1) சமச்சீர் கல்வியை உடைப்பது, அப்படி சமச்சீர் கல்வி என்று வந்துவிட்டால் பின்னர் எதை சொல்லி கோடிக்கணக்கில் ஒன்றாம் இரண்டாம் வகுப்பில் சேர்க்க பணம் கேட்க்கமுடியும் இந்த கல்வி வணிகர்களால். முதலாளிகளின் எலும்புத்துண்டுக்கு ஓடுவது தானே செயலலிதாவின் தலையாய கடன்.
2) கருணாநிதி ஆட்சியில் கட்டினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக புதிய சட்ட சபையை நாளுக்கு ஒன்றாக அறிவிப்பது என்றைக்கு நிற்குமோ. 5 கோடி மதிப்பில் பழைய திட்டத்தில் புதிய புத்தகங்கள் பெங்களூரு பதிப்பகத்தில் தயாராகிவிட்டது அதற்காகவாது சமச்சீர் கல்வியை தடை செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மன்றாடிய அதிமுக அரசு, 1500 கோடி செலவில் உருவான கட்டிடத்தை அடுத்த வள்ளுவர் கோட்டமாக மாற்ற முயற்சிப்பதை எந்த வகையில் சரி என்று சொல்வாரா. ஒரே காரணம் அந்த கட்டிடத்தில் அரசு நடத்தினால் சீக்கிரம் உயிர் போகும் என்று சொன்ன சோதிடத்தின் மகிமை அல்லவா அது.
3) நீயுடன் புவியீர்ப்பு விசையை கண்டு பிடித்ததை போல, அதிமுக அரசும் அதன் அறிவியலர்களும் சேர்ந்து ஒரு அரிய கண்டுபிடிப்பினை கண்டுபிடித்தது தான் இந்த மூன்றாமது, தமிழ் புத்தாண்டு. 1972ல் உலகறிய சொன்ன விலக்கத்தை எல்லாம் கடலில் வீசி விட்டு, பாம்பு நிலாவை விழுங்குவது தான் சந்திர கிரகணம் என்றும் அதே பாம்பு சூரியனை விழுங்கினால் சூரிய கிரகணம் என்றும் மறுபடியும் சொல்லிக்கொடுக்க ஏற்பாடுகளை செய்த்துகொண்டுள்ளார் போலும்.
இன்னமும் 4 ஆண்டுகாலம் இந்த மாதிரியான துக்ளக் தனங்களை செயலலிதாவும் அவரது வழிகாட்டி சோவும் சேர்ந்து நடத்துவதை பார்த்து இரசிக்கலாம்.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
2 comments:
tamil new year is not newly created, it has been created before people found english calender systems. It has been based on several research and reasons.
Just people are thinking few decades, but before christ birth we had a kingdom and we send gift to the king in rome when chirst was not even born.
Do our politicians are capable more than them.. they lived for us, they structured us, they found infinity things and leave to us..
இந்த அரசியல் பிரச்சனைகள் துவங்கும் முன்னரே இரமகி அவர்கள் மிகவும் தெளிவாக விளக்கி இருந்தார். சனவரியில் துவங்கிய நாள் எப்படி ஏப்பிரலுக்கு மற்றியது என்ற அனுமானத்தையும் அழகாகவும் அறிவியல் ஆதாரங்களையும் இணைத்து வெளியிட்டிருந்தார்கள்.
இந்த செய்திகளை விவாதிக்கும் போது, கல்லூரியில் பணியாற்றிய விரிவுரையாளர் ஒருவர் சோதிடம் தெரிந்தவர் வைத்த வாதங்களை சபைகளில் சொல்ல இயலாத வண்ணம் இருந்தது. பிறகு இராமகி அவர்களின் பதிவை கொடுத்த பிறகு ஒத்துக்கொண்டார். அவர் ஒரு கணக்கு விரிவுரையாளர் புரிந்துகொள்வதில் அவருக்கு தெளிவு இருந்தது.
தீபாவளியை கொண்டாடாதே என்று சின்ன வயதில் எங்களுக்கு சொன்னபோது ஏன் என்ன அனியாயம் என்று தான் இருந்தது. மன்னித்துவிடு என்று ஒருவன் கேட்டபிறகும் அவனை கொல்வது எந்தவிதத்திலும் சரியான் காரியம் ஆகாது. இந்த தெளிவு அன்றைக்கு இல்லை அது போல் பிறகு உணர்ந்து கொள்வார்கள் தமிழர்கள்.
Post a Comment