பிறந்ததில் இருந்து பார்வை தெரியாத ஒருவனுக்கு பார்வையை கொடுத்து உலகின் அழகை நன்றாக இரசிக்க வைத்துவிட்டு, அவன் இழந்ததை பெற்றுவிட்ட மகிழ்ச்சி கலைவதற்குள் அவனது பார்வையை பிடுங்கினால் என்ன அவதிகுள்ளாவானோ அப்படி அல்லவா அமையபோகிறது இந்த தேர்தல் ஏழை மக்களுக்கு.
உலகில் அனேக நாடுகளின் பொருளாதாரம் வேறு இந்தியாவின் பொருளாதாரம் வேறு.
உதாரணத்திற்கு அமெரிக்காவை எடுத்துக்கொள்வோம். அமெரிக்காவில் கிடைக்கும் சராசரி சம்பளத்தில் அனேக அமெரிக்கர்கள் உண்ணும் உணவு எளிதில் வாங்கி உண்ண முடியும். பொரும் பணக்காரர்களும் நடுத்தர மற்றும் அடிதட்டு மக்களும் உண்ணும் உணவுக்கு அதிக வித்தியாசம் கிடையாது.
எளிய வார்த்தைகளில் சொன்னால் கையேந்து பவனில் இருந்து விலை உயர்ந்த உணவகங்களுக்கும் உணவு தரத்தில் அதிக வித்தியாசம் இல்லை.
அனேக உலக நாடுகளும் இப்படி தான். ஆனால் இந்தியாவில் மட்டும் தான் வித்தியாசம். கையேந்தி பவனில் சாப்பிட்டால் பழக்கம் இல்லாத மக்களுக்கு வாந்தியும் பேதியும் வருவது நிச்சயம். உணவுகளின் விலையை கீழ் இருந்து மேலே பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கும்.
உணவகத்தில் தான் இப்படி தான் என்று இல்லை. மக்கள் வாங்கும் அரிசியில் எத்தனை விதம், விலையிலும் தரத்திலும். அடி தட்டு மக்களும், சத்துணவு கூடத்தில் கொடுக்கும் உணவையும் எந்தனை மக்கள் சுவைத்து இருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் அந்த கூடத்தின் பக்கத்தில் செல்லும் போது அடிக்கும் வீச்சம் அனேகமனோருக்கு பரீட்சயம் இருக்கும் என்று நம்பிகிறேன்.
இப்படி ஒரு மோசமான நிலையில் இருந்த நிலையில், மலிவு விலையில் தரமான அரிசி என்று கொடுத்தார் கலைஞர். தனது தேவைக்கு போக மிச்சம் என்று மக்கள் வெளியில் விற்கும் அளவிற்கு மக்களுக்கு இன்று கிடைத்துக்கொண்டு இருக்கிறது.
இன்னமுன் எத்தனை காலத்திற்கு கிடைக்கும், ஆட்சி கலையும் வரை தான். ஆட்சி மாறியதும் செயா செய்யபோகும் முதல் வேலை, இந்த ஏழைமக்களுக்கு உள்ள அனைத்து சலுகைகளையும் தூக்குவது தான்.
அதிமுகவிற்கு தான் ஏழை என்றாலே பிடிக்காதே, அவ்வளவு வெறுப்பு அவர்களுக்கு இந்த மக்களை பார்த்தால்.
இப்படி ஒரு உணவு சொகுசை கலைஞர் மக்களுக்கு காட்டி பழக்கி இருக்கவேண்டாம், பிறகு இந்த உணவுக்காக மக்கள் ஏங்கவிடவும் வேண்டாம்.
இந்தியாவில் உணவு விலைகள் இன்று அமெரிக்காவில் விற்கும் இடாலர் விலைக்கு சமாக விற்கிறார்கள் இட்டிலியும் தோசையும் கூட. வெளி நாட்டு உணவுகளுக்கு அந்த உணவகம் தான் விலை தீர்மானிக்கும், அது அமெரிக்காவுக்கு சரி ஆனால் இந்தியாவிலும் அதே விலைக்கு என்றால் எப்படி, தலை சுற்றுகிறது......
உதாரணத்திற்கு கேஎப்சி கோழி 8 துண்டுகள் ரூ1350, அமெரிக்காவில் அதே நிறுவனம் 10 துண்டுகளை 10 இடாலர்களுக்கு கூவிக்கூவி விற்பது இந்தியாவில் எத்தனை மக்களுக்கு தெரியும்.
ஆட்சி மாற்றம் வந்தால் ஏழை மக்கள் சாப்பாடுக்கு காவடி எடுக்கப்போவது நிச்சயம்.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
0 comments:
Post a Comment