஒரு 16 கிமி சென்றால் ஊர் வந்துவிடும் ஆனால் அந்த தூரத்திற்கு சுங்கம் மட்டும் 110 வரை வசூலிக்கிறார்கள்.

இந்தியர்களும் அழகாக சிரித்தபடி சுங்கம் கட்டி பெருமை கொள்கிறார்கள், அட இளிச்ச வாய இந்தியர்களா உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா.......

0 comments: