Thursday, March 8, 2018

இலங்கையை பார்த்து மனித குலமே பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

அன்றைக்கு தமிழர்களை சிங்களர்கள் படு கொலை செய்யும் போது, நாங்களும் தமிழர்களும் வேறு என்று ஒதுங்கி யாருக்கோ என்னமோ நடக்குது என்று இருந்தார்கள் இலங்கையில் ஒரு பிரிவினர்கள்.

இன்றைக்கு அந்த பிரிவினர்கள் தாக்கப்படும் போது உலகுக்கு தெரியாமல் மறைத்து இரும்பு திரையிட்டு பாசகவின் பாணியில் கலவரம் என்ற பெயரில் படுகொலைகள் நடந்துக்கொண்டு இருக்கின்றது.

இரத்த வெள்ளமாக படங்கள் வெளியான போது எல்லாம் வெற்றிலை பாக்கு கறைபடிந்தது போல் பாசாங்கு செய்தவர்களின் ஈர கொலையை அதே பாணியில் இன்று பாசகவின் பாணியில் பிடுங்கி எடுக்கப்படுகின்றது. கோத்ராவின் பெயரில் நடைபெற்ற கருவறுத்தல் போல் அந்த பிரிவினர்களின் கருவை அறுக்கிறார்கள் சிங்களவர்கள்.

தீ அடுத்தவன் வீட்டில் தானே எரிக்கின்றது நம்ம வீட்டுக்கு வரட்டும் தண்ணீர் ஊற்றுவோம் அது வரையில் வாளியில் தண்ணீரை நிறப்பி மட்டுமே வை என்று இருந்தால் நாளை உனக்கு என்ன நடக்கும் என்று காலம் இந்த கொடுமையான நிகழ்வால் உணர்த்துவது வேதனையாக இருக்கிறது.

இனிமேலாவது திருந்துவார்களா மனிதர்கள் இல்லை, பாசகவின் சூழ்சியிலே மாட்டி விட்டில் பூச்சாய் சாகத்தான் போகிறார்களா............

8 comments:

')) said...

வேதனை

இந்தியன் said...

//இலங்கையில் ஒரு பிரிவினர்கள்.//

தைரியமா அந்த ஒரு பிரிவினர் யாருன்னு எழுத வேண்டியது தானே?

கோத்ரா ரயில் விபத்து எப்படி நடத்தப்படடதுன்னு தெரியுமா?

இந்தியன் said...

அன்னிக்கு சிங்களவர் தமிழர்களை படுகொலை செய்த போதும் பாஜக தான் ஆட்சியா? மாநிலத்தில் யார் இருந்தாங்க?

சரி, இந்த பதிவுக்கும் பாஜகவுக்கும் என்ன தொடர்பு?

')) said...

திரிபுராவில் எப்படி கலவரம் நடத்தப்பட்டதோ அதே போல் தான் கோத்ராவிலும் கலவரம் நடத்தப்பட்டது என்று உலகிற்கே தெரியும். விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரும் என்று மோடி பாசக செயற்குழுவில் பேசிய உடன் கலவலரம் வெடிப்பதும் அது தொடர்ந்து நடு முழுவதும் சிலைகளை சிதைப்பதையும் ஒத்து பார்க்ககூட தெரியாது என்று பாசகவினர் நினைப்பதை பார்த்தால் மிகவும் பாவமாக இருக்கிறது. மேலும் அதே சமயம் இலங்கையில் கலவரம் வெடிப்பதும் எதேச்சையாக நடப்பதாக தெரியவில்லை. அழகாகவும் ஆழமாகவும் திட்டமிட்டு நடத்தியதாக தான் தெரிகின்றது.

பிரித்தாளும் கொள்கைகளுக்கு தீனி போட்டவர்களின் நிலையும் அடுத்தவனுக்கு தானே நடக்கின்றது என்று கண்டும் கானாமல் இருப்போருக்கு நாளை என்ன நடக்கும் என்று துல்லியமாக எடுத்துகாட்டுகிறது இந்த நிகழ்வுகள். இன்று ஒரு சாராருக்கு நடக்கும் இந்த பாசககவின் இந்திய கலவரம் நாளை உங்களையும் தாக்கலாம் என்றது தான் அதன் மறை பொருள். சல்லி அடியுங்கள், நாளை உங்களை வதைக்கும் போது ஒருவரும் துணைக்கு வர போவது இல்லை.....

')) said...

அன்று படுகொலைகள் நடக்கும் போதும், கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் படு கொடூரமாக படுகொலைகள் நடக்கும் போதும் பாசக என்ன செய்தது. தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அல்லவா காட்டிக்கொண்டது. கலவரங்களை தூண்டுவதும் இன சுத்திகரிப்பு செய்வதும் தான் பாசகவின் வேலை, 4 ஆண்டுகளில் பாசக உருப்படியாக கூட இல்லை சாதரணமாக என்ன செய்தது என்று உங்களால் பட்டியலிட முடியுமா. எப்போது பார்த்தாலும் வன்முறையும் அதை தொடர்ந்து கலவரமும் தான் பாசகவின் ஆட்சியாக இருக்கிறது. இந்த காட்டுமிரான்டி கூட்டதிற்கு வால்பிடிக்க எத்தனை மக்களப்பா...தாங்க முடியவில்லை.

இந்தியன் said...

**திரிபுராவில் எப்படி கலவரம் நடத்தப்பட்டதோ அதே போல் தான் கோத்ராவிலும் கலவரம் நடத்தப்பட்டது என்று உலகிற்கே தெரியும்.***

ரசித்து சிரித்தேன், இன்னும் சிறப்பா எதிர்பார்த்தேன். :)))

**தைரியமா அந்த ஒரு பிரிவினர் யாருன்னு எழுத வேண்டியது தானே? **

இதுக்கு பதிலே வரலையே! ஓ! செலக்ட்டிவ் ஜர்னலிசமா. நடத்துங்க.

**கலவரங்களை தூண்டுவதும் இன சுத்திகரிப்பு செய்வதும் தான் பாசகவின் வேலை**

ராச பக்சே, சோனியா எல்லாரும் பாஜகவா? அடடே!

**4 ஆண்டுகளில் பாசக உருப்படியாக கூட இல்லை சாதரணமாக என்ன செய்தது என்று உங்களால் பட்டியலிட முடியுமா. ***

பட்டியலிட்டால் படிக்க கூடிய மனநிலையில் நீங்கள் இல்லையே!

**சல்லி அடியுங்கள், **
நீங்க தானே இதுக்கு குரு, உங்களை மிஞ்ச முடியுமா?

நாட்டில் சிலருக்கு காற்று சரியா பிரியலைனா கூட பாஜக தான் காரணம்னு சொல்றாங்க பா! சத்தியமா முடியல.

')) said...

என்னடா இன்னும் அபாச வார்த்தைகளை கானலயேன்னு நினைத்தேன், இதோ வந்துவிட்டது.

குசராத்தை எப்போது சோனியாவோ ராசபட்சேவோ ஆண்டார்கள், 6 நாளில் 1,30,000 மக்களை அழித்தது என்ன வானத்தில் இருந்து வந்தவர்களா இல்லை அண்டை நாட்டுகாரர்களா. பாவம் பாசகவுக்கு இன சுத்திகரிப்புக்கு எழுத்துக்கள் கூட என்ன என்று தெரியாது என்றும் கூட சொல்லுங்களேன்.

பட்டியல் இல்லை என்று தான் தொகா விவாதங்களில் இளிக்கின்றதே தினமும், எதுக்கேட்டாலும் சம்பத்தமே இல்லாமல் உளறுவதை பார்க்கவில்லை போலும்...

இனி ஆபாசமான கொச்சையான பின்னூட்டங்கள் வந்தால் வெளியிடுவதாக இல்லை. அதற்கு எல்லாம் எச்ச சர்மா தளம் இருக்கிறது அங்கே எழுதுங்கள் அவரும் அதே பாணியில் பதில் சொல்வார்.......

')) said...

தமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.

தங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.

பிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.

உங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.

நன்றி .
தமிழ்அருவி திரட்டி