Wednesday, August 5, 2015

ஒரு பிள்ளைய ஆரம்ப பள்ளிக்கு அனுப்பவே புலம்பும் அமெரிக்க பெற்றோர்

அன்று ஒரு ஞாயிற்றுகிழமை இரவு 11:00 மணிக்கு மேல் ஒரு அமெரிக்க தம்பதியினர் மும்முரமாகவும் அதே சமயத்தில் மிகவும் களைப்பாகவும் அவசர அவசரமாக வாங்கிய பொருட்களுக்கு பணம்கட்டும் மும்முரத்தில் இருக்கும் போது நடந்த உரையாடலை கேட்க்க நேர்ந்தது.

எப்படி இருக்கீங்க என்று கேட்டதற்கு மிகவும் களைப்பாக இருக்கிறோம் என்றும். எவ்வளவு ஆச்சு என்று கேட்டதும் $145 ஆஆ என்று வாயைபிளந்து ஒரே ஒரு பிள்ளையை ஆரம்ப பள்ளிக்கு அனுப்பவே இவ்வளவு ஆகுகிறதே இன்னமும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்களே என்று அந்த அம்மா சொன்னது இன்னமும் காதில் ரீங்காரம் இட்டுக்கொண்டு இருக்கிறது.

இந்த $145 பணம் ஒரு வருடத்திற்கு ஆகும் செலவு என்றதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஒரு $145 கே இப்படி வாயை பிளக்கும் இந்த தம்பதியர் அந்த பிள்ளையை எப்படி மேற்படிப்புக்கு எல்லாம் அனுப்புவார்கள் என்று நினைக்கையில் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமையும் என்று ஓர் அளவுக்கு யூகிக்க முடிகிறது.

ஒரு வேளை இந்தியாவில் இருக்கும் நிலைபோல் ஆரம்ப பள்ளியில் சேர்க்க ஒரு பெரிய தொகை, பிறகு மாதமாதம் இவ்வளவு, புத்தகத்திற்கு இவ்வளவு, வீட்டில் இருந்து பள்ளி கூட்டி செல்ல இவ்வளவு, அந்த பள்ளியில் படிப்பு தவிர இன்ன இன்னவைகள் எல்லாம் கற்றுக்கொடுக்கிறார்கள் அதில் ஏதாவது ஒன்றில் கட்டாயம் இருக்க இவ்வளவு, அந்த தினம் இந்த தினம் கொண்டாட இவ்வளவு, பள்ளியில் இங்கே அழைத்து செல்கிறார்கள் அதுக்கு இவ்வளவு, புத்தகத்திற்கு இந்த மாதிரி அட்டை போடனும் அதுக்கு இவ்வளவு, இது எல்லாம் போக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கணணிபயிற்ச்சிக்கு இவ்வளவு போக கைக்கும் அன்றாடம் கொஞ்சம் பணம் என்று எல்லாம் கொடுக்க வேண்டி வந்தால் இந்த பெற்றோர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்.

அனேகமாக குழந்தைகளே வேண்டாம் என்று இருந்துவிடுவார்கள் போலும். மேலே சொன்ன அத்தனையும் இங்கே இலவசமாக அரசாங்கம் வழங்கும் வசதிகளில் இவர்கள் பங்குக்கு உணவும் இருப்பிடமும் இந்த ஆரம்ப தேவைகளை மட்டும் வாங்கிக்கொடுத்தால் போதும். சீருடைகூட பல பள்ளிகளில் கிடையாது.........

உண்மையில் இந்தியாவில் வளரும் பிள்ளைகள் இப்படிபட்ட பெற்றோர்கள் கிடைத்தற்கு கொடுத்து வைத்துதான் இருக்கவேண்டும்.......

4 comments:

')) said...

நம்மூரில் செலவு செய்யப் படும் தொகையை விட மிகக் குறைவாக உள்ளதே.செனாய்.சென்னையின் புகழ் பெற்ற பள்ளி ஒன்றின் கட்டண ரசீதை அனுப்பி வையுங்கள் மயக்கம் அடைந்து விடுவார் என்று நினைக்கிறேன்.

')) said...

We cannot compare public/government schools with private schools.

Private schools in USA are very costly too.

')) said...

முரளி அப்படி எல்லாம் செய்தால் முகுந்து அம்மா இந்தியர்களின் சுய தம்பட்டம் என்று நம்மை திட்டி ஒரு பதிவே போடுவாங்களே..... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

')) said...

நேர்கோடு அப்படி சொல்ல வரவில்லை, அரசாங்க பள்ளிக்கு அனுப்பவே திணறுகிறார்களே என்று தான் சொல்ல வந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....