Saturday, January 27, 2018

பத்மாவதி - தோனி - தமிழக ஆன்மீக தலைவர்

பத்மாவதி வேடத்தில் தீபா நடித்ததால் இந்துகளின் மனதையும் உணர்வுகளையும் புண்படுத்திவிட்டார் என்று அதற்கான காரணம் என்ன என்றும் அந்த இந்துக்களே கூறினார்கள்.

அதாவது இந்துக்களின் நம்பிக்கை என்றது திரையில் தோன்றும் நடிகர்கள் அந்த பாத்திரமாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று மறைமுகமாக சொல்கிறார்கள்.

இராமனாக நடித்தவர் இராமனாகவும், கண்ணாக நடித்த ராமாராவை மக்கள் கண்ணாகவே பாவித்தது போல.

அந்த மன நிலைமையில் தான் இந்துக்கள் எல்லாம் தீபா மக்கள் வணங்கும் குறிப்பாக வடக்கத்திய குடும்ப பெண்கள் தெய்வமாக வணங்கும் அந்த பத்மாவதி பாத்திரத்தில் நடக்கவே கூடாது என்றும் அப்படியே நடித்தாலும் அந்த படத்தை வெளியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார்கள் இந்த இந்துக்கள்.

அந்த இந்துக்களிடம் ஒரு கேள்வியை முன்வைப்போம்.

கொஞ்ச நாளைக்கு முன் M.S.தோனி என்ற ஒரு திரைப்படம் வந்தது. அந்த படத்தில் தோனியாக ஒரு நடிகர் நடித்து இருந்தார்.

அசல் தோனியை களத்தில் கான்பதைவிட மிகவும் அழகான உடல்மொழியும் வசீகரமும் அந்த தோனியாக நடித்தவரிடம் இருந்தது என்றால் வெளியில் ஒத்துக்கொள்ள மனம் இல்லை என்றாலும் மனதுக்குள் அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.

பிறகு ஏன் இந்த நடிகரால் தோனியை போல் கிரிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெறவோ அல்லது இந்திய அணிக்கு விளையாடவோ முடியாமல் நடிகராக மட்டும் இருக்கிறார் என்று அந்த இந்துக்களிடம் கேட்போம்.

 நீங்கள் சொல்வது போல் திரையில் தோன்றும் நடிகர்கள் பாத்திரமாகவே வாழ்வார்கள் அல்லது அந்த பராக்கிரமத்தோடு இருப்பார்கள் என்று நம்புவதும் அதையே மக்களிடம் பரப்புவதும் எந்த விதத்தில் ஞாயமாக இருக்கும்.

மகாத்துமா காந்தி இன்று உயிருடன் இல்லை ஆனால் அவரைப்போல் திரையில் நடித்த நடிகர் உயிருடன் இருக்கிறார், அவரை அழைத்துக்கொண்டு வந்து இந்தியாவின் தேச தந்தை காந்தியாக நடித்தவர் இவர் அதனால் காந்திக்கு மரியாதை செய்ய தவறிய நாம் அந்த நடிகருக்கு இந்தியாவின் உயரிய பதிவியான பிரதமர் பதிவியோ அல்லது குடியரசு பதவியோ கொடுத்து அழகு பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த இந்துக்கள் செய்யும் வாதமும் செயல்களும்.

இப்போ உங்களுக்கு புரிகின்றதா தமிழகத்தின் ஆன்மீக அரசியல் எங்கு இருந்து எப்படி இறக்குமதி செய்யப்பட்டது என்று.

19 மாநிலத்தில் ஆட்சி, மைய அரசின் ஆட்சி என்று எல்லாம் பேசும் ஒரு தேசிய கட்சி கடைசியில் தமிழகத்தில் ஒரு நடிகரின் காலில் வீழ்ந்து கிடக்கின்றதே என்று பார்க்கும் போது அதன் மாநில தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்களும் பேசும் போது காந்தியாக நடித்த நடிகரை கொண்டு வந்து பிரதமராக ஆக்குவது தான் நினைவுக்கு வருகிறது.

0 comments: