Tuesday, January 2, 2018

அன்புமணி இராமதாசு இனி என்ன செய்வார் - பாரத பிரதமருக்கு போட்டி இடவேண்டியது தான் போல

பாசகவின் மதவாதத்தை சாதிய அளவில் சாதித்து கொலைகளையும் வகுப்புவாத மோதல்களையும் சங்கம் கட்டி அவிழ்த்துவிட்டு வலைவிரித்து காத்துக்கொண்டு இருந்த பாமகவும் அன்புமணி இராமதாசும் இனி என்ன செய்வார்.

என்ன என்ன ஞாயமான காரணங்களுக்காக பாமகவை மக்கள் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று பரப்புரை செய்தார்களோ அதே நல்ல காரணங்களுக்காக இனி தலைவர் ஆட்சிக்கு வருவார். இனி அன்புமணி இராமதாசின் தேவையோ அவசியமோ தமிழகத்துக்கு இல்லை. அவர் மட்டும் இல்லை இதே காரணத்தை சொல்லி ஓட்டு கேட்கும் பாசக, தேமுதிக, நாம் தமிழர், இன்ன பிற கட்சிகளின் தேவைகள் எல்லாம் இல்லாமல் செய்துவிட்டா அவரின் அரசியல் அறிவிப்பு.

தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலையில் முன்பு எல்லாம் சென்றால் வழி எங்கும் நிழல் தரும் புளியமரங்கள் இருந்தது. ஆனால் இன்றோ வெறும் அணல் காற்று மட்டும் தான் அடிக்கின்றது. காரணம் அன்புமணியின் இயக்கம் அன்று வெட்டியும் எரித்தும் போட்ட மரங்கள் இதுவரையில் மறுபடியும் வளர்த்தபாடு இல்லை.

அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது மூடிய அரசு மருந்தாலைகள் 4ம் இது வரை மறுபடியும் நிறுவவும் அமைக்கப் பெறவும் இல்லை. அரசு மருத்துவமனை முதல் தனியார் மருத்துமனைகள் வரை எல்லோரும் வெளி நாட்டு மருந்து கம்பெனிகளில் தான் வாங்க வேண்டும் என்று ஒரே அடியாக ஏழைகளின் வாழ்கையில் மண்ணை அள்ளி நிறப்பியவர் இந்த மாமனிதன் அன்புமணி.

வெறும் அமைச்சராக இருததிலேயே நாட்டை இவ்வளவு அழித்தவர் அன்புமணி இன்னும் அவரது கைகளில் அரசை கொடுத்தால் மொத்தமாக தமிழகத்தை யார் யார் எல்லாம் விலை பேசுகிறார்களோ அவர்களுக்கு விற்கவும் தயங்காத அன்புமணியின் முதல்வர் கனவு இனி அவ்வளவு தான் போலும். வேண்டும் என்றால் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக என்று கூட்டணியில் வேண்டும் என்றால் தொற்றிக்கொள்ளலாம் போலும். எங்கே எப்படி தொற்றி கொள்கிறார் என்று பொருத்து இருந்து பார்ப்போல். முன்பு விசயகாந்திடம் வாங்கிய அரசியல் அடி மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக.......

0 comments: