Friday, August 14, 2015

தமிழகத்தில் அடுத்த ஆட்சி பாசக தான் -- பாவம் தமிழக மக்கள் -- மோடி சந்திபின் இரகசியம்

இது வரையில் என்ன என்னவோ செய்து பார்த்தும் திராவிட கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வரும் வாய்ப்போ இல்லாத நிலையில் பாசகவின் செயல்கள் நமக்கு தெளிவுபடுத்துவது என்ன.

தமிழருவி மணியன் சொன்னது போல் திமுக இனி ஆட்சியில் அமர்வது சாத்தியம் இல்லாத ஒன்று தான். ஆனால் செயலலிதா அப்படி இல்லை குறைஞ்சது திமுக வரக்கூடாது என்றதுக்காவது அவரை மக்கள் தேர்ந்து எடுக்கும் சூழ்நிலை தான் கடந்த 10 ஆண்டுகளாக நிலவி வருகின்றது.

ஆக செயலலிதாவை தேர்தலில் இல்லாமல் செய்துவிட்டாலே போதும் என்ற ஒரே நோக்கில் அவரது சிறை தண்டனையை உறுதிபடுத்தும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள இந்த வேளையில் கொஞ்சம் கூட அவசியமே இல்லாத சூழலில் மோடி தமிழகம் வந்து போகவேண்டிய அவசியம் என்னவாக இருக்கும்.

செயலலிதா மேல் தொடுக்கப்பட்ட வழக்கு நீர்த்துப்போகவும் அப்படி உச்ச நீதிமன்றத்தில் நீர்த்து போனால் இனியும் வரப்போகும் வழக்குகளையும் இந்த வழக்கின் அடிப்படையில் நீர்த்து போகவும் செய்யும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், இந்த வழக்கை எப்படி முடித்தால் சரியாக இருக்கும் என்ற ஆலோசனையில் நீதித்துறையும் அரசியல் துறையும் நீண்ட ஆய்வுக்கு பிறகு இப்படி முத்தால் தான் நாட்டிற்கு நல்லது என்று ஒரு வரைவு தயாரித்து ஆலோசனைக்கு அனுப்பி இருக்கும். அதை தெரிந்து கொண்ட பாசக இது தான் சமயம் என்று தனது வெற்றியை இதன் மூலம் நிறவேற்றும் எண்ணதின் வெளிபாடே மோடி செயலலிதா சந்திப்பு.

டான்சி வழக்கில் செயலலிதாவை விடுவித்ததை போலே இந்த வழக்கிலும் ஒரு சப்பை கட்டைகட்டி கௌரவமாக விடுவிக்கப்படுவார். அப்படி விடுவிக்கும் கால் தனது உடல் நிலையை காரணம் காட்டி செயலலிதா அமெரிக்காவிற்கோ அல்லது மற்ற ஒரு பாதுகாப்பான நாட்டிற்கோ சிகிச்சைக்கு என்று சென்று அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவார்.

இதன் இடையில் மாறன் சகோதரர்களின் சொத்தை முடக்கியது போல் திமுகவின் சொத்துகளையும் முடக்கியும் கலைஞரை தனிமைபடுத்தியும் விடுவார்கள். இந்த தேர்தலில் திமுக வர வாய்பே இல்லை என்றாலும் செயலலிதா இல்லாத வெற்று இடம் இவருக்கு கிடைகாமல் இருக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அவ்வளவு நடக்கும்.

பாராளுமன்ற தேர்தலில் அள்ளி வீசிய வசீகர பேச்சுகளை போல், தமிழகத்தில் அனைத்து வீட்டு பிள்ளைகளில் ஒருவருக்காவது அரசு வேலை என்று தனது தேர்தல் அறிக்கையை துவங்குவார்கள். எப்படி இந்தியாவின் ஒவ்வொருவருக்கும் 15 இலட்ட ரூபாயை கொண்டுவந்து உங்களது வங்கி கணக்கில் போடுவோம் என்று சொன்னார்களோ அதே போல் சொல்வார்கள்.

அந்த பிள்ளைகள் வேலை கிடைக்கும் என்று நம்புவார்களோ இல்லையோ அவர்களை பெற்று படிக்க வைத்துவிட்டு நிற்கும் பெற்றோர்கள் அரசு வேலை கிடைத்தால் கூட போதும் என்று நினைத்து பாசகவின் ஆசை வார்த்தைகளை நம்பி அவர்களுக்கு வாக்கை அள்ளி கொட்டுவார்கள்.

பள்ளிபடிப்பை முடித்து தொழிற்கல்வி போகமுடியாமல் தவிக்கும் பிள்ளைகளும் இந்த அரசு வேலை கிடைக்கும் என்றும் நம்பி பாசகக்கு வாக்கு சேகரிப்பார்கள்.

இது மட்டும் இல்லாது பாசக வந்தால் நாட்டில் புண்ணியம் பெருகும் என்று மதத்தலைவர்களை விட்டு சொல்ல சொல்வார்கள்.

தமிழக மக்களின் நல வாழ்வு மட்டுமே எங்களின் இலட்சியம் என்று வடகத்தியர்கள் அனைவரும் "வணக்கம் அனுபான வாக்கால மக்குலே" என்று அழகு தமிழில் பேசி வலம் வருவார்கள்.

இந்த வித்தைகளை எல்லாம் கண்டு களித்து இருக்கும் சாதிகட்சிகளும், இது வரையில் மக்களும் திராவிட கட்சிகளும் ஒதுக்கி வைத்து இருந்த சின்ன சின்ன தலைவர்களும் இந்த "வனுக்கம் தமிலக மக்குலே" மக்களுக்கு மேடைகளில் நின்று மொழி பெயர்த்து பூரித்து போவார்கள்.

இந்த மாயைகளின் முடிவில் தமிழகத்தில் 2016ல் பாசக ஆட்சி மலரும். ஆட்சிக்கு வந்ததும் பாசக எல்லா இடங்களிலும் தங்களுக்கு வேண்டியவர்களை நிறுவுவார்கள். அப்படி வேலைக்கு வரும் ஆட்கள் குறைந்தது 30, 40 ஆண்டுகளாவது வேலையில் இருப்பார்கள். அந்த 30, 40 ஆண்டும் பாசக ஆட்சியாகத்தான் இருக்கும் தமிழகத்தில்.

இந்த நிலையை எட்டி தான் தமிழகம் எப்படி ஒரு நல்ல நிலையில் இருந்தது என்று தெரிந்து கொள்ளும். இப்போது சொல்வதை போல் காமராசர் ஆட்சி என்று சொல்வதை போல் அன்றைக்கு திராவிட ஆட்சி என்று மக்கள் தெருவுக்கு தெரு சொல்லி பெருமிதம் அடைவார்கள்.

பாசகவின் தமிழக ஆட்சியில் இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசமாத்தான் இருக்கும் என்றதில் சந்தேகம் ஏதும் இல்லை.

தனது பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் என்று நம்பி வாக்களித்த அந்த பேற்றோர்கள் கடைசிவரை கட்சி அலுவலுகத்துக்கும் வேலை வாய்பு அலுவகத்துகும் அலைவதை வைத்து நிழல்கள் போல் இன்னமும் அழுத்தமாக படங்கள் நிறைய வரும். தமிழ்கம் திருத்தவே முடியாத புண்ணிய பூமியாகி காவியுடையணிந்து அரிவாளுடன் ஓடும் காட்சிகள் எல்லாம் அன்றாடம் நடக்கும் காட்சிகளாகிவிடும்.

மறுபடியும் அந்த சாதாரண மனிதர்கள் சிந்திப்பார்கள் என்ன செய்து இவைகளை மாற்றலாம் என்று, அப்போது பாசகவினர் திமிராக சொல்வார்கள் இங்க எல்லாம் இப்படி தான் பிடிக்கவில்லை என்றால் பாக்கித்தானுக்கு போ என்று சொல்வார்கள் தேசபக்தர்களாக.......

1 comments:

')) said...

ஆம் உண்மைதான். முதல் சட்டமாக ஹிந்தி கட்டாயமாக்கப்படும். சமஸ்கிருதம் அதைவிடக் கட்டாயமாக்கப்படும். மொழி வழி மாநிலங்கள் இல்லாது போகும்.