இந்த படத்தை பார்த்த மக்கள் அனைவருக்கும் மனதிற்குள் ஒரு இருக்கம். இப்படியும் நடக்குமா அதனால் இப்படி மனது பாதிக்குமா. என்ன அருமையான ஒரு கதை பின்னணி என்று திகைத்து தான் போவார்கள். எனக்கும் அப்படி தான் இருந்தது. பிறகு கதையின் மத்தியில் வந்த பிறகு இது ஏதோ ஒரு படத்தை நினைவுக்கு கொண்டு வருவது உணர்ந்தேன்.
ஒரே காதல் படத்தில் மம்முட்டியும், மீராவும் நடித்த படத்தின் பிரதி என்று தெரிந்தது.
ஒரே காதல் படத்தின் கதை இது தான், ஒரே தொகுப்பு வீட்டில் குடியிருக்கும் இரண்டு குடித்தனம். அதில் மீரா வாழவே வழியின்றி வாழும் ஒரு நடுத்தர வர்கம். அதிலே அதிமேதாவியான பொருளாதார மேதையான மம்முட்டி. எந்த அளவிற்கு மேதாவி என்றால் உயிர் போகும் தருவாயில் இருக்கும் பாட்டி தன்னை பார்த்தால் இன்னமும் போகாமலே இருக்கும் அந்த உயிர் தன்னை பார்க்கவில்லை
என்றால் சீக்கிரம் போய்விடும் என்று இருக்கும் ஒரு மேதாவிதனம் வாய்ந்த ஒரு பாத்திரம்.
காய்ச்சலில் தவிக்கும் தனது மகனின் வைதியத்திற்கு பணம் இல்லை என்று தவிக்கும் தாயின் தவிப்பை அனாயசமாக சரி செய்வதோடு வேலை இல்லை அதலால் தான் இந்த நிலை என்று நிற்கும் பாத்திரமாக மீரா.
அவளுக்கு காலம் அறிந்து பணவுதவியும், வேலையும் அனாயசமாக வாங்கித்தரும் பாத்திரமாக மம்முட்டி.
இந்த பரிவத்தனையில் ஒரு காலகட்டத்தில் தன்னையே இழக்க நேருகிறது மீராவிற்கு.
இதற்கு ஆயிரத்து எட்டு காரணங்கள் சொன்னாலும், சராசரி மனிதனால் ஒத்துகொள்ள முடியாத காரியமாக நிகழ்ந்தாலும். கனவனின் கவனத்திற்கு செல்லாமல் மற்றும் ஒரு குழந்தைக்கு தாயாகுகிறாள் மீரா.
அந்த நிகழ்வில் இந்த குழந்தையை தந்தையாக மம்முட்டி போற்ற வே
ண்டும் என்று மீரா நினைக்க, அது எல்லாம் ஒரு கால நிகழ்வு தான் மற்றபடி சொந்த பந்தம் எல்லாம் இல்லை என்று மம்முட்டி வாதாட அதுவும் நித்தமும் குடியுடன் இருக்கும் அந்த பாத்திரத்தின் சிந்தாந்தம் மீராவின் மனதை சிதைக்கிறது. முடிவு மீரா பைத்தியமாகிறாள்.
கனவனின் இடையராத கவணிப்பும் அரவனைப்பும் அவளை மீட்டு வருகிறது. அந்த கால கட்டத்திற்குள் அன்பு பாசம் நேசம் எல்லாம் என்ன விலை என்று கேட்டு வந்த மம்முட்டியின் வாழ்க்கையில் மறுபடியும் மீராவின் நேசம் வேண்டும் என்று தவிக்கின்றது.
நித்த குடியாக உள்ள அந்த மம்முட்டி மீராவை தேடி செலிகிறான். ஆனால் கிடைத்தபாடில்லை. ஒருவரும் எதிர்பார்க்கா வண்ணம் மீராவின் கணவனை பார்கிறான் மம்முட்டி.
எப்பவோ செய்த உதவியின் பால் அவன் நன்றியோடு அழைக்க அவனும் தனது தேடுதலுக்கு மீராவை சந்திக்க, பிறகு இராசாபாசமாகிறது மறுபடியும்.
அதுவரையில் காளியினை பூசித்து வரும் மீரா தன்னை எந்த காலத்திலும் காப்பாறும் என்று நினைபவளை கைவிட்ட நிகழ்வில் காளி படத்தின் உடைந்த கண்ணாடியுடன் மம்முட்டியை கொன்றுவிடும் முடிவோடு தேடி செல்கிறாள் மீரா.
என்ன தான் அறிவு சொன்னாலும், தன்னையும் தனது குழந்தையும் ஏற்றுக்கொண்டு வாழ நினைக்கும் மம்முட்டியை கொல்லாமல் இனிமேல் கணவனுடன் போய் வாழ முடியாது என்று தனது நாவலை முடிக்கிறார் அந்த ஒரே காதல் கதையில்.
இந்த கதையில் வரும் காதலன் ஒரு தனி பாத்திரம், மீரா அம்மா பாத்திரம், பைத்தியம் பையன் என்று தனியாக பிரித்துக்கொண்டு கதையை மாற்றி அமைத்துக்கொண்டார் கருப்பையா.
மற்றபடி ஒரே காதலின் திரைக்கதைக்கும் மந்திர புன்னகைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 2007ல் மலையாளத்தில் வந்த இந்த படத்தின் தழுவலே இந்த மந்திர புன்னகை.
ஒரே காதலில் வரும் இரம்யா கிருட்னனின் பாத்திரம் கருப்பையாவின் அப்பா பாத்திரம், அவள் கூறும் அத்தனை வசனும் அடிக்கு அடி பிசக்காமல் இவர் கூறுவார்.
மற்றபடி மொழியாக்கத்தில் வரும் அத்தனை அம்சங்களையும் கொண்டு அருமையாக கயாண்டுள்ளார் கருப்பையா.
மம்முட்டி ஒரு பொருளாதார அதிமேதாவி என்றால் கருப்பையா ஒரு கட்டிட வடிவமைப்பு வல்லுனன் அவ்வளவு தான். ஆக்குசு போர்டு பல்கலையில் சொற்பொழிவு நிகழ்த்தும் அந்த பாத்திரம் கருப்பையாவாக கட்டிடங்களை அனாயசமாக வடிவமைத்து கொடுக்கிறது அவ்வளவு தான்.
இத்த காளி மற்றும் அனைத்து சாமிகளையும் நம்பினேன் எதுவும் கைகொடுக்கவில்லை என்று மீரா கூறும் வசனங்களை அந்த கண்ணாடியை உடைக்கும் தனது வெளிபாடில் காட்டியிள்ளார் கருப்பையா.
படைப்பாளிகளின் படைப்பை குற்றம் சொன்னால் அவர்களுக்கு வரும் கோபம் நீதியானே, ஆனால் அதே சமயத்தில். அடுத்தவரின் படைப்பை அப்படியே களவாடி இது என்னுடைய படைப்பு என்று சுட்டிக்காடும் போது எமது மேல் வரும் கோபமும் சரி என்று ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை. முடிந்தால் இல்லை என்று வாதிடலாம்..............
3 comments:
very nice
very nice
மதி பதிவை சொன்னீர்களா அல்லது மந்திர புன்னகையை சொல்கிறீர்களா..............
Post a Comment