பொருளாதார தேக்க நிலையின் காரணமாக விலைவாசிகளை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நாடுகளில் அமெரிக்காவின் நிலையோ மிகவும் பரிதாபமாக இருக்கிறது.
விலைவாசியை அப்படி கட்டுப்படுத்த முடியவில்லை எனில் தனது வாடியகையாளர்களை இழந்துவிடுவோம் என்ற பயத்தில். அவர்களை கவர்ந்து இழுக்கும் நோக்கில் பல விலைசலுகைகளை அள்ளி வீசியும் வருகிறது சில நிறுவணங்கள்.
வேலைக்கு செல்லும் மக்களை மனதில் வைத்துக்கொண்டு துவங்கியது தான் அவசர உணவகங்கள். இவர்கள் பெரும்பாலும் காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை செயல்படுபவர்கள்.
இவர்களில் சப்வேயும்(Subway) குசினோசப்பும்(Quiznos) போட்டியாளர்கள். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு விலையையும், வகைகளையும் கூட்டியும் தங்களது சந்தையில் பிரபலம் ஆனார்கள்.
குசினோவில் தான் சாப்பிடுவது தான் தனக்கு கௌரவம் என்று சொல்லும் அளவிற்கு அவர்களது பிரபலம் கூடியது என்னவோ உண்மை தான். அதற்காக இந்தியர்களாலே பசியார முடியாத அளவிற்கு சிறிதாக கொடுத்து, தனது போடியாளரான சப்வே கொடுக்கும் விலையைவிட ஒன்றறை மடங்கு விலை அதிகமாக விற்றும் வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், இன்றைகோ அந்த இரு நிறுவணமும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது விலைகளை இறக்கி விற்று வருகிறது. இந்த போட்டியில் யார் வெற்றிக்கொள்வாரோ, அவர் தான் அடுத்து வரப்போகும் வசந்த காலத்தில் கோலோச்ச முடியும்.
இந்த போட்டியை இந்த இரண்டு நிறுவணங்களும் ஆளுக்கு ஒரு மாதிரியாக நடத்துகிறது. சப்வே நிறுவணம் தனது இரகங்களில் பெரிய அளவில் உள்ளவைகளை சின்ன அளவிற்கான விலையில் கொடுக்கிறது. அதனால் அந்த கடையில் யாரும் சின்ன அளவில் கேட்பதே இல்லை.
ஆனாலால் குசினோவோ தனது இரகளில் ஒரு புதிய பெயரில் 3 அல்லது 4 வகைகளை அறிமுகம் படுத்தியது. அந்த அறிமுக அறிவிப்பில் முக்கியமான குறிப்பாக வந்தது அந்த புதிய வகைகள் யாவும் பெரிய அளவு அவகைகளைவிட நீளத்தில் பெரியது என்றது தான்.
நீளத்தில் பெரியது என்று தான் சொன்னேனெ தவிற அகலத்தில் இல்லை என்று சொல்லாமல் சொல்லும் அந்த கடைகளில், அந்த உணவு வகைகளில் வழக்கமாக வைக்கும் எல்லா பொருட்களையும் வைப்பதும் இல்லை. ஆக மொத்தத்தில் குசினோ ஏமாற்றும் நோக்கத்தோடு தான் இந்த திட்டத்தை தொடங்கி உள்ளது போலும்.
இதில் வேடிக்கை என்ன என்றால், இந்த கடைகளை பெரிய நகரங்களில் நடத்தும் மக்கள் அனேகம் பேர் இந்தியர்களும் மற்றும் மற்ற வெளி நாட்டு மக்கள் என்றது குறிப்பிடதக்கது.
இந்த விலையிலே இந்த இரு நிறுவணங்களும் அந்த உணவு வகைகளை கொடுக்க முடியும் அதுவும் தொடர்ந்து 6 மாத காலமாக என்றால், இவ்வளவு நாள் அடித்தது எல்லாம் கொள்ளையா. இதிலே இந்த மெக்குடொனால்சு போன்ற பர்கர் விற்கும் நிறுவணங்கள் இரண்டு ஆண்டுக்கு முன் தனது பர்கரின் அளவை குறைத்து விற்க தொடங்கியது. இன்னமும் விலையும் குறைக்கவில்லை, அளவும் சரி செய்யவும் இல்லை......................
இவர்களை நம்பித்தான் அனேகமான அமெரிக்கர்கள் வாழ்கிறார்கள், காலையிலோ அல்லது இரவிலோ ஒரு வேளையாவது இந்த மாதிரியான கடைகளில் அமெரிக்கர்கள் சாப்பிடுவது வழக்கம். இந்த விலையேற்றத்திற்கு பிறகும் அமெரிக்கர்கள் எந்த ஒரு எதிர்ப்போ தெரிவிக்காமலும் இருப்பது மட்டும் இல்லை, அவர்களுக்கு ஆதரவாக இன்னமும் அவைகளை வாங்கி ஊக்கப்படுத்துவது என்ன செயல் என்று தான் புரியவில்லை.........................
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
1 comments:
அப்படியா? நம்மூர் விலைவாசியை விட இங்கு ரொம்பவே எல்லாம் எகிருச்சுன்னா நினைக்கிறீங்க? இன்னும் ஒரு காலன் பால் 1.65$க்கு இங்கே கிடைக்குதே??
பக்கத்தில் இருக்கும் விரைவு உணவகங்கள் (டாகோ பெல், ஆர்பிஸ், பர்கர் கிங்க், மெக்) எல்லாம் கன்னாபின்னான்னு ஒரு டாலர் மெனு போட்டு அசத்திட்டு இருக்காங்க, நீங்க இப்படிச் சொல்லுறீங்க... ??
Post a Comment