Thursday, February 22, 2018

2014ல் பாசக சொன்ன அதே வார்த்தைகள் - தமிழகத்தை மய்யம் கொண்ட மக்கள் நீதி மய்யம் புயல்

2014ல் பாசக சொன்ன அதே வார்த்தைகளோடு இன்று தமிழகத்தை மய்யம் கொண்டு இருக்கிறது மக்கள் நீதி மய்யம் புயல்.

60 ஆண்டுகால காங்கிரசு ஆட்சியில் நாட்டில் ஊழல் மலிந்து நாட்டின் செல்வங்கள் எல்லாம் சூரையாடப்பட்டு வெளி நாட்டு வங்கிகளில் இந்தியாவின் செல்வங்கள் உறங்கி கிடக்கின்றது. - பாசக

60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழகத்தில் ஊழல் மலிந்து தமிழகத்தின் செல்வங்கள் எல்லாம் சூரையாடப்பட்டு வெளி நாட்டு வங்கிகளில் தமிழகத்தின் செல்வங்கள் உறங்கி கிடக்கின்றது. - மநீம

நானும் கொள்ளையடிக்கமாட்டேன் வேறு எவரும் கொள்ளையடிக்க விடமாட்டேன். - பாசக, மநீம

கொள்ளையர்களிடம் இருந்து நாட்டை மீட்டு கொடுக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பை தான் கேட்கின்றோம் - பாசக , மநீம

கருப்பு பணம் வைத்து இருப்பவர்களுக்கு தான் வலிக்கும் ஊழல்வாதிகளுக்கு தான் வலிக்கும் - பாசக, மநீம

ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் - பாசக

இந்த அரசியல் சமையலின் ஒரு பருக்கையை தொட்டால் ஊழலில் தோய்ந்த கைவிரல் சுடும் - மநீம

பாரதம் சுற்றிலும் பகைவர்களால் சூழப்பட்டு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது, நாங்கள் வந்தால் கால்களாலே அந்த பகைவர்களை அடக்கி எல்லையை விட்டு வெகு தூரம் ஓட வைப்போம் - பாசக

ஆறு கைகள் இணைந்து இருக்கிறது மொத்த தென் இந்தியாவையும் இணைத்து தான் சொல்கின்றோம் - மநீம

பெருன்பாண்மை கொண்ட இந்துமதத்தின் ஆட்சியையும் இராமர் மற்றும் கோட்சே ஆட்சியை கொண்டு வந்து வல்லபாய் ஆட்சியை நிறுவி இந்தியாவை 2019க்குல் வல்லரசாக மாற்றுவோம் - பாசக

வலதும் அல்ல இடதும் அல்ல மய்யம் என்றதன் பொருள் தான் அது - புது புது இந்தியாவை பெற்று எடுத்தது போல் இனி புது புது தமிழக்த்தை பெற்றெடுப்போம் -  மநீம

குசராத்தை மாதிரியாக கொண்ட வளர்சி பெற்ற நாடாக புத்தம் புதிய நவ பாரதம் மலர்ந்தே தீரும் - பாசக

2014ல் காசியில் பாசக தனது பயணத்தை தொடங்குகின்றது 

இன்று இந்த மக்கள் நீதி மய்யம் புயல் இராமேசுவரத்தில் துவங்கி காசி நோக்கி பயணிக்கும்...


தலைவர் அறிவித்த அறிப்புகளை காட்டிலும் நீண்ட எழுத்து பேச்சு என்று இருந்தாலும் பசுத்தோல் போர்திய புலியாக ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் 15 இலட்சம் போடப்படும், வீட்டிற்கு ஒரு இளைஞனுக்கு அரசு வேலை வாங்கி தருவோம் என்ற வாசகங்கள் இன்னமும் வரவில்லை. அனேகமாக நாளை வரும் என்று நம்புவோமாக.......

பாசக ஆடோபசின் மற்றும் ஒரு கரம் அவ்வளவு தான் புரிந்துக்கொள்ள.

இது தான் பாசகவின் கணக்கு ஆன்மீகம் என்று சொல்லி அதே சமயத்தில் பாசக வேண்டாம் என்றால் தலைவருக்கு ஓட்டு போடுங்கள். வலதும் வேண்டாம் அதே சமயத்தில் இடது நன்றாக இருக்கிறது ஆனால் புதிதாக வந்த ஐ போன்போல் இருந்தால் நல்லது என்றவர்கள் ம நீமக்கு ஓட்டு போடுங்கள். இல்லை நான் சாதியையும் சமயத்தையும் சம்பத் மாமா போல் வெறி கொண்டு வீசுவேன் என்றால் பாசகவிற்கு போடுங்கள். இல்லை உங்களிடம் திராவிடம் என்ற வார்த்தை கூட இல்லை என்று நீங்கள் நினைத்தால் தேமுதிகவிற்கு போடுங்கள்.

இந்த பட்டியலில் உள்ள எந்த கட்சிக்கு போட்டாலும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற தீர்க்க எண்ணத்தில் அடித்து ஆடி இருக்கிறது.

பாவம் இந்த மௌன யுத்தத்தில் பலியானது என்னவோ சாதி வெறிபிடித்து கெச்சரிவால் போல் தமிழகத்து முதல்வராக வந்து அனைவரையும் குசராத்து கோத்ரா போல் ஒரு வன்முறையை தூண்டி குளிர்காயலாம் என்று மிகவும் நம்பிக்கையாக இருந்த பாமக சுருண்டது தான் மிச்சம்.

சென்ற தேர்தலில் 40% ஓட்டுக்களை நாங்கள் பெற்று இருக்கின்றோம் என்று சினிமா பாணியில் படமும் சுவரொட்டிகளையும் அள்ளி வீசிய பாமக என்ன செய்ய போகின்றதோ செல்லூர் தான் விஞ்ஞான முறைகளை சொல்லிக்கொடுத்து பாமகவை காப்பாற்ற வேண்டும்.

0 comments: