Thursday, October 24, 2013

மெட்ராசு கபே (Madras Cafe ) அடுத்து பூனா கபேன்னும் படம் இப்படி எடுப்பார் சாம் ஆபிரகாம் -- பாவம் மோடி

படம் துவங்கும் போது இந்த கதையில் வரும் சம்பவங்களும் பாத்திரங்களும் கற்பனையே அப்படி உண்மை சம்பவங்களை நினைவு படுத்துமாயின் அவைகள் ஏதேட்சையாக நடந்தவைகளாகத் தான் இருக்கும் என்று துவங்கி படம் இப்படி பயணிக்கும்.

பாங்காக்கில் ஒரு குசராத்தி சப்பானிய உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைகள் நடத்துவார். அவரது உரையாடலில் திரும்பவும் காங்கிரசு ஆட்சிக்கு வரும் என்ற உத்தேச தேர்தல் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு எப்படியாவது இந்த முறை மோடியை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் அதற்கு சப்பானியர்கள் என்ன விலை கொடுப்பார்கள் என்று கேட்பார்.

அப்போது அந்த சப்பானிய உயர் அதிகாரிகள் அவர்களின் நாட்டில் தற்பொழுது வெடிக்க காத்துக்கொண்டு இருக்கும் அணு உலையில் காத்துக்கிடக்கும் 1331 குச்சிகளையும் அடியோடு நீக்கி அப்படியே வெடித்தாலும் சப்பான் தாக்கபடாத தூரத்திற்கு எடுத்து சென்றுவிட்டால் மோடி பிரதமர் ஆக்க எத்தனை கோடி ஆயிரங்கள் செலவாகுமோ அவைகளை லண்டனில் உள்ள ஒரு வங்கி மூலமாக கொடுக்க ஏற்பாடு செய்வதாக வாக்கு கொடுப்பார்கள்.

அதை தொலை தொடர்பில் கேட்ட மோடி தனது உயரதிகாரிகளுடன் ஒரு ஆலோசனை நடத்துவார். அந்த ஆலோசனையில் பூனாவின் சிறந்த காவலர்களில் திறமையான ஒருவரை சப்பானுக்கு அனுப்பி அங்கே அந்த அணு உலையில் வேலை பார்த்து பிறகு வேலை போனவர்களில் ஒரு தொழில் நுட்பபிரிவை உருவாக்கி அவர்களது துணையில் அந்த அணு உலையில் இருக்கும் அணு கதிர் குச்சிகளை வெளியில் கொண்டுவர திட்டம் இடுவார்.

அப்படி திட்டம் தீட்டும் போது சப்பானிய நாட்டின் தொழில் அதிபர்கள் காங்கிரது ஆட்சி இந்தியாவில் மீண்டும் மலர்வதை தடுக்க திட்டம் தீட்டுவதாக இங்குலாந்தின் உளவு துறைக்கு செய்தி பறக்கும். அதை தொடர்ந்து அங்கு வேலைபார்க்கும் ஒரு இந்தியர் அதுவும் பெண் பத்திரிக்கையாளர் வாயில் என்னேரமும் சுருட்டுனம் கூடவே ஒரு அதி உயர் சாரயத்துடனும் தனது படபிடிப்பு கருவிவை வைத்துக்கொண்டு பாங்காக்கு கள்ள தோணியில் பயணிப்பார்.

அதே தோணியில் மோடியின் ஆளும் பயணிப்பார், இருவருக்கும் இடையில் நடக்கும் வசனங்களில் காவலர் மாநில பற்றுடனும் நிருபர் ஞாய பற்றுடனும் பேசிக்கொள்வார்கள்.

பாங்காக்கு நகரை அடைந்ததும் ஒரு இரகசிய இடத்தில் காவலர் சப்பானின் அணுகுச்சிகளை அகற்ற கூட்டிய குழு கூடி நிற்கும். அந்த குழுவின் தலைமையை இந்த காவலர் சப்பான் மொழியில் அண்ணா என்று விளிப்பார். அவரும் பதிலுக்கு தான் கூட்டி வந்திருக்கும் குழுவிற்கு நல்ல விலையில் பணம் கொடுத்தால் அவர்கள் நல்ல ஒத்துழைப்பை தருவார்கள் என்றும். அப்படி தராவிடின் இந்த திட்டத்தை இந்தியாவில் காங்கிரசு கட்சிக்கு தெரியபடுத்துவேன் என்றும் மிரட்டுவார் சப்பான் அண்ணா.

காவலரோ வேலையின்றி புரக்கணிப்பட்ட உங்களுக்கு உதவும் எண்ணத்தோடு எங்களது முதல்வர் மோடி இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள் அதற்கு நன்றியாக நீங்கள் எல்லோரும் உங்களது உயிரை கொடுத்தாவது இந்த வேலையை முடிக்கனும் அதைவிடுத்து இப்படி உங்கள் நலனை முன்னிருத்தி பேரம் பேசினால் எப்படி என்று கண்டிபுடன் கேட்ப்பார்.

ஒரு வழியாக பேரம் பேசி சப்பான் அண்ணா தனது ஆட்கள் எல்லாம் செத்தாலும் தனக்கும் ஒரு பெரும் தொகை செயலுக்கு முன்னமே கிடைக்கும் என்ற உறுதியை பெற்று அந்த அணு குச்சிகளை சப்பானில் இருந்து எடுத்து இந்த காவலரிடம் கொடுக்க வேலைகளை முடுக்குவார்.

இந்த அணுகுச்சிகளை கதிர்வீச்சு தாக்காமலும் வெடிக்காமலும் வெளியில் கொண்டு வர பூனாவில் அசுர குழாய்களை ஒருவருக்கும் தெரியாமல் ஒரு மாநில அரசு நிறுவனம் மோடிக்கு செய்துகொடுக்க முன்வரும். அந்த குழாய்களை வடிவமைததும் அவைகளை கொண்டு சீன நிறுவனத்திடம் கொடுத்து செய்து சப்பானுக்கு அருகில் இருக்கும் கடற்கரையில் கொண்டுவந்து கொடுக்கும்மாறு ஒரு இரகசிய பேரமும் நடக்கும்.

இந்த இரகசிய பேரம் ஒருவருக்கும் தெரியாமல் இருக்க சீன முக்கா என்ற ஒரு உயர் அதிகாரியை அந்த பூனா காவலர் கண்டுபிடித்து வேலைக்கு அமர்த்துவார். அவரும் ஒரு மாத காலத்திலே தன்னிடம் இருக்கும் அடிமைகளை எல்லாம் தட்டி தகுடு எடுத்து குழாய்களை கொண்டுவந்து சப்பான் கடலில் கொண்டுவந்து கொடுத்துவிடுவார்.

அடுத்து அந்த குழாய்கள் எடுத்துகொண்டு போய் சப்பானிய அணு உலைக்கு 60 மைல் தொலைவில் கடலில் நின்றபடி இந்தியாவின் மற்றும் இரசிய செயற்கைகோளின் உதவியுடன் இயந்திர மனிதர்களை கொண்டு அணு உலையின் கொதிகலனுக்கு இணப்பு கொடுத்து கடல் நீர் கொண்டு தள்ளியே அந்த 1331 அணு குச்சிகளையும் கப்பலுக்கு அந்த இயந்தர மனிதர்களின் உதவியுடனே முடித்துவிடுவார்கள்.

அப்படி கொண்டு வந்த அணு குச்சிகளுடன் கப்பல் புறப்படும் போது அமெரிக்காவின் செயற்கை கோளில் சப்பானிய கடலில் ஒரு பெரிய கதிர்வீச்சு தென்படுவாதாகவும். அது என்ன என்று துப்பு துலக்கவும் தனது உளவு நிறுவனத்தை அனுப்பும்.

அந்த உளவு நிறுவனம் இந்த கதிர்வீச்சும் அதன் காரணமும் அறிந்து உலகுக்கு தெரிவிக்காமல் இந்தியாவில் காங்கிரசை மறுபடியும் எப்படி ஆட்சியில் கொண்டுவருவது என்று சிஐயேவிடம் கேட்கும்.

சிஐயேவும் மோடியை இல்லாமல் செய்துவிட்டால் காங்கிரசு பிழைக்கும் என்று தனது கணிப்பை சொல்லும். அந்த கணிப்பை எடுத்துக்கொண்டு எப்படி இதை செய்துமுடிப்பது என்று தனது சிறந்த வல்லுனர்களை சிஐயே கேட்கும். அவர்களும் இப்போதைக்கு ஒருவருக்கும் சந்தேகம் வராமல் மோடியை அடிக்க வேண்டும் என்றால் அது பாக்கிட்தானியர்களை கொண்டு செய்தால் தான் அமெரிக்காவின் மேல் ஒருவருக்கும் சந்தேகம் வராது என்று பரிந்துரைக்க. அப்படியே திட்டதினை செயல் படுத்துவார்கள்.

மறுமுனையில் மோடியின் ஆட்களோ அணு குச்சிகள் திட்டமிட்டபடி தமிழக எல்லையில் கொஞ்சம், வங்காள ஆந்திர எல்லையில் கொஞ்சம் என்று பிரித்து நிறுத்தி வைத்துகொண்டு இந்த 3 மாநில அரசுகளின் மின் தேவையை பூர்திசெய்ய மோடி உதவுவதாகவும். மின் பஞ்சத்தை நொடியில் காணாமல் போக வைப்பதாகவும் தேர்தல் வியூகங்களில் சொல்லும்.

இதை கேட்ட மற்ற மாநிலங்களும் தங்களின் மின் தேவைகளையும் போக்கும் மாறு மோடியிடம் மன்றாடும். அவரும் அவரை பிரதமர் ஆக்குவதாக இருந்தால் அவர் இந்தியாவில் தயாரிக்க போகும் மின்சாரம் சப்பான் வரை பாயும் என்றும் தனது தேர்தல் பிரச்சாரங்களில் முழங்குவார்.

ஒளிரும் பாரதம் என்றது போக ஒளிரும் உலகம் என்று அமிதாபச்சன், மணிரத்தினம், இரகுமான் என்று ஒரு கூட்டணியில் ஒரு 100 விளம்பர படங்களை இந்தியாவில் பேசும் அத்தனை மொழியிலும் சப்பானிய எழுத்துகளுடன் தயாரித்து வெளியிடுவார்.

இதை எல்லாம் பார்க்கும் பாரத மக்களும் மற்ற தலைவர்களும் என்ன அறிவு இந்த மோடிக்கு எப்படி பட்ட தலைவரை இந்தியா தவம் செய்து பெற்றுள்ளது. இத்தனை ஆண்டுகாலம் இந்தியா இப்படி இருளுக்குள் இருந்துவிட்டதே என்று மக்களும் தலைவர்களும் தங்களுக்குள் பேசிக்கொள்வதை மோடியின் உளவு கூட்டம் சேகரித்து மோடிக்கு கொடுக்கும்.

இப்படியே தேர்தல் அருகாமையில் சந்திராசாமி சுபிரமணியசாமி என்ற இருவர்களும் சேர்ந்து பாக்கிட்தானிய கூலி படைகளை தந்திரமாக மும்பையின் கரை வழியாக் குசாராத்துகுள் அழைத்து வந்து மோடியின் முக்கியமான மிகவும் நம்பகமான பெண் பாராளுமன்ற உருப்பினர் வீட்டில் தங்க வைத்து பாதுகாப்பார்கள்.

தேர்தலில் வெற்றி பெறுவதை உறுதிபடுத்தும் வேலைகளில் மூழ்கி இருந்த அந்த சிறந்த காவலர் குசராத்தில் என்னமோ நடக்க போகுது என்று அந்த லண்டன் குடிகார பெண் நிருபர் சொல்ல. உடனே இருக்கும் இடத்தை விட்டு காவலர் குசராத்துக்கு செல்வார்.

மற்ற எல்லா மாநிலங்களுக்கும் மிகுந்த பாதுகாப்புடன் சென்ற மோடி தனது மாநிலத்தில் நடக்கும் பொதுகூட்டதில் பேச செல்லுவார். தனது மண்ணில் தன்னை யாரும் எதும் செய்ய மாட்டார்கள் என்றும் பதிரிக்கைகளுக்கு சொல்லியும் செல்வார்.

இந்த இடத்தில் அந்த சிறந்த காவலர் வகுத்து கொடுத்த வியூகமான இன்னும் ஒரு கோத்ராவை மோடியின் கட்சியினர் பொதுக்கூட்டம் நடக்கும் மூலைக்கு எதிர் திசையில் சத்தம் இல்லாமல் நிறைய முசுலீமுகள் இருக்கும் இடத்தில் நடத்துவார்கள்.

அதே நேரம் பொது கூட்டத்தில் பாக்கிட்தானியர்களின் கூலிப்படை தங்களது கைவரிசையை காட்டும். அந்த சிறந்த காவலர் அப்போது தான் பொது கூட்டதிற்கு வருவார். அவர் நினைப்பார் அவரது ஏற்படுகளின் படிதான் செயற்கை கலவரம் நடக்கிறது என்று. ஆனால் உண்மையில் மோடியும் அவரது சிறந்த குழுவையும் அந்த பாக்கிட்தானியர்கள் அழித்து அவர்களும் மடிவார்கள்.

பிறகு நடந்தவை என்ன என்று விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைப்பார்கள் மத்திய அரசில், அவர்களது ஆணையத்தில் அமெரிக்கா எப்படி மோடியை கொல்ல திட்டம் தீட்டியது என்ற ஒன்றை மட்டும் வெகு விளக்கமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் எழுதி ஆதாரங்களுடன் கொண்டு கொடுப்பார் இந்த குசராத்தின் சிறந்த காவலர். ஆணையமோ பிறகு பார்கலாம் என்று சொல்லி புறக்கணிக்கும்.

உடனே அவர் அந்த லண்டன் குடிகார பெண் நிருபருக்கு அனுப்புவார், அவரும் சப்பானில் என்ன நடந்தது, அந்த பணம் என்ன ஆனது, 3 மாநிலங்களின் கரையில் நிறுத்திய அணுகுச்சிகள் என்ன ஆனது. இதில் யார் யார் எல்லாம் பாதிக்கப்பட்டார்கள். எத்தனை ஆயிரம் மக்களும் கடல் வளங்களும் எதிர்கால சந்ததிகளும் அழிக்கப்பட்டது என்ற உண்மைகளை எல்லாம் வசதியாக மறைத்து வைத்துவிட்டு, உலகுக்கே ஒளி கொடுக்க நினைத்த ஒரு தலைவனை எப்படி பாக்கிட்தானியர்களும் முசுலீம்களும் அமெரிக்க உளவு நிறுவனமும் சேர்ந்து அழித்தது என்றும் அதை காக்காமல் எப்படி தான் தவறவிட்டேன் என்றும் அழுதுக்கொண்டும் அந்த சிறந்த காவலர் பாதரியிடம் செல்லி பாவமன்னிப்பு கோட்கும் காட்சிகளுடன் படமும் முடியும்.

படத்தை பார்க்கும் வட இந்தியர்கள் ஆகா படம் என்ன அழகாக எடுத்து இருக்கிறார்கள், எத்தனை அழகாக இருக்கிறது என்று வாயார புகழ்ந்து தள்ளுவார்கள்.

கதிர்வீச்சால் பாதிக்கபட்ட 3 மாநில மக்கள் எல்லாம் இந்த படத்தை பார்த்துவிட்டு எங்கட சப்பானை பற்றியோ அல்லது நம்ம பாதிப்பை பற்றியோ ஒரு செய்தி கூட படத்தில் இல்லையே என்று தப்பி தவறி சொல்லிவிட்டார்கள் என்றால் போதும். பாதிக்காத மாநில காரர்கள், வந்து ஒரு குதி குதிப்பார்களே பார்க்கனும். 

மறுபடியும் இப்படி முழு பூசணிகாயை சோற்றி மறைத்து எந்த படம் எடுக்கலாம் என்று சாம் ஆபிரகாம் தேடி அலைவார் போலும்........

படத்தில் பாங்கக்கு, சப்பான், அமெரிக்கா, பாக்கிட்தானம் என்று சதிகள் நடக்கும் இடங்களில் எல்லாம் ஒரு பூனா கபே என்ற ஒரு பெயர் பலகையை காட்டவேண்டும், திரைகதை திருத்தத்தில் சேர்த்துகொள்ள சொல்லலாம்.....

0 comments: