Thursday, January 5, 2017

நேற்று ஈழ மக்கள் இன்று தமிழ் மக்கள் நாளை இந்தியாவின் அனைத்து நடுத்தர மக்களும்

பாசக வெற்றி பெற்றதும் இப்படி எல்லாம் நடக்கும் என்று தான் சொன்னோம், ஆனால் ஏதோ காழ்ப்பில் சொல்கின்றோம் என்று எங்களுக்கு எதிராக அடவு கட்டி ஆடினார்கள் மோடியின் பால் பற்றுக்கொண்ட பாசக அல்லாதவர்கள்.

ஈழத்தில் அவர்களின் சொந்த உழைப்பில் பெற்ற செல்வங்களையும் உடைமைகளையும் மதம், மொழி இனம் என்ற பெயரால் அரசு பிடுங்க துவங்கியதில் இருந்து, எதிர்த்து கேட்பவர்களும் போராட்டம் செய்பவர்களையும் வீடு திரும்பாமல் அரச பயங்கரவாதம் நிகழ்த்தியது 30 ஆண்டுகளாக. மிச்சம் சொச்சம் இருப்பவர்களும் வதை முகாம்களில் இருக்கிறார்களா அல்லது என்ன ஆனார்கள் என்றும் கூட தெரியாத அறியமுடியாத அளவிற்க்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள் இலங்கையின் இன வெறி பிடித்த அரசு.

அதே பாணியில் இன்று தமிழகத்தில் உங்களது சொந்த சம்பாத்தியத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கி வங்கியில் வைத்துக்கொண்டு அப்புரம் பிறகு அப்படி இப்படி என்று போக்கு காட்டிக்கொண்டு இருக்கிறது மோடி அரசு.

ஈழம் போல் அது எப்படி எங்கள் சொந்த பணத்தை நீங்கள் பிடிங்கி வைத்துக்கொள்வது என்று போராட சென்ற மக்களை இலங்கை அரசு வதம் செய்ததை போல் தமிழகத்தில் வதம் செய்துள்ளார்கள் காவலர்கள்.

அதுவும் யார் உங்கள் தலைவன் என்று தேடி பிடித்து அடித்து நொருக்கி இனி ஒருவன் மோடி அரசை விமர்சித்து போராட்டம் செய்வான் என்று பார்த்திருக்கிறார்கள்.

வெளியோட்டமாக பார்த்தால் நாட்டுக்காக எடுக்கும் நடவடிக்கையை எதிர்த்து ஏன் போராட்டம் செய்கிறார்கள் என்று மோடி மயக்கத்தில் இருக்கும் பாசக அல்லாதவர்கள் கேட்க்கக்கூடும் ( நாங்கள் பாசகவினரிடம் இந்த ஞாய தர்மத்தை எல்லாம் எதிர்பார்ப்பது இல்லை).

அன்று வெள்ளையன் அவன் வசதிக்கு கொண்டு வந்த சட்டங்கள் எல்லாம் எங்களுக்கு எதிராகவும் உரிமையை பரிப்பதாகவும் இருக்கிறது என்று நாடே போராட்டம் செய்தது. அந்த சுதந்திர போராட்டம் ஞாயம் என்றால் இந்த போராட்டங்களும் ஞாயமே.

வெள்ளையன் சட்டம் கொண்டு வந்தால் அது ஏகாதிபத்தியம் இன்றைக்கு மோடி அரசு கொண்டு வந்தால் நாட்டுப்பற்று என்னயா உங்களது வாதம்.

தமிழக அரசு ஒரு பொம்மை அரசு என்று அனைவருக்கும் தெரியும், சுயமாக முடிவெடுக்கவோ அல்லது எது சரி எது தவறு என்று நடவடிக்கை எடுக்கவோ எந்த வித உரிமையும் தைரியமும் இல்லாத பொம்மை அரசு தமிழக அரசு.

இந்த நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மைய அரசு அதிகாரிகளின் துணைக்கொண்டு அசுர தாக்கு தாக்கி இருக்கிறார்கள் போராட்டகாரர்களை.

இனிமேல் இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் தான் போலும்.

மெல்ல மெல்ல நடுத்தர மற்றும் ஏழை எளியர்களை மேலும் மோசமான பொருளாதாரத்திற்கு தள்ளி நடுத்தெருவில் நிற்கவைக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருக்கிறது.

மோடி ஆட்சிக்கு வந்தால் 15 இலட்ச ரூவாய் பணமும் வீட்டில் ஒருவருக்கு வேலையும் என்று சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி ஓட்டளித்தது மட்டும் நில்லாது தினம் தினம் வக்காளத்து வாங்கிய நல்லவர்களே அனுபவிங்க மக்கா அனுபவிங்க.........

பின் குறிப்பு: இந்த போராட்டம் குறித்து தமிழிசையோ இல்லை எச்சி இராசாவோ எதுவும் பேச மாட்டார்கள் ஏன் என்று உங்களுக்கே தெரியும். வாழ்க "சாதார்ண் சன் துக்க யோச்சனா ஆயோக்"

மெட்ராசு கபே (Madras Cafe ) அடுத்து பூனா கபேன்னும் படம் இப்படி எடுப்பார் சாம் ஆபிரகாம் -- பாவம் மோடி 

0 comments: