Monday, January 29, 2018

பாசக திராவிட கட்சியாம் - கொஞ்சம் விட்டா சமூக நீதி தான் எங்கள் கொள்கைன்னு சொன்னாலும் சொல்லுவாங்க


பாசக கட்சி திராவிட கட்சியாம், இன்றைய அதிசயம் நிகழ்ந்து இருக்கிறது தமிழகத்தில்.

செய்முறை தேர்வில் படிக்காமல் வந்து வைவாவுக்கு பதில் சொல்லும் மாணவர்களை போல் வானதி சொல்லும் திராவிட பதில்களை பாருங்கள், பதில்களை கேட்டு நாங்கள் எல்லாம் வெகு நேரம் சிரித்தோம். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

ஒரு வகையில் நாம் அனைவரும் காஞ்சி மடத்திற்கு நன்றி சொல்லனும், அடித்தேனா பார், நாக்கை கொண்டுவா, தலைகறி கொண்டுவா, தொடைக்கறி கொண்டு வா என்று நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமாக எச்ச சர்மா பேசிக்கொண்டு பேட்டை ரௌடியை போல் அளித்துக்கொண்டு இருந்த பேட்டிகளை ஒரே நாளில் மழுங்க அடித்துவிட்டது காஞ்சி மடம்.

'இந்துகள்' என்றால் யார் என்றும், பாசகவால் பயன் பெறபோகும் மக்கள் யார் என்றும் அழகாக மக்களுக்கு விளக்கமாக விளக்கிய திணமணிக்கும் பாசகவிற்கும் தமிழகம் மிகவும் கடமைபட்டு இருக்கிறது.

திருவல்லிபுத்தூரிலும் சேப்பாக்கத்திலும் இன்ன பிற ஊடகங்களிலும் தோன்றி 'சோடாபாட்டில வீச்சட்டும் வண்டி எல்லாம் கொளுத்தடும்மா சொல்லுங்க மருமகனே' என்று ஆவர்தம் பாட்டிய 'இந்துக்களை' தமிழகம் பார்த்தது.

இதே தமிழகத்தில் 2017 சனவரியில் இருந்து மக்கள் போராட்டங்கள் வெடித்தது, மெரினாவில் கூடிய கூட்டத்தில் இந்த 'இந்துகளை' யாரும் காட்டவில்லை. இதை எழுதிய மாத்திரத்தில் உடனடியாக போட்டோ சாப்பில் இணைத்து இனி வெளிவரும்.

இப்படி திராவிடர்களுக்காக போராடிய பாசக கட்சி இனி திராவிடர்களின் நலனுக்காக மேலும் போராடி திராவிட மக்களின் உரிமைகளை பெற்று தர துடிக்கின்றதாம்.

இதே திராவிடர்களின் கீரைகாரி தயிர்காரிகளின் பைகளின் வரை இருக்கும் காசை எல்லாம் ஓர் இரவில் செல்லாது என்று சொல்லி மாத கணக்கில் வங்கி வாசலில் நிற்க வைத்து, கடைசியில் வங்கியில் பணம் போடவில்லை என்றால் கள்ளப்பணம் வைத்து இருந்தாய் என்று சிறைக்கு அனுப்படுவாய் என்று மிரட்டி அப்படி கீரைகாரிகளும் தயிர்காரிகளும் வங்கியில் செலுத்திய பணத்தை எடுத்து அம்பாணி மற்றும் அதாணியின் வாரா கடனுக்கு கொடுத்து மகிழ்ந்த பாசக அரசு திராவிட மக்களின் உரிமைக்காக போராட போகின்றதாம்.

எளிய மக்கள் வாங்கி பயன் பெறும் நியாய விலைக்கடைகளில் இனி யாருக்கும் பொருள் கிடையாது. வீட்டு எரிவாயு வின்னை தொடும் விலையில் தான் எளியவர்கள் வாங்க வேண்டும். கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு 30% வரியும், சம்பள பணத்தில் 30% வரியும் கொடுத்துவிட்டு மீதம் இருக்கும் 40% பணத்தில் 30% பேருந்து கட்டணமும் கொடுத்தல் மீதம் இருக்கும் 10% பணத்தில் எளியவர்களின் பிள்ளைகள் என்ன பொறியியல் படிக்குமா இல்லை மருத்துவம் படிக்குமா.

மெல்ல மெல்ல 1920ஆம் ஆண்டு கால பொருளாதாரதிற்கு மக்களை பாசக அனுப்பிவிட்டது. இனி வரும் தலைமுறைகள் படிக்கும் வாய்ப்பு அழிந்து தந்தை செய்யும் அதே தொழிலுக்கு தள்ளும் அபாயம் காத்துக்கொண்டு இருக்கிறது.

90% சம்பளப்பணம் செலவானால் ஏழை எளிய மக்களின் சந்ததிகள் எப்படி முன்னேறுவார்கள். இப்படி எதிர்கால சந்ததியரின் முன்னேற்றத்தை அழித்தால் மெல்ல மெல்ல அந்த 4 வர்ண பேதங்கள் தானாகவே சமுதாயத்தில் விளைந்துவிடும் என்ற நேர்கொண்ட பார்வையும் திரம் கொண்ட நடையுமாக பாசக திராவிட கட்சியாக பரிணாமிக்கின்றது.

திகவினர் முன்னே சொன்னது போல் நாளை பெரியாரின் படத்தில் நெஞ்சின் குறுக்கே குறுக்கு கயிறு அணிந்து ஈ வே இரா அய்யராக அறியப்பட்டாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை. தயாராக இருங்கள் திராவிட மக்களே.......

0 comments: