Saturday, February 3, 2018

பாசகவின் பக்கோடா பட்சட் - சமசுகிருதத்தில் தொகுத்து வழங்காமல் போனது ஏனோ

பழைய காங்கிரசு திட்டங்களை பெயர் மாற்றி வெறும் அறிக்கையாக மட்டும் வெளியிடுவது.

பணமதிபிழப்பு நடவடிக்கியின் போது மோடி மூச்சுக்கு முண்ணூறு தடவை சொன்னது ஏழைகள் எல்லாம் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று சொன்னார். அந்த வாசகம் எவ்வளவு பொய் என்று அரசியல் அறிவே கொஞ்சம் கூட இல்லாதவருக்கும் தெரியும் புரியும். கிட்ட தட்ட 6 மாதகால அலைகழிப்பிற்கு பிறகு தான் ஏழைகளால் மூச்சே விட முடிந்தது. அது போல இந்த பக்கோடா பட்சட் விவசாயிகளின் பட்சட்டாம். உட்பொருள் விவசாயத்தை அழிக்கும் பட்சட் என்று எடுத்துக்கொள்ளலாம்.

வருடத்திற்கு ஒரு கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்று முழங்கியவர்கள் கடைசியில் கணக்கு காட்டியது பக்கோடா வேலையை தான் என்று திருவாய் மலர்ந்து இருக்கிறார் மோடி. இந்த இலட்சணத்தில் நாடு வேகமாக வல்லரசு ஆகிவிடும் என்ற வாய்பந்தல்.

GST வரியால் இந்தியா வேகமாக முன்னேறுவதாக உலக பொருளாதார நிபுணர் சொன்னாரு சப்பான்ல சொன்னாக சைனாவுல சொன்னாவோ அமெரிக்காவுல சொன்னாவோ என்று கூவும் இந்த மோடி அரசு கடந்த 7 மாதமாக வசூலித்த GST வரியில் இந்த பட்சட் பற்றா குறையை சமாளிக்காமல் ஏற்கனவே இருக்கும் அரசின் பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டு அந்த பணத்தில் பாசகவின் பரம ஏழைகள் அதாணிக்கும் அம்பாணிக்கும் வரா கடன்களை சமாளிக்க பணம் ஏற்பாடு செய்கிறார்கள்.

இது வரை கிட்டதட்ட 120 பொருட்களுக்கு GST வரியை திருத்தி/குறைத்து அமைத்து இருக்கிறார்கள். இது வரையில் அதிக வசூல் செய்த வரியை திருப்பி கொடுப்பார்களா, இல்லை வாங்கினவன் இளிச்சவாயன் என்று விட்டு விடுவார்களா.

பாசக அரசு இலவசங்களை நம்புவது இல்லை என்றும் உண்மை நேர்மை நாணயம் மட்டுமே என்று சொல்லிவிட்டு 4 கோடி இலவச மின் இணைப்பு என்றும் சொல்வது வேடிக்கையே. அதுவும் சென்ற ஆண்டு சொன்ன அதே 4 கோடி இந்த ஆண்டும். ஆக 1 ஆண்டாக எந்த வேலையும் நடக்கவில்லை ஆனால் தூங்காத பிரதமர் என்னேரமும் நாட்டை பற்றி சிந்தித்துகொண்டும் பணியாற்றிக்கொண்டும் இருப்பவர் என்று இராம் நாத்து கோவிந்து சொன்னது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அப்படி பட்ட நிர்வாகத்தில் ஒரு ஆண்டாக வெறும் 4 கோடி மின் இணைப்புகளை கூட பூர்த்தி செய்யமுடியாமல் திணருகின்றதாம் மோடி அரசு.

பாசக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டு மக்களை ஒரு பதட்டத்திலேயே வைத்து இருக்கிறது. எப்போ என்ன நடக்குமோ என்று மக்கள் பயந்த வண்ணமாகவே இருக்கிறார்கள். இந்த பக்கோடா பட்சட் அறிவித்ததும் மக்கள் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் இருப்பது, அப்பாடா தொலைந்து இவர்களின் அட்டகாசம் என்று மக்கள் நிம்மதி அடைய துவங்கிவிட்டது தெரிகின்றது.

21 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் குசராத்லேயே பாசக வெறும் 19 இடங்கள் வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்து இருக்கிறது. அது தவிர இந்த கொடிய மதவாத பிரிவினைவாத அரசுக்கு கூசா தூக்கிய மாநில கட்சிகள் எல்லாம் ஆக்டோபசு விழுங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என்று சுதாரித்துக்கொண்டு விலகி நிற்க முடிவெடுத்துவிட்ட நிலையிலும், இப்படி ஒரு கசப்பு மருந்தை மக்களுக்கு கொடுத்து உங்களின் நன்மைக்கு தான் என்று நம்ப வைக்க முயற்சி செய்வது பரிதாபகமாக இருக்கிறது.

19 மாநிலத்தில் நாங்கள் ஆட்சி என்று நேற்று வரை முழங்கிய முழக்கங்கள் எல்லாம் தமிழகத்தில் காணாமல் போய்யிருப்பதை மக்கள் கவனிக்க வேண்டும். இந்த 19 மாநிலத்தில் ஆளும் அசுர அரசு தான் தமிழகத்தில் ஒரு நடிகனின் காலில் விழுந்து கொண்டு எழுதிரிக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றது.

தமிழகத்தில் எந்த அரசு விழாவாகவோ அல்லது தனியார் விழாவாக இருந்தாலும் இப்போதெல்லாம் குசராத்தியில் தான் தமிழகத்தில் நடத்துகிறார்கள். குசராத்து மக்கள் அணியும் உடை, உணவு, மொழி, குடி என்று அதனையையும் பார்த்து பார்த்து செய்கிறார்கள் தமிழக மக்களின் பணத்தில்.

நீ எல்லாம் என்ன படிச்சி என்ன செய்ய பக்கோடா விக்க தான் லாயக்கு என்று சொல்லாமல் சொல்லி மக்களுக்கு புரிய வைத்த மதவாத பிரிவினைவாத சாதிவெறி அரசு பாசக. உங்களை மக்கள் தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை.

0 comments: