Tuesday, December 29, 2009

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 4

அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 3
அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 2
அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 1


இந்த நூடுல்சு வீச்சத்திற்கு பிறகு, மனது இது சம்பந்தமாக மற்ற பொருட்களின் மேலும் சந்தேகம் கொள்ள நினைத்தது. அப்படி வந்த நிகழ்விலே இன்னமும் ஒரு பயங்கரம் தெரிய துவங்கியதும் தான் பேய் அறைந்தார் போல் ஆனேன்.


அமெரிக்காவில் தனி நபர்களும் மொத்த வணிக விலைகளில் பொருட்களை வாங்க சாம்சு கிளப்பு(Sams Club), பிசேசு(BJ's), காச்சுட்கோ(Costco) போன்ற நிறுவனங்கள் அனேகமாக எல்லா ஊர்களிலும் ஒரு வகையாவது இருக்கும். இந்த கடைகளில் மொத்த விற்பனை விலைக்கு பொருட்களை தனி நபர்களுக்கு தந்தாலும், பொருட்களை அதிக அளவில் தான் கொடுப்பார்கள். அப்படி பற்பசை வாங்கியதில் சென்ற ஆண்டு வாங்கியதில் கடைசி குழாய் தீர்ந்து போக அடுத்த நாளே வால்மார்டில்(Walmart) அதே பற்பசையை திரும்பவும் வாங்கினோம்.


அந்த பற்பசையும் அதற்கு முந்தைய நாள் பயன் படுத்தியற்கும் 100% வித்தியாசம். புதிய பசையில் நுரையே இல்லை, குறைந்தது 3 அல்லது 4 முறையாவது பசையை மீண்டும் மீண்டும் உபயோகித்தால் தான் பல் துலக்கியதாகவே உணர முடியும் போல் இருந்தது.


என்னடா இது மதுரைக்கு வந்த சோதணை என்று, மிச்சம் மீதி இருந்த பழைய பசைகுழாயில் இருந்து எடுத்து பார்த்தால் சந்தேகம் உறுதிபடுத்தப்பட்டது.


புதிய தயாரிப்பில் நூடுல்சில் ஆடிய அதே கபட வேலை இந்த பற்பசையிலும்(Colgate pamolive) அமெரிக்க முதலாளிகள் விளையாடி இருப்பது தெரியவந்தது.


அட வால்மார்டில் தான் இப்படி, சேம்சு கிளபில் வாங்கினால் தரமாக இருக்கும் என்று மறுபடியும் ஒன்றை சேம்சு கிளபில் வாங்கினோம் அங்கேயும் இப்படி தான்.


எடுத்தற்கு எல்லாம் வாடிக்கையாளர்களின் திருப்தி தான் முக்கியம், பணமும் பொருளும் அதற்கு பிறகு தான் என்று உலகுக்கு தன்னை உதாரணமாக எப்போதுமே கூறிக்கொள்ளும் அமெரிக்காவின் நிலையா இப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறது.


அமெரிக்கா நாடு உருவாகி இத்தனை ஆண்டு காலத்தில் எத்தனையோ பொருளாதார சரிவுகளை கண்டு மீண்டு வந்திருக்கிறது. அதுவும் இரண்டாம் உலக போரின் முடிவில் இரயில் தொற்றிக்கொண்டு போய் வேலைக்கு வரிசையில் நிற்பார்கள். இன்றைக்கு இத்தனை மக்களுக்கு மட்டும் தான் வேலை மற்றவர்கள் எல்லாம் போகலாம் என்று சொல்லும் நிலைக்கு எல்லாம் சென்றது உண்டு. நிவேடாவில் ஊவர்(Hoover) அணைகட்டு கட்டும் போது, மெக்சிகோவில் இருந்தும் இன்னும் பல இடங்களில் இருந்தும் நடந்தே மக்கள் வந்ததாகவும், வரும் வழியில் மக்களை பலி கொடுத்தும் போட்டி இட்டுக்கொண்டு வந்து அணைக்கட்டில் வேலை பார்த்தார்கள்.


அப்படி பட்ட காலங்களில் கூட இப்படி எல்லாம் உண்ணும் பொருளில் இருந்து, அன்றாட தேவைகளுக்கு பயன்படும் அத்தனை பொருட்களிலும் தரத்தை குறைத்து நாடகம் ஆடியது இல்லை தான். பின் ஏன் இந்த திருட்டு வேலை இப்பொழுது. அப்படி என்ன அவசியம் வந்தது...............................

0 comments: