Friday, August 7, 2015

Bajrangi Bhaijaan - திரை விமர்சனம் - The Terminal (2004)

The Terminal (2004)

தற்பொழுது அதிகம் பேசப்படும் படமாக ஓடிக்கொண்டு இருக்கிறது இந்த இந்தி படம்.

உண்மை சம்பவமாக ஒரு சிறுமி பாக்கிட்த்தானத்தில் அவதி படுவதாகவும், இந்தி படத்தில் வருவதை போல் அவளை அவளது பெற்றோருடன் சேர்க்க இந்திய வெளியுரவு துறை முயலுவதாகவும் கூட செய்தி அடிப்படுகிறது.

சரி விமர்சனத்திற்கு வருவோம்.

ஆங்கிலப்படத்தின் கதை இது தான்,கிரகோசியா நாட்டில் இருந்து அமெரிக்க நியூயார்க் நகருக்கு வந்து இறங்கும் சமயத்தில் புரட்சி வெடிக்கிறது கிரகோசியாவில். ஆகவே நாயகனின் கடவு சீட்டு செல்லாதாகவும் அறிவிக்கப்பட்டு அமெரிக்காவில் இறங்கி வெளியே செல்ல முடியாதபடியும் தாயகம் திரும்ப முடியாமலும் அங்கேயே மாட்டிக்கொள்கிறார்.

ஆங்கிலம் தெரியாத விக்டருக்கு விமான அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள் என்று புரியவும் இல்லை, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் கற்றுக்கொள்கிறார். 

தினமும் குடியேற்ற அதிகாரிகளை சந்திப்பதும் அமெரிக்கவிற்குள் விடமாட்டோம் என்று விரட்டி அடிப்பதுமாகவும் செல்லும் ஆரம்ப காட்சிகள்.

இவ்வளவு பிரச்சனைகள் வேண்டாம் ஊருக்கு திரும்பி போ என்றால் முடியாது என்று சொல்வான் விக்டர். எப்பவும் கையில் ஒரு சிறுய அலுமினிய பெட்டி ஒன்றை கெட்டியாக பிடித்துக்கொண்டே இருப்பார். அது என்ன என்று கேட்டால் பதிலும் சொல்ல மாட்டார்.

ஒரு கட்டத்தில் விக்டரை என்ன செய்வது என்று தெரியாமல் திணரும் அதிகாரி அவனாக இந்த எல்லை தாண்டி செல்லட்டும் காவலர்களிடம் ஒப்படைத்து நாம் நிம்மதி அடையலாம் என்று இருப்பார். ஒவ்வொரு முறை அந்த எல்லை கோடுவரை செல்வதும் பிறகு தான் கண்காணிக்கபடுகின்றோம் என்று தெரிந்து திரும்புவதுமாக கதை நகரும்.

இதற்கு இடையில் விமான பணிபெண் ஒருவரை சந்திப்பதும் தான் பழகிக்கொண்டு இருந்த அந்த பணக்கார நபர் இவளிடம் பொய் சொல்வதை பொறுத்துக்கொள்ளாமல் அவனை பிரிந்துவிடவேண்டும் என்ற நிலையில் விக்டரை சந்திக்க விக்டருக்கு அவளிடம் ஒரு பரிவும் பிறகு காதலாகவும் மலருகிறது.

இப்படியே ஓடும் கதையில் கிட்ட தட்ட ஒரு 9 மாத போராட்டதிற்கு பிறகு ஒரு நாள் அனுமதி பெற்று அமெரிக்கா உள் சென்று திரும்புவதாக கதையும் திரைகதையும் அமைத்து எடுத்து இருப்பர்கள்.

சரி இந்த படத்திற்கு இந்தி படத்திற்கு என்ன சம்பந்தம் என்று கேட்பது புரிகின்றது.

ஆங்கிலத்தில் தனது அப்பாவின் கடைசி ஆசையை நிறவேற்றும் பொருட்டு அமெரிக்க வருவான் விக்டர். இந்தியில் டெல்லிக்கு செல்வான்.

விக்டர் அன்பான அடுத்தவரை மிகவும் மதிக்கும் குணம் கொண்டவராக ஆங்கிலத்தில் காட்டுவார்கள். இந்தியில் அவன் சிறந்த பக்திமானாக காட்டபடுவார்.

ஆங்கிலத்தில் அறிமுகம் இல்லாத அந்த பெண் அழுவதை பார்க்க பொறுக்காத விக்டர் அவளுக்கு உதவும் விதமாக தொடங்கும் செயல்களை முதலில் சந்தேகித்து பிறகு அவளுடைய வாழ்கையை அடகு வைத்து விக்டர் அமெரிக்கா உள் செல்ல அனுமதி பெற்று தருவாள், விக்டரிடம் அவளுக்கு பிடித்தது மறன படுக்கையில் தன் தந்தைக்கு செய்து கொடுத்த வாக்கு தவறாமை.

இந்தியில் மிச்ச காசை கொடுக்கிறேன் என்று துவங்கும் அந்த சந்தேக காட்சிகள் கடைசியில் இவனது அப்பாவி தனத்தை பார்த்து காதல் பிறக்கும் பிறகு பாக்கிட்தானம் செல்வதற்கு அவளது வாழ் நாள் சேமிப்பை தூக்கி கொடுப்பாள்.

ஆங்கிலத்தில் ஒரு முறை மொழி பெயற்பாளராக விக்டரை அழைக அவனோ தன் தந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சக பயணி கொண்டுவரும் மருந்தை பிடித்து வைத்துக்கொண்டு கடமையாற்றும் அதிகாரியிடம் இருந்து மருந்து ஆட்டிற்கு தான் என்றும் ஒரு பொய் சொல்லிக்காப்பாற்றும் தருணத்தில் வஞ்சம் வைக்கப்பட்டுவிடுவார் விக்டர்.

இந்தியில் எல்லையை திருட்டு தனமாக கடந்து எல்லை காவல் படையிடம் அனுமதி கொடுத்தால் தான் பேவேன் என்று அடம்பிடிப்பது போல் காட்டி இருப்பார்கள். தவிர நிறை அடி உதை என்று வாங்கியும் கிளம்புவதாக காட்டி இருப்பார்கள்.

9 மாத போராட்டதிற்கு பிறகு கிரகோசியா நாடு மறுமடியும் புரட்சியில் இருந்து மீண்டு இவன் தாயகம் திரும்பும் நிலை வரும். அமெரிக்கா செல்ல ஒரு நாள் அனுமதிகிடைத்தும் ஒரு கையெழுத்து இல்லை என்று நிலைய அதிகாரி அவம் செயிக்கக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் அனுப்பமுடியாது என்று சொல்வார் செயல்படுவார்.

இந்தியில் நீண்ட பயண்திற்கு பிறகு அந்த பெற்றோருடன் பிள்ளையை சேர்த்து நாடு திரும்பும் நாளில் விடமாட்டேன் என்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி அடுத்த நாட்டுகாரர் நமது நாட்டின் கதவுகளை தொடவோ திறக்கவோ அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வார்.

ஆங்கிலத்தில் கடைசி உச்சகட்ட காட்சியில் விக்டர் விமான நிலையத்தில் இருந்து செல்கிறான் என்று தெரிந்துக்கொண்டு அவனுக்கு அது இது என்று விமான நிலைய கடைக்காரர்கள் கொடுத்து அனுப்புவார்கள்.

அந்த விமான நிலைய கோட்டை தாண்டும் தருணத்தில் விக்டரை கைது செய் என்று நிலைய அதிகாரி சொல்ல அந்த காவலனோ நியூயார் நகருக்கு வரவேற்கின்றோம் என்று சொல்லி வெளியே பனி அடிக்கிறது இந்த மேல் கோட்டை போட்டுக்கொண்டு செல் என்று அனுப்புவார்கள்.

அப்படி அனுப்பும் போது அந்த விமான நிலைய வாசலில் உள்ளேயும் வெளியேவும் மக்கள் கூடம் அலை அலையாக நின்றுகொண்டு அனைவரும் நிம்மதி அடைவார்கள். அவனும் வந்த வேலை முடித்து வீடு திரும்புவான்.

இந்தியில் அவ்வளவு நீள பனியாற்றில் இவன் கடந்து போவதும் அம்மாவை இழந்த குழந்தைக்கு வராத குரல் இவன் போவதை பார்த்து வருவதாக பூ சுற்றுவார்கள். அலை கடல் என மக்கள் இரண்டு பக்கமும் வந்து ஆதரவு தருவதாக காட்டியுள்ளார்கள்.

9 மாத விமான நிலைய வாழ்கையில் விக்டருக்கு 3, 4 பாத்திரங்கள் உதவி செய்யும் அதை இந்தியில் நிருபர் உதவுவதாக காட்டியுள்ளார்கள்.

இப்படி ஆங்கிலத்தில் வந்த ஒரு யதார்த்த படத்தை எடுத்து இந்து முசுலீம் சாயம் பூசி இந்தியா பாக்கிட்த்தானம் சாயம் பூசி அழகாக நம்மை எல்லாம் ஏமாற்றி விற்று இருக்கிறார்கள் இந்தி பட குழுவினர்.

இதிலே அந்த சின்ன பொண்ணு அழுவது அது இது என்று இழுத்து இழுத்து வலுக்கட்டாயமாக காட்டுவதும். அப்பாவி தனம் என்று சல்மானுக்கு கொடுத்து இருக்கும் காட்சிகளும் எரிச்சல் கொட்டும் காட்சிகளாக உள்ளது. உதாரணமாக அந்த சிறுமிக்கு ஆட்டுகறியோ மாட்டுகறியோ தான் சாப்பிடுவார் வேறு எந்த வகை உணவும் சாப்பிட மாட்டாள் என்று காட்டும் காட்சிகள்.

0 comments: