Saturday, January 27, 2018

பத்மாவதி திரைபடம் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்

இந்த காரணங்களுக்காக பத்மாவதி திரைபடம் தடை செய்யப்படிருக்க வேண்டும்

1) வடக்கத்திய இலக்கியம் என்றாலே யார் யாருடைய மனைவியை இழுத்துக்கொண்டு ஓடினார் என்று ஆக்கும் படியாக ஒரு படைப்பு, இராமாயண வழி இந்த படம்.

2) பத்மாவதி சிவ லிங்கத்திற்கு பூசை செய்வதாக காட்சி வருகிறது அது இந்துக்களின் முறையல்ல

3) அரசனுக்கு தோன்றாத அரசியல் மற்றும் சதியின் கணிப்புகளை பத்மாவதி சொல்வதாக காட்டி இருக்கிறார்கள். இந்துகளின் சாத்திரங்கள் படி பெண்கள் ஆண்கள் சொல்வதை கேட்க்க மட்டுமே முடியும். பெண்களுக்கு அறிவு எல்லாம் கிடையாது இருக்கவும் முடியாது என்றது இந்துகளின் உணர்வு, நம்பிக்கை.

4) அலாவுதின் கொண்டு வரும் கொடிகள் பாதி பாக்கிட்தானத்தின் கொடியாகவும், ஏதோ ஒரு வழியில் அவர்கள் தான் எப்போதுமே வெற்றி பெறுகிறார்கள் என்றும் காட்டி இருப்பது இந்துக்களின் உணர்வு மற்றும் நப்பிக்கைகளை உடைக்கும் விதமாக இருக்கிறது.

5) இறுதி காட்சியில் பத்மாவதி மட்டுமே தீயில் இறங்குவதாகவும் முதல் மனைவி என்ன ஆனால் என்றே காட்டாமலும். மேலும் சுல்தானை கொன்ற அலாவுதீன் அவரின் மனைவியை பெண்டாளுபவன் பத்மாவதியை குறி வைத்து தான் போரில் ஈடுபடுகிறான் என்று தெரிந்தும் அந்த முதல் மனைவி தீயில் இறங்காமல் இருப்பது போல் காட்டி இருப்பது இந்துக்களின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் புண்படுத்தி இருக்கிறது.

6) பத்மாவதி வேடையாடுவதாக காட்டி இருக்கிறார்கள், இந்துகளை பொருத்து அளவில் பெண் சமைப்பதற்காகவும் குடும்ப தேவைகளை செய்வதற்காக படைக்கப்பட்டவள். அப்படி இருக்க வேட்டையாடுவதாகவும் டெல்லி வரை சென்று கணவனை மீட்டு வரும் பெண்ணாக காட்டுவது இந்துகளின் உணர்வுகளையும் மத நம்பிக்கையையும் கேலி செய்யும் விதமாகவும் புண்படுத்தும் விதமாகவும் இருக்கிறது.

7) என்ன ஒரே ஆருதல் தப்பு செய்யும் இராச குருவை ஒரு இந்துவாக காட்டவில்லை நெற்றியில் விபூதி அணிந்து வருபவராக காட்டி இருக்கிறார்கள். ஒருவேளை இராச குருவாக இருக்க இந்துக்களுக்கு மட்டுமே உரிமை உண்டு அந்த இடத்தில் இந்துக்கள் அல்லாத ஒருவன் மிகவும் அறிவுடனும் செயல்பாட்டுடனும் காட்டி இருப்பது அபத்தம். அது இந்துகளின் உணர்வையும் நம்பிக்கையையும் காயப்படுத்தி இருக்கிறது. கட்டாயம் தடை செய்ய பட்டிருக்க வேண்டியபடம்.

8) இராமாயண மகாபாரத வழியில் வீட்டு பெண்களை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் விதமாக இந்த வடக்கத்திய இலக்கியத்திலும் காட்டி இருப்பது இந்துக்களின் உணர்வுகளையும் நம்பிக்கையை காயப்படுத்தி இருக்கிறது.

0 comments: