Sunday, February 11, 2018

மோடிக்கு பதில் யோகி ஆதித்திய நாத்து பிரதமராகி இருந்தால் - பாசகவின் ஆட்சி இன்னும்

ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே உத்திரபிரதேசம் பாரதிய பாரம்பரியத்தில் மித மிஞ்சி இருக்கும் அளவிற்கு திறைமையான ஆட்சியை வழங்கிக்கொண்டு இருக்கிறார் யோகி ஆதித்திய நாத்து.

அதுவும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் முதல்வர் மற்ற நாட்களில் அவர் யோகியாகவும் மதக்காப்பாளராகவும் பாரதத்தின் பாரம்பரியத்தை காக்கும் அரணாகவும் செயல்படும் போதே இவ்வளவு சக்தி வாய்ந்த அரசாக செயல்பட முடியும் என்றால் யோசித்து பாருங்கள் அவர் மட்டும் பாரதத்தின் பிரதமாராக இருந்து இருந்தால் இந்தியாவின் மதிப்பு இந்த 4 ஆண்டுகளில் எவ்வளவு உச்சத்தை தொட்டு இருக்கும் என்று.

2014ஆம் ஆண்டு தேர்தலில் யார் பிரதமாரக வரவேண்டும் என்று தீர்மானிக்கும் பட்சதிலேயே ஒட்டு மொத்த சங்க பரிவாரமும் யோகியை தான் பிரதமாராக வரவேண்டும் என்று தங்களது ஒரு மனதான ஆதரவை தெரிவித்தும் குசராத்து மக்களின் சதியால் வாக்குகள் வாங்கி வெற்றி பெற்ற யோகியை ஓரம் கட்டிவிட்டு மோடி பதவிக்கு அறிவிக்கப்படுகிறார்.

வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் சங்க பரிவாரம் மோடியை பிரதமராக தேர்ந்து எடுக்க ஒத்துக்கொள்கின்றது.

இப்படி அடித்து பிடித்து ஆட்சிக்கு வந்த மோடியால் திறம்படவோ அல்லது நேர்மையாகவோ அரசை நடத்த முடியவும் இல்லை தெரியவும் இல்லை என்றதை சங்க பரிவாரம் முதலில் இருந்தே கவனிக்க முடிந்தது. கணித்தது போல் மோடியின் தேவை நாட்டிற்கு இல்லை என்று ஆன பிறகு மெல்ல யோகியின் திறமைகளை நாடு அறியட்டும் என்று உத்திரபிரதேசத்தில் யோகியின் திறமைகளை வெளிகொணரும் விதமாக முதல்வராக்கி அழகு பார்கிறது சங்க பரிவாரம்.

இந்த மோடியின் திறமையின்மையை கணக்கில் கொண்டு தான் சுசாமி முதன் முதலில் மோடியால் கருப்பு பணத்தை வெளியே கொண்டுவர முடியாது என்று ஆரூடம் கூறினார்.

இரண்டாவதாக குரு மூர்த்தி மைய அரசு எப்படி நாட்டின் தங்கம் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்று மோடி அரசுக்கோ ஆலோசனையை வாழங்கி மோடியின் திறமையின்மையை ஒர் செய்தியாளாராக தமிழக மக்களுக்கு தன் பங்குக்கு எடுத்துரைத்தார்.

பின்னர் மெல்ல மெல்ல எச்ச சர்மா தமிழிசை போன்றவர்களும் தமிழகத்தில் என்ன என்ன நடக்க வேண்டும் என்று மோடிக்கு ஆலோசனைகள் சொல்லப்போய் மோடியால் எந்த பாதகமும் தமிழகத்தில் விளையாமல் தவிர்க்கப்பட்டது.

இப்படி சங்கப்பரிவாரமும் இன்னும் பிர பாசக மக்களால் காப்பாற்றி வரப்பட்ட மோடி கடைசியில் பக்கோடா என்று பேசி சங்கப்பரிவாரத்தின் மானத்தை காற்றில் பறக்கவிட்டு வழிந்துக்கொண்டு நிற்கிறார் மக்களின் முன்னால்.

ஆகவே யோகி தான் இந்தியாவின் பிரதமராக இன்னும் 60 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய வேண்டும் என்று சங்கப்பரிவாரம் விரும்புகின்றது. மகாபாரத்தில் பின்னால் இருந்து இயக்கிய பீசுமரை போல் அல்லாமல் நேரடியாகவே பாரதத்தை ஆள யோகியே வரவேண்டும் என்று சங்கப்பரிவாரம் ஆசைப்படுகிறது. யோகி வருவார் நல்ல பாரத பாரம்பரிய ஆட்சியை தருவார் என்று நம்புவோமாக.

0 comments: