முள்ளிவாய்காலுக்கு பிறகு ஈழம் சம்பந்தமாக எதுவும் எழுதுவது இல்லை. காரணம் எழுத ஒன்றும் இல்லை என்று இல்லை. இந்த அளவிற்கு மனிதத்தன்மை இல்லாமல் இந்தியாவாலும் இருக்கமுடியும் என்று காட்டியது மட்டும் அல்ல. உலகுக்கே மக்களாட்சி என்றால் என்ன என்று எடுத்து சொல்லியும், உலக மக்களாட்சியின் காவலன் என்று தன்னை அடையாள படுத்திக்கொண்டு அலையும் அமெரிக்காவும் மௌனமாக இருந்ததும் தான் என்னை மௌனிக்க செய்தது.
ஈழமக்களை தானே கொன்றார்கள் நம்மை இல்லையே என்று இன்றைக்கு வேண்டும் என்றால் நிம்மதியாக இருந்துவிடலாம். ஆனால் நாளைக்கு நமக்கும் நமது சந்ததிகளுக்கும் இது தான் நடக்கும். அன்றைக்கும் இப்படியே தான் ஏதாவது ஒரு அரசியல் காரணங்களை சொல்லி அனைவரும் மண்ணை அள்ளி அவர்கள் பங்குவிற்கு வீசுவார்கள்.
அன்றைக்கு மாகாத்துமா காந்தி அகிம்சாவாதி, எந்த ஒரு உயிருக்கும் எந்த தீங்கும் விளைவிக்க கூடாது என்ற சொன்ன அவர். ஒரு நாட்டை காக்க ஒரு ஊரை பலிக்கொடுத்தால் முடியும் என்றால் அதில் தவரில்லை என்று சொன்னார்.
அந்த நீதியை தான் இன்றைக்கு பலரும் முள்ளிவாய்க்காலை இந்தியா அதன் ஆளுமையை காப்பாற்றிக்கொள்ள பலியிட்டது சரி என்று வாதிடுகிறார்கள்.
அடுத்தவர் வீட்டு பிள்ளைகள் என்றால் அனேகம் பேருக்கு எப்பவும் கிள்ளு கீரைதான். அதுவே தனது என்று வரும் போது என்ன ஆனாலும் என்று எல்லாம் வருவார்கள்.
இந்தியாவிம் மற்ற மாநிலங்களில் நிகழும் வன்முறைகளுக்கு எல்லாம் மாய்ந்து மாய்ந்து எழுதும் மக்கள் எல்லாம் கூட ஈழத்து சர்ச்சைகளில் தனக்கு என விலகி இருப்பது எதை காட்டுகிறது. அவர்களுக்கு மனித நேயம் இல்லை என்றா, இல்லை இந்தியா என்ற எல்லைக்கு அப்பால் யார் செத்தாலும் எனக்கு கவலை இல்லை என்றா. அல்லது இந்தியர்கள் அனைவரும் தான் எனது சகோதர சகோதரிகள் என்று நாங்கள் உறுதிமொழி கொண்டேமே தவிர, உலகில் உள்ள அனைவரும் இல்லை என்றா..........
நேருவின் ஆட்சியின் போது ஏற்படி பஞ்சத்தில் இருந்து இந்தியர்களை காக்க அமெரிக்கா, கப்பல் கப்பலாக பால் பொடியும், மற்ற உணவு பொருட்களை கொண்டு வந்து 4 துறைமுகங்களிலும் குவித்தபோது அவர்களின் அன்பையும் மனித நேயத்தையும் பாராட்டினோம், வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கைகள் வாசித்தோம்.
இரச்சியாவின் நண்பனாக இருக்கும் ஒரு நாட்டுக்கு அமெரிக்கா அன்று தனது உதவிகரங்களை தயக்கமோ அரசியலோ பார்க்காமல் நீட்டி மக்களை காட்ட முயன்றது. அந்த உதவிகள் எல்லாம் வேண்டாம் என்று சொல்லும் நிலையிலும் நாம் இல்லை. நேருவும் வரட்டு பிடிவாதம் பிடிக்காமல் உதவிகளை மக்களுக்காக ஏற்றுக்கொண்டார்.
அங்கே அவர்காட்டியது அவரது மனித நேயமும் அரசியல் முதிர்ச்சியும். தான் எவ்வளவு வலிமையானவர் என்றோ அல்லது போலி கௌரவமோ அவர் பார்த்து இருந்தால் இந்தியா இன்றைக்கு மக்கள் தொகையில் இரண்டாவது இடத்திற்கு எல்லாம் வந்திருக்காது.
அப்படி இருந்த இந்தியாவின் மக்கள் அதுவும் தமிழர்கள் தனது வீட்டு வாசலில் நடக்கும் கொலைகளை பற்றி எல்லாம் எனக்கு என்ன என்று தான் இருப்பேன் என்று சொல்வது தான் பொருத்துக்கொள்ள முடியவில்லை.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகுக்கு சொல்லிக்கொடுத்த தமிழர்கள் இன்று இந்திய எல்லையை தாண்டி எனது மனமோ, செயலோ இல்லை என்று குறுகிப்போனது ஏன்.
என்னக்கும் தான் புரியாமல் அவர்களைப்போல் நானும் கேட்கிறேன், இலங்கையில் நடந்தது அவர்கள் நாட்டு உள்விவகாரமாகவே இருந்தாலும், அந்த மக்கள் சாகட்டும் என்று முடிவெடுக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது. உதவி செய்யாமல் இருப்போம் என்று இருப்பதே தவறு, அதுவும் இல்லாமல் நானும் சேர்ந்து கொல்கிறேன் என்று களத்தில் நின்று பிஞ்சு குழந்தைகளையும் விட்டுவைக்கமல் கொன்றதோடு நில்லாமல்.
தடுப்பு முகாம்களில் அடைத்துவைத்து புதிய நாசிக்கொள்கைகளை நடைமுறைபடுத்துவதை வேடிக்கைபார்த்துக்கொண்டும். ஐநாவின் நாயகம் வந்து இத்த மாதிரியான நவீன தடுப்புமுகாம்களை உலகில் வேறு எங்கும் பார்க்கமுடியாது என்று சொல்ல வைத்ததும்.
இந்து இராம் இந்து பத்திரிக்கை சார்பில் இலங்கையினை பார்வையிட்டு இப்போது தான் எனக்கு மகிழ்சியாக இருக்கிறது என்றும் எழுதவைத்தது அல்லவா இந்தியா.
நடக்கும் படுகொலையை தடுக்க வக்கில்லாத இத்தியாவிற்கு போருக்கு பிறகு நாடு அமைதியாக இருக்கிறது என்று சொல்ல வெட்கமாக இல்லை. அரசுக்கு தான் வெட்கம் இல்லை, மக்களுக்கும் கூடவா வெட்கம் இல்லாமல் போனது.
ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம் தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிற்கு இரண்டு இளைஞர்களை தமிழர்கள் தரவேண்டும் அதுவும் ஒரு ஆண் ஒரு பெண், ஆணை நாட்டின் ஆளுமையை காப்பாற்ற பலிகொடுக்க வேண்டும், பெண்களை அந்த வேலையை செய்யப்போவோருக்கு போக பொருளாக கொடுக்க வேண்டும் என்று கேட்டல் இந்த உண்மை தமிழர்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு அரசுக்கு தனது பிள்ளைகளை கொடுப்பார்கள். அதுவும் இரண்டு மட்டும் போதுமா என்னிடம் இன்னமும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றா சொல்வார்கள்.
அடுத்த மதத்து மக்கள் படுகொலை செய்யப்படும் போதும், அடுத்த மாநிலத்து மக்கள் மடியும் போதும் சரி, இப்படி ஒரு மனட்பான்மையோடு மக்கள் பேசுவதும் எழுதுவதும் எந்தவிதத்தில் நீதி என்று தெரியவில்லை.
இந்தியாவின் எதிரி பாக்கிட்தானம், அங்கே பூகம்பம் வந்து மக்கள் மடிந்த போது இந்திய இராணுவத்தை அனுப்பி மக்களுக்கு உதவ சொன்னது இந்தியா. அதுவும் இந்தியாவின் பாராளுமன்றம் வரை வந்து வன்மம் காட்டிய இந்தியாவின் எதிரி நாட்டில் வாழும் அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்காக. பாராட்ட வேண்டிய செய்கை. அதுவும் இந்தியாவின் மீசி 3 முறை இராணுவ தாக்குதல்களை தொடுத்த எதிரி நாட்டின் மக்களின் மேல் இந்தியா அக்கரை காட்டுவது உண்மையில் பாராட்ட வேண்டிய ஒன்று தான்.
இப்படி எந்தவித முகாந்தமும் இல்லாத அப்பாவி மக்கள் ஒன்றரை இலட்சம் மக்களை கொன்று குவித்தது எந்தவிதத்தில் சரி என்று வாதாடுகிறார்கள் என்று எனக்கு கொஞ்சம் கூட விளங்க இல்லை.
ஈராக்கில் சதாமின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளின் விளைவாக பொருளாதார தடைவிதிக்கப்பட்டு இருந்த நேரத்தில் உணவுக்காகவும் மருந்துக்காவும் எண்ணை என்ற கொள்கைக்கு ஆதரவு அளிக்க இந்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டார்கள். அந்த ஈவும் இரக்கமும் தமிழர்களின் பால் வாராமல் போனது ஏன் என்று விளக்குவார்களா இந்த உண்மை தமிழர்கள்.
சொமாலியா கடற்கொள்ளையர்கள் வேறு எதோ ஒரு நாட்டின் கப்பலை கடத்திய போது வீரு கொண்டு எழுந்த இந்திய கப்பற்படை அந்த கொள்ளையர்களை சிறைபிடித்து கப்பலை காப்பாற்றியது. அதே கடற்படை அன்றாடம் கொல்லப்படும் தமிழக மீனவர்களை, அவர்கள் தான் கொல்கிறார்களே ஏன் போகிறீர்கள் என்று உபதேசம் செய்கிறார்கள். உண்மை தமிழர்களுக்கு இந்த செய்திகள் கண்களில் படுவது இல்லையா. அல்லது சில மீனவர்களை பலிகொடுத்தால் இந்திய ஆளுமைக்கு தானே நல்லது என்று மௌனித்து இருக்கிறார்களா.
ஆசுதிரேலியாவில் சீக்கியர்களை தலை முடியினை சரித்து அவமானபடுத்திய மாணவர்களை காப்பாற்றிய பிறகு தான் எனக்கு தூக்கமே வந்தது என்று சொல்கிறார் இந்திய பிரதமர். அந்த மனிதனுக்கு தனது மக்கள் பால் உள்ள உணர்வுகள் தமிழர்களுக்குள் இல்லாமல் போனது எப்படி. அடி இலங்கை மக்களை விடுங்கள் அவர்கள் தான் எல்லைக்கு அப்பால் உள்ளார்கள், நமது மீனவர்களுக்காகவாது குரல் கொடுத்தார்களா. இல்லை ஏன் என்றால் அவர்கள் எல்லாம் உண்மை தமிழர்கள், அதையும் தாண்டி உண்மை இந்தியர்கள் ஆயிற்றே.
முடிந்தால் குரல் கொடுங்கள் அது மனித நேயத்திற்கு நீங்கள் செய்யும் தொண்டு, அது கூட எதற்கு செய்யவேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் இந்த பக்கம் செய்திகளை விட்டு விடுங்கள். அதைவிடுத்து இந்திய ஆளுமை, அவர்கள் இதை செய்ததால் அவர்களை கொன்றது எல்லாம் சரி என்று எல்லாம் ஆராய்ச்சிக்கட்டுரைகள் எல்லாம் வேண்டாம்.
இந்திய சட்டப்படி தன்னை தானே கொல்ல முற்படுவது கூட சட்டபடி குற்றமாகும், அப்படி இருக்க ஒன்றறை இலட்சம் மக்களை கொன்றது சரியே என்று வாதாட முற்படுவது, அந்த கொலைகளை செய்தவர்களைவிட மிகவும் மோசமான குற்றம்.
இல்லை நாங்கள் சொல்வது தான் சரி என்று நீங்கள் சொன்னால், தலைப்பில் சொன்னது போல் சீக்கியர்களையும் பஞ்சாப்பையையும் அழித்து ஒழித்து விடவேண்டும் என்று மறைமுகமாக கூட அல்ல பகிரங்கமாகவே நீங்கள் அனைவரும் கோரிக்கைவிடுவது என ஆகும்.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
1 comments:
பாகிஸ்தானுக்கு எதிராக குரல் கொடுக்க ஒட்டுமொத்த இந்தியாவும் தயாராக இருக்கும். அது தேசப்பற்று. ஆனால் இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்க மறுக்கும். இது அண்டை நாட்டின் இறையாண்மையில் நாம் தலையிடவிரும்பாத பக்குவமுள்ள ஜனநாயகவாதிகளாக காட்டிக்கொள்ளும் நாடகம். உண்மையினை நோக்கின் தென்னிந்தியர்களை குறிப்பாக தமிழர்களை எவருமே சராசரி இந்தியனுக்கு தரும் மரியாதைக் கூட தரவிரும்புவதில்லை. மத்தியில் கூட்டாட்சி எனும் நிலைக்குத் தள்ளப்பட்டதால் தான் நமக்கு மத்தியில் முக்கிய துறையில் அமைச்சர்கள் கிடைத்தனரே அன்றி முன்னெப்போதுமில்லை. 40 எம்பிக்களை அளித்த எம்.ஜி.ஆர் காலத்தினில் கூட தமிழகத்திலிருந்தவர்களுக்கு காபினெட் அந்தஸ்தோ அல்லது முக்கியத்துறையோ காங்கிராஸாருக்கு தரவில்லை. ஆனால், 5 எம்பிக்கள் தந்த உ.பி.யினருக்கு 3 காபினெட் கொடுத்து அழகு பார்த்தது காங்கிரசு. பெரும்பான்மையான மானங்கெட்ட தமிழக அரசியல்வாதிகளும் மற்றும் ஊடகங்களும் தம்முடைய சுய நலத்திற்கே / வறட்டுக் கொள்கைகளுக்கே முக்கியத்துவம் தந்து இனமானத்தையும் மனிதநேயத்தையும் காற்றில் பறக்க விடுகின்றனர்.
Post a Comment