ராசா 10 கோடியுடன்
பதிவர் சீமாச்சு அவர்களின் இந்த பதிவில் http://seemachu.blogspot.com/2011/01/109.html அழகாக ஒரு காட்சி பொருளில் ஊழல் எவ்வளவு என்று எடுத்து காட்டியுள்ளார் அருமையாக. அந்த கடைசி படம் பார்க்கும் போது அடக்கடவுளே சும்மாகாட்டியும் வச்சுகோன்னு கொடுத்ததே இவ்வளவு என்றால். மக்கள் சேவை, ஏழை மக்களில் மழையில் மாட்டிக்கொண்டால் வீட்டிற்கு எப்படி சொல்வார்கள் என்று யோசித்தேன் இந்த அலை பேசி நிறுவனத்தை துவங்கினேன் என்று நீலி கண்ணீர் வடித்தவர்களின் கோரமுகம் இப்படி தான் இருக்கும் போலும்.
(அதே ராசா 1760 ஆயிரம் கோடியுடன்
அப்போ அந்த முதளாலிகளின் அளவு தமிழ் நாடு அளவில் இருக்குமா...........
படங்கள் பதிவர் சீமாச்சு பதிவில் இருந்து.)
மக்களை எப்போதுமே லஞ்சம் வாங்கும் அரசியல் வாதிகளை மட்டுமே காட்டிக்கொடுக்கும் ஊடகங்கள், இத்த முதளாலிகளின் அசுர கொள்ளைகளை சொல்ல மறுப்பது ஏன்.
ஏன் என்றால், தன்னிடம் பிடுங்கி திண்ணும் இந்த அரசியல்வாதிகளின் கொட்டத்தை அடக்க இந்த முதளாலிகளின் தூண்டுதலில் பேரில் அல்லவா இந்த ஊடகங்கள் என்னமோ மக்கள் தொண்டு புரிந்துவிட்டதாக ஆர்பரித்துகொள்கிறது.
இப்படி எழுதிய ஊடகத்துக்கு அரசியல் என்ன மரியாதை செய்யும் என்று சொல்லித்தெரிய வேண்டியது இல்ல. அவை எல்லாவற்றிலும் இருந்து இந்த ஊடகங்களை தங்களுடைய சொந்த நலனுக்காக இந்த முதளாலிகள் பாதுகாக்கிறார்கள்.
நாம் மக்கள் தான் பாவம் இந்த சதிகள் எல்லாம் தெரியாமல் மாட்டிக்கொண்ட ராசாவையும் இன்னமும் இது சம்மந்த பட்டவகளை கரித்துக்கொண்டும் சபித்துக்கொண்டும் இருப்போம் என்று முதளாலிகள் போட்ட கணக்கு தவறாமல் நடக்கிறது.
வாழ்க மக்களாட்சியும் அதை வளர்க்கும் தொழில் அதிபர்களும். 3ஆம் தர நாடான இந்தியாவிலே இப்படி என்றால் வல்லரசு நாடுகளின் முதளாலிகள் எப்படி பணம் வைத்து இருப்பார்கள். அடேங்கப்பா............
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
4 comments:
நீங்கள் சொல்வது போல ராஜாவை மட்டும் குற்றவாளியாக்கிவிட்டு எல்லோரும் தப்பித்துவிடுவார்கள் போலத்தான் தோன்றுகிறது
kavalai vendam nanbare.. rajavaiyum serthu anaivarum thapithu viduvargal...
Meedum ottu poda nangal thayar...
kavalai vendam nanbare.. rajavaiyum serthu anaivarum thapithu viduvargal...
கவலை இல்லாமல் இல்லை அனானி, ஒவ்வொரு ஆட்சி முறைகளும் தோற்று போகும் போது ஒரு புரட்சி வெடித்தி மக்களை மாற்றி கொடுக்கும். இப்போ மக்களாட்சி தோற்றுக்கொண்டு வருகிறது. கிட்டதட்ட நமது விரலை கொண்டே நமது கண்களை குத்தும் வேலையை தான் அனைவரும் செய்துக்கொண்டு வருகிறார்கள். புரட்சி வெடிக்கும் இங்கு மட்டும் அல்ல உலகெங்கும் வெடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Post a Comment