Wednesday, January 3, 2018

ஆன்மீக அரசியல் என்றால் இவைகள் எல்லாம் இருக்காதா - தமிழிசை - பாசக

முன்னெப்பவும் இல்லாத அளவில் தமிழகத்தில் சாதியம் தலைவிரித்து ஆடுகிறது இப்போது.

இதிலே தான் தான் அடுத்த தமிழக முதல்வர் என்று கையெழுத்து போட கையில் எப்பவும் பேனாவுடன் அலையும் அன்புமணி இராமதாசும் அவரது இயக்கமும் சாதிமோதல்களை அவிழ்த்துவிட்டும் மோதல்களை உருவாக்கிக்கொண்டும் இருக்கின்ற இந்த காலகட்டத்தில்.

அத்வானியின் காலங்களில் அவர் தமிழகம் வந்த இடங்களில் எல்லாம் அத்வானி பாதுகாப்பான தூரம் சென்று விடாரா என்று உறுதிபடுத்திக்கொண்டு குண்டுகளை வெடித்துவிட்டு அதை பாக்கிட்தானம் அத்வானியை கொலை செய்ய செய்தது என்று சொல்லி தமிழகத்தில் பாசகவு ஓட்டு போடுங்கள் இல்லை என்றால் தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரமாகிவிடும் என்று விளையாடிக அந்த காலம் முதல் இன்றைக்கு பொம்மை அரசை வைத்துக்கொண்டு தமிழகத்திற்கு எதிரான திட்டங்களில் திருட்டு தனமாக கையொப்பங்களை வாங்கிக்கொண்டு சீரழிக்கும் இந்த காலம் வரை.

ஆன்மீகம் மதம் சாதி என்ற பாகுபாடுகளை முன்னிறுத்தி அரசியல் நகர்வுகள் வளர்ந்துக்கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் தான் செய்யப்போவதும் ஆன்மீக அரசியல் என்று தலைவர் அறிவித்தாலும் அறிவித்தார் அது எங்களுடையது தான் வேறு எதுவும் இல்லை இல்லவே இல்லை என்று தமிழிசையும் எச்ச சர்மாவும் வரிந்துகட்டிக்கொண்டு பாட்டு பாடுகிறார்கள்.

இது வரையில் சாதியின் பெயரில் அன்புமணி நடத்திய சாதி மோதல்களும் ஆணவபடுகொலைகளும், மதத்தின் பெயரில் பாசக வெடித்த குண்டுகளும் பொம்மை அரசும் இனி சுக்கு நூறாக நொறுங்கியதின் வயிற்றெரிச்சல் நன்றாக தெரிகின்றது.

தலைவரின் ஆன்மீக அரசியலில் ஏழை எளியவரின் பைகளில் மாட்டுகறி இருக்கிறதா இல்லை கறிவேப்பில்லை இருக்கிறதா என்ற சோதனைகள் நடத்தபடமாட்டாது.

ஐஐடி சோதனை கூடங்களில் மாட்டுகறியை கண்டுபிடிக்கும் பொறிகளை வடிவமைத்தும், மாட்டு மூத்திரத்தில் சக்தி இருக்கிறது என்று கண்டறிய அப்பவி மக்கள் கட்டிய GST வரி செலவிடப்படாது.

மசூதிகளையும் சர்சுகளையும் மாரியம்மன், சுடலைமாடன் கோவில்களையும் இடித்துவிட்டு அங்கே பெருமாள் கோவில்கள் நிறுவுவபடமாட்டாது.

இன்ன இன்ன சாதியினர் இன்ன இன்ன நிறங்களில் கைகளில் நூல்களைக்கட்டிக்கொண்டு தான் பள்ளிகளுக்கு வரவேண்டும் என்று கட்டாயபடுத்தபடமாட்டாது.

சாதியின் பெயரால் ஊரின் பகுதிகளையும் மக்களையும் தனிமைபடுத்த படமாட்டாது.

தலைவர் அமைக்க போகும் கட்சியின் சின்னத்திலோ அல்லது கொடியிலோ தாமரைக்கு எந்த இடமும் இருக்கப்போவது இல்லை.

தலைவரின் ஆன்மீக அரசியலுக்கு தமிழிசையும் எச்ச சர்மாவும் சாமரம் வீசி பின்னால் மேடையில் நின்றுக்கொண்டு இருக்கும் காட்சிகள் மனதிரையில் வந்து போகின்றது.

உண்மை நேர்மை நாணயம் இதன் பொருளோ அல்லது அவைகளுக்கு உள்ள எழுத்துகளோ கூட அறியாத தமிழிசை எச்ச சர்ம்மா வகையராக்கள் வயிற்றெரிச்சலில் பொரிந்து தள்ளும் பேட்டிகளை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதும் இல்லை எடுத்துக்கொள்ள போவதும் இல்லை. பாருங்கள் இது வரையில் 1 கோடி பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளார்கள், ஆனால் நீங்கள் கூட்டிய மிசுடுகால் சேர்க்கையில் பொய்யை சொல்லி நீங்களாகவே கூப்பிட்டு சேர்த்த மக்களைவிட இது எல்லாம் இமாலய தூரம். இனியும் ஆன்மீக அரசியல் என்றால் அது எங்களுடையது என்று எல்லாம் பொய் சொல்லி அலையாதீர்கள் பாசக மக்களே.....

0 comments: