Friday, March 16, 2018

தமிழகத்தில் டொனால்டு டிரம்பின் ஆட்சி மலர்ந்தே தீரும்

அமெரிகாவில் ஆட்சியில் இருக்கும் கட்சி, இந்தியாவின் அமெரிக்க தேவைகளை அளவுக்கு அதிக அக்கறையுடன் கவனித்து செய்ய வல்லவரை தலைவராக கொண்ட கட்சி. பணக்காரர்களுக்காகவும் உழைக்கும் மக்களுக்கு வேலைகள் என்றதில் கவனாமாக இருக்கும் கட்சி.

இது தவிர இந்தியாவின் பணம் செல்லவில்லை என்றால் கொண்டுவந்து என்னிடம் கொடுங்கள் பதிலுக்கு அமெரிக்க டாலர்களை தருகின்றேன் என்று சொல்லும் ஏழை பங்காளர்கள் நிறைந்த கட்சி. நாட்டின் நலனை மட்டுமே மனதில் கொண்டு செயலாற்றுகின்ற உலகின் பெரிய கட்சி என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

குடியரசு கட்சி என்று வெறுமனே பெயரில் மட்டும் அல்லாது செயலிலும் காட்டும் ஒரு மிக பெரிய உலக மக்களாட்சி கட்சி தமிழகத்தை ஆளுவதற்கு நாம் எல்லாம் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

டொனால்டு டிரம்பின் ஆட்சி தமிழகத்தில் நடந்தால் தமிழகம் பெறப்போகும் நன்மைகள் எல்லாம் என்ன என்று பார்ப்போம்.

அமெரிக்கவில் வேலை கிடைக்கும், அமெரிக்க சம்பளத்தில் தமிழக வாழ்கையை அனுபவிக்கலாம்.

தற்பொழுது நீட் தேர்வை நடத்தும் அமெரிக்க நிறுவனம் தமிழகத்திற்கு என்று தமிழர்களை மனதில் கொண்டு மட்டும் நடத்தப்படும். இந்தி தெரிந்து இருக்க வேண்டும் என்று கட்டாயபடுத்தபட மாட்டாது. படிப்பு அமெரிக்காவில் படிக்க அந்த நீட் பரீட்சை. அங்கே மருத்துவ மேற்படிப்புக்கு செல்லும் மக்கள் தற்கொலை செய்துகொள்ள தேவை இருக்காது.

தமிழக மீனவர்கள் ஒருவரேனும் கொல்லப்பட்டால் இலங்கை அமெரிகாவின் எதிரி நாடாக கருத்தப்படும், விளைவு இலங்கையை எந்த ஒரு வர்த்தகமும் செய்யமுடியாமல் ஒதுக்கி வைப்பது மட்டும் அல்லாது தீவிரவாத நாடாக அறிவிக்கப்பட்டு அமெரிக்காவின் படை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்க இராணுவம் இலங்கையில் ஆட்சியை நடத்த வேண்டி வரும்.

தமிழகத்திற்கு தேவைபடும் அணுமின் உற்பதியை இலங்கையில் அணு உலைகளை நிறுவி கடலுக்கடியில் மின் கம்பிகளை புதைத்து பாதுகாப்பாக கொண்டு வந்து கொடுக்கும்.

தமிழகத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் டப்பா கார்களையும் பேருந்துகளையும் எண்ணை மற்றும் மின்சாரத்தில் ஓடும் வண்டிகளை கொண்டு மாற்றி அமைத்து மாசில்லா காற்று மண்டலமாக மாற்றி கொடுக்கும்.

தமிழகத்திற்கு GST வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு அமெரிக்காவின் வரிவிகிதத்தை செயல்படுத்துவார்கள்.ஏன் என்று எந்த மைய அராசாவது கேட்டால் தமிழகம் அமெரிகாவின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ள முடியும் என்று அமெரிக்க அதிபரிடம் இருந்து பதில் வரும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களின் அனைத்து வியாபாரிகளின் ஏற்றுமதி தமிழகத்தின் வழியாக மட்டுமே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியும்.

அமெரிக்க பொது தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்கவும் வழி செய்யப்படும்.

தமிழகத்தின் தேவைகளை அனைத்தும் எந்த கேள்வியும் கேட்காமல் இந்திய அரசு செய்துகொடுக்கும், அமெரிகாவை பகைத்துக்கொள்ள இந்திய ஆட்சியர்கள் பயப்படுவார்கள்.

தமிழகத்தில் மற்ற மாநிலத்தவர்கள் உள்ளே வர அமெரிக்க அரசின் அனுமதியை பெற்று தான் வரவேண்டும் என்று சட்டம் இயற்றப்படும், இது தமிழகம் அமெரிக்காவின் பகுதியாக கருத போவதால் மக்களின் பாதுகாப்பு கருதி செய்யப்படும்.

தமிழகத்து சாலைகளும் வீடுகளும் அமெரிக்க தரத்திற்கு உயர்த்தபடும், ஊருக்கு ஊர் பயணிக்கும் சாலைகள் அதிவேக மற்றும் பாதுகாப்பான சாலைகளாக மாற்றப்படும். சுங்கவழி சாலை மற்றும் சுங்கமில்லா சாலைகளும் அமைக்கப்படும். கப்பம் கட்ட வேண்டாம் என்று நினைப்போர் சுங்கமில்லா சாலையில் தாராளமாக செல்லலாம்.

அடிப்படை தொழில் புரிவோருக்கு குறைந்தபட்ச சம்பளம் அமெரிக்காவின் தரத்திற்கு உயர்த்தப்படும்.

அமெரிக்க தயாரிப்புகளை நேரடியாக குறைந்த விலையில் தமிழகத்தில் கிடைக்க வழி செய்யமுடியும்.

தமிழர்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்க முப்படையும் தமிழகத்தை சுற்றி பாதுகாப்பிற்கு நிறுத்தி வைக்கும். இந்திய தீவிரவாதம் தமிழகத்தில் தலை எடுக்க முடியாது, மசூதியை இடிப்பேன், கிருத்துசபையை இடிப்பேன், சிலைகளை சிதைப்பேன் என்று உளருபவர்களும் கிளம்புவர்களும் தக்கபடி தண்டிக்கபடுவார்கள்.

தமிழர்களை கண்டபடி சுரண்டலாம் என்று மற்ற மாநில அரசியல்வாதிகள் இனி கனவுக்கூட கானமுடியாமல் திணருவார்கள்.

தமிழகம் மூன்றாம் தர நாட்டின் பட்டியலில் இருந்து முன்னேறிய நாட்டின் பட்டியலுக்கு செல்லும்.

தெற்காசியாவின் வல்லரசாக தமிழகம் மாறும்.

இவைகள் எல்லாம் நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் தமிழகத்தில் டொனால்டு டிரம்பின் ஆட்சி மலர்ந்தே தீரவேண்டும் சிந்திப்பீர். யார் யார் எல்லாம் கட்சியில் சேரவிரும்புகிறார்களோ https://www.gop.com/ தளத்திற்கு சென்று உறுப்பினராக சேரவும்.

0 comments: