கானா பிரபா இந்த தொடரை எழுத துவங்கினாலும் துவங்கினார், உடனே இராசா இரசிகர்களும், இரகுமான் இரசிகர்ளும் ஒருவருக்கு ஒருவர் சண்டையில் இறங்க தொடங்கிவிட்டார்கள்.
படித்ததும் பின்னூட்டம் இடவேண்டும் என்று தான் இருந்தத்து, ஆனால் விளக்கம் சற்று அதிகமாக இருப்பதால் தனியாக பதிவாகவே எழுதிவிடுவோம் என்று எழுதுகிறேன்.
இந்த பேச்சுகளில் தவிர்க்க முடியாத உண்மை, இராசாவின் வரவுக்கு பிறகு தமிழ் பாட்டுகளை தமிழர்கள் கேட்பதை என்றது ஒன்றும் இழி செயலோ பவமோ இல்லை என்ற நிலைக்கு வந்தது. அது வரையில் இந்தி பாடல்கள் தாம் தரமானவை, இந்தி பாடல்கள் கேட்பவர்கள் தாம் அறிவாளிகள் என்று எல்லாம் இருந்த மாயை எல்லாம் அகன்றது அதற்கு பிறகு தான்.
ஆனாலும் ஆங்கிலப்பாடல்களை கேட்பதும், பாடுவது, இசைப்பது தான் உண்மையான திறமை என்ற மாயை தொடர்ந்துக்கொண்டு தான் இருந்தது இராசா வந்து இத்தணை ஆண்டுகாலங்கள் ஆன பிறகும்.
இந்த மாயை இரகுமானின் வரவில் மெல்ல மறைய துவங்கியது என்றால் மிகையாகாது. அது வரையில் அந்த அளவுக்கு துல்லியமான ஒலிபதிவிலும் சரி, மேற்கத்தி முறையையும் அப்படியே அச்சு அசலாக தமிழிலிலோ அல்லது மற்ற இந்திய மொழிகளிலோ அது வரையில் இல்லை, இது எவராலும் மறுக்க முடியாத உண்மை.
இன்னமும் தெளிவாக சொன்னால், மேற்கத்திய இசையை போல் தான் எல்லோரும் உருவாக்கி கொடுத்தார்களே தவிர, மேற்கத்திய இசையிலே கொடுக்கவில்லை. கொடுக்க முடியவில்லை என்று சொல்வதற்கு இல்லை. அப்படி செய்தால் அவர்களது பெயர் களங்கப்படுத்தப்படும் என்று நினைத்து இருக்கலாம் அல்லது அந்த பாணி தனக்கு தேவை இல்லை என்றும் இருந்திருக்கலாம்.
ஆனால் இரகுமான், அந்த பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டு மிகவும் நேர்த்தியாக மேற்கத்திய இசையை கொண்டு தமிழ்பாடல்களை வழங்க தொடங்கினார்.
அது வரையில் மேற்கத்திய இசையை மாதிரியும், மேற்கத்திய கலப்பிசையுமாகவே கேட்டு வந்த தமிழர்களுக்கு அந்த அசல் மேற்கத்திய இசை மிகவும் பிடித்து போனது. பேட்டை இறேப் பாடல் வந்த போது அதை நையாண்டியடிக்காத நபர்களே இல்லை.
இந்த காலகட்டத்தில் தான், இந்தியாவில் பண்பலைகள் பிரபலமாகிக்கொண்டும், வானொலியின் வர்த்தக ஒலிபரப்புகளும் கோலோச்சிக்கொண்டு இருந்த காலம்.
இந்தியாவில் வானொலி என்றால் அது சிற்றலை இல்லாத வானொலியா என்றது போக, பண்பலை இல்லாத வானொலியா என்ற நிலைக்கு சென்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சின்ன சின்ன வீடுகளில் கூட பெரிய அளவிலான இசை பெட்டிகளை வாக்கி வைக்கும் பழக்கமும், சின்ன பெட்டிகளிலே கூட எல்லா அலைகற்றைகளும் ஒழுங்காக ஒலிக்கும் படியாக சந்தையில் விற்க தொடங்கிய காலம் அது.
ஆக மொத்தத்தில் இரகுமானின் புதிய இசை, துல்லியம் குறையாமல் எல்லோரது வீடுகளிலும் எப்பொழுதும் இசைக்க துவங்கியது. அது மட்டும் அல்லாது இரகுமானின் ஆரம்ப கால படங்கள் கல்லூரி வாழ்க்கையை கொண்ட படமாகவும் வர துவங்கியது.
அந்த நேர்த்தியான புதிய வடிவம் தமிழர்களின் மனதை ஆக்ரமித்ததில் வியப்பு ஏதுமே இல்லை.
இந்தி இரசிகர்களுக்கும், தமிழக இரசிகர்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு.
இந்தி படம் இன்றைக்கு ஒன்று வந்தால் அதன் கதை என்னவாக இருக்கும் என்று ஒரு 4 அல்லது 5 விதத்திலேயே அடங்கிவிடும். ஆனால் தமிழ் படங்களுக்குள் அதிக வித்தியாசம் உண்டு, இது அனைவரும் அறிந்ததே மேலே விளக்கங்கள் தேவை இல்லை என்று நினைக்கின்றேன்.
இந்தியில் இப்படி 5 அல்லது 6 வகைக்குள்ளாகவே படங்கள் வந்தாலும், அந்த பழைய கதையிலும் தலைவனும் தலைவியும், அன்றைய காலத்து வண்டிகளும், உடைகளும் என்று எப்போதுமே உலகத்து அந்த நிமிட நடை, உடை பாவனைகளில் இருப்பார்கள்.
அதாவது பழைய கதையாக இருந்தாலும், அதில் தலைவன் செய்வது பழைய செயலாக இருந்தாலும். அதை அந்த நிமிட நாகரீக உடையிலும், சிகை அலங்காரமும் கொண்டு தான் செய்வார்கள். அதிலும், சரித்திர கால படமாக இருந்தாலும், இந்த நவீன உலகின் நவீன வண்ணங்களை கொண்ட அந்த கால உடைகளையும் அவர்கள் அணிய தவறுவது இல்லை.
இப்படி இந்தி படத்தில் கதையை தவிர்த்து மற்ற எல்லம் அந்த நிமிட நடை உடை பாவனைகளை கொண்டவர்களுக்கு இசையில் மட்டும் ஒரு மாபெரும் தோய்வு. தமிழக திரை இசையில் வந்த நவீனம் கூட இந்தி இசையில் இரகுமான் அங்கே செல்லும் வரையில் இல்லை.
எப்படியாவுது இந்த இசையை மட்டும் சரி செய்த்துவிட்டால் இந்தியின் அத்தனை துறையிலும் அந்த நிமிட பூச்சு முழுமையாக பூர்த்தியாகிவிடும் என்று ஏங்கிய இந்தி படத்துறைக்கு சரியான தேர்வாக இரகுமான் இயற்கையாகவே அமைந்தார்.
அது மாதிரியே இந்தியில் வேண்டும் என்று திண்டாடியவர்களுக்கு தமிழி போல் அதே மேற்கத்தியத்தில் தமிழ் பாடல் போல் இந்தி என்று கொடுக்க. அவர்களும் திக்கு முக்காடி தான் போனார்கள்.
மேலும் இரகுமானின் வரவுக்கு பிறகு அந்த மாதிரியான மேற்கத்திய இசையை அவரைபோல் மற்றவர்கள் பிரதிகூட(copy) எடுத்து அடிக்க முடியவில்லை, இதுவும் அவரது பலத்தில் ஒன்று.
அப்படியே அடித்தாலும் மேடைக்கச்சேரிகளில் வரும் தரத்தில் தான் வந்ததே தவிர, இரகுமான் கொடுக்கும் துல்லியத்தில் இல்லை, இல்லவே இல்லை. தமிழில் கேரிசு செயராசு ஒரு அளவிற்கு இரகுமானின் தரத்தில் பாடல்களை கொடுக்கிறார். அவரும் இந்திக்கு எல்லாம் படங்கள் செய்வது இல்லை.
இவ்வளவு வெற்றிகளுக்கு பிறகு இரகுமான் தனது விருப்பமாக இந்துத்தானியிலும், மற்ற இந்திய இசை முறையிலும் பாடல்களை கொடுக்க துவங்கியுள்ளது ஒரு நல்ல துவக்கம். அதாவது இந்திய இசையை அப்படியே சுத்தமான இந்திய இசையாக, கலப்பிசையாக இல்லாமல் (நிலாகாய்கிறது, இந்திரா) அதே துல்லியத்தில் இந்தியிலும் கொடுக்க துவங்கி இருப்பது ஒரு நல்ல துவக்கம்( தில்லி 6 படத்தை உதாரணமாக சொல்லலாம்).
இப்படி இந்தியில் இருந்த ஒரு நாகரீக வெற்றிடத்தை வெற்றியிடமாக தனக்கு ஆக்கிக்கொண்டவர் தான் இரகுமான். மற்றபடி அடித்த காற்றில் அவர் மேலே சென்றார் என்று எல்லாம் அவரை தூற்றுவது சற்றும் பொருந்தாது.
நவீன இசை வரும் போது எல்லாம் பழைய பாடல்களின் இரசிகர்கள் அவ்வளவு எளிதில் அதை ஏற்றுக்கொள்வதற்கு இல்லை. பிறகு அந்த பாடல்களே பழைய பாடல்களாக வரும் போது அது எவ்வளவோ தேவலை என்று சொல்லும் அளவுக்கு எல்லாம் அவர்கள் செல்ல சொல்ல தயங்குவது இல்லை. இது எப்போதும் நாம் பார்க்கும் வழக்குகளில் ஒன்று.
கானா சொல்வதை போல், தனக்கு என்ற ஒரு பாதையை அதுவும் மற்ற எவருமே பிரதி கூட எடுக்க முடியாத பாதையாக கொண்டவர் தான் இரகுமான். அவர் இந்தியில் கோலோச்சுவது ஒன்றும் ஆச்சரியமான செயல் இல்லை. சொல்லப்போனால் இப்போது நவீன இந்தியாவின் இசையின் முன்னோடியாக திகழ்ந்து, ஆலிஉட்டின் படங்களுக்கு இசையமைக்கும் வேலையும் சத்தம் இல்லாமல் செய்த்துக்கொண்டு இருக்கிறார்.
இவர் இங்கிலாந்தில் இருந்த காலத்தை ஆலிஉட்டில் செலவிட்டு இருந்திருந்தாரானால் எப்பொழுதோ இன்னமும் ஒரு பெரிய அங்கிகாரம் அவருக்கு கிடைத்து இருக்கும். இருந்தாலும் ஒன்றும் குறைந்து விடவில்லை. முதல் படத்திலேயே தேசிய விருது என்றால், முதல் இங்கிலாந்து படத்திலேயே ஆசுகர் விருது. வாழ்த்துகள் இரகுமான்.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
1 comments:
உங்கள் விவரமான பதிவை ரசித்தேன், மிக்க நன்றி
Post a Comment