Sunday, February 11, 2018

இந்திய வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் - பாசக

இந்தியாவில் மக்களாட்சி அமைந்தற்கு காங்கிரசும் நேருவும் மட்டுமே காரணம் என்று சொல்வது தவறு என்று மோடி சொல்வதில் தவறு என்ன இருக்க முடியும்.

பிரித்தானியரின் இந்தியாவில் எவ்வளவு சுதந்திரம் இருந்தது என்று மோடி சொல்வது உங்களுக்கு புரியவில்லை என்று தான் நாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

பிரித்தானியரின் இந்தியாவில் சுதந்திரம் எப்படி இருந்தது என்று வகுத்தும் தொகுத்தும் எழுதுவோம், பிறகு மோடி ஏன் அப்படி சொன்னார் என்று உங்களுக்கே புரியும்.

1) ஆட்சியையோ அல்லது அரசையோ எதிர்த்து ஒருவரும் பேசவோ எழுதவோ முடியாத மக்களாட்சி முறை தான் பிரிதானியரின் ஆட்சி முறை. சரியா சொல்ல வேண்டும் என்றால் பாசக அரசை விமர்சித்தோ அல்லது அவர்களது சனநாயக முறையை எதிர்த்தோ யார் பேசினாலும், ஒன்று பசுக்காவலர்கள் கொல்ல வருவார்கள் இல்லை மத்திய அமலாக துறை, வருமான வரித்துறை அல்லது மத்திய புலனாய்வுத்துறை வந்து பேசிய வாயையும் எழுதிய கையையும் இனி எழ முடியாமல் செய்யும். உங்களது பிள்ளைகளையும் விட்டு வைக்க மாட்டார்கள்.

2) இந்தியர்கள் மற்றும் நாய்கள் உள்ளே நுழைய கூடாது என்று வாசலில் எழுதி வைத்து இருப்பார்கள். அதாவது இந்த தெருவழியில் இவர் இவர்கள் எல்லாம் சட்டை போட்டுக்கொண்டோ, காலில் காலனிகளை அணிந்துக்கொண்டோ அல்லது தோலில் துண்டு போட்டுக்கொண்டோ போகக்கூடாது என்று சொல்வதை போல். சுதந்தரம் அடைந்து 69 ஆண்டுகாலம் ஆகியும். இந்தியர்கள் அனைவரும் சமம் என்று சட்டம் இயற்றியும் இன்னமும் குறிப்பிட்ட மக்கள் கோவிலின் கருவறைக்குள் நுழையவோ அல்லது பூசைகள் செய்யவோ கூடாது என்றும் சிதம்பரத்தில் தமிழில் பாடவோ வழிப்படவோ கூடாது என்றும் சொல்லும் செய்கையை பொன்ற சனநாயகம் தான் பிரித்தானியரின் அன்றைய சனநாயகம்.

3) ஒரு குற்றம் நடக்கிறது என்றால் அந்த குற்றத்திற்கு என்ன தண்டணை என்று குற்றத்தை வைத்து தீர்மானிக்காமல், குற்றம் யார் யாரின் மீது செய்தார்கள் என்று தீர்மானிப்பது பிரித்தானியரின் முறை. குறிப்பாக கலகம் செய்ய கூடி இருந்த சாலியன் வாலாபாக் படுகொலையை விசாரித்தவர்கள் அந்த கொடூர கொலையை குற்றம் இல்லை என்று தான் தீர்ப்பு சொன்னார்கள். அதாவது கோத்ராவில் இரயில் பெட்டியை மோடியின் ஆட்களே கொளுத்திவிட்டு, இசுலாமியர்கள் கொளுத்தினார்கள் என்று சொல்லிக்கொண்டு 6 நாட்களில் மாநிலத்தில் கலவரத்தை நடத்தி கர்பிணி பெண்கள் வயிற்றையும் கிழித்து உள்ளே இருக்கும் இசுலாமிய குழந்தைகள் வரை கருவறுத்ததை போல். இந்த படு கொலைகளை நிகழ்திய மோடி தான் உலக சமாதானத்தின் தூதுவர் என்றும் ஆயிரம் காந்தி ஒன்று சேர்ந்தாலும் மோடியின் அகிம்சைக்கு ஈடு இணையாக முடியுமா என்றும் முழங்குகிறார்கள்.

4) எந்த எந்த மக்கள் எல்லாம் என்ன என்ன சாப்பிடலாம் உடுத்தலாம் எங்க எங்க சாப்பிடலாம் உலாவுலாம் என்று எல்லாம் கட்டுப்பாடு உண்டு பிரிதானியரின் ஆட்சியில். உயர் தர உணவகம், குடியகம், மகிழ் நிலையம் என்று அமைத்துகொண்டு யார் யார் எல்லாம் வரலாம் என்று சொல்வார்கள். அதாவது பாசகவில் சொல்வது போல் யார் யார் எல்லாம் என்ன என்ன சாப்பிடலாம், ஏழை எளிய மக்கள் மாட்டுக்கறி சாப்பிட்டால் அடிதே கொல்வார்கள், அதுவே 5 நட்சதிர விடுதிகளில் வெள்ளைக்காரர்களுக்கு இதே பாசக மக்கள் சமைத்து விற்று காலையும் கழுவிவிடுவார்கள். மாற்றாக ஏழை எளிய மக்கள் வைதியத்திற்கு மாட்டு மூதிரமும் சானியையும் தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வதை போல்.

5) தேசிய கொடி என்று ஒரு கொடியை பிரிதானியர்கள் கட்டிவிட்டு இந்த கொடியை அவமதித்தாய் என்று மக்களை கொலை செய்வார்கள். பாசக தேசிய கொடியை காட்டி மக்களை கொல் வெட்டு என்று சொல்வது போல்.

இப்படி ஈட்டு ஈடு பாசகவின் ஆட்சியும் பிரித்தானியரின் ஆண்டான் அடிமை ஆட்சியும் ஒத்து இருக்கிற காரணத்தால் தான் மோடி இந்தியாவின் சனநாயகம் நேருவாலோ அல்லது காங்கிரசாலோ பெற்று தரவில்லை. அதற்கு முன்னால் இருந்தது தான் அசல் சுதந்திரம் என்று சொல்கிறார்.

0 comments: