கொஞ்சம் அல்ல மிக மிக காலம் தாழ்த்தி எழுதும் விமர்சனம் இது. 1980களில் வந்த படத்திற்கு இப்போது விமர்சனம் என்றால் பிறகு தாமதம் இல்லையா........
பாலச்சந்தரின் இயக்கத்தில் வந்த இந்த படத்திற்கு கதையும் வசனமும் சிவசங்கரி.
இரகு நாத ரெட்டி இந்த படத்தில் பட கருவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அவர் தான் பின்னாளில் பாலசந்தரின் எல்லா படங்களுக்கும் படம் எடுத்தவர்.
அனத்து இந்த படத்தில் உதவி இயக்குனர்களில் ஒருவர். இவர் தான் பாலச்சந்தரின் அனேக படங்களுக்கு கதை எழுதிகொடுத்தவர். தற்பொழுது இவர் உயிருடன் இல்லை, நல்ல கதையாசிரியர் அவர்.
இந்த படத்தை பற்றி சிவசங்கரி குறிப்பிடுகையில், ஒரு உண்மை சம்பவத்தை வைத்து இந்த கதையை எழுதினார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதில் கொடுமை என்னவென்றால் இன்றைக்கும் இந்த கதை தொடர்கதையாக பார்க்க நேரும் கொடூரம் தான் கொடுமையாக இருக்கிறது.
படத்தின் கதை மிகவும் எளிது, பணத்திற்காக பிரஞ்சுகாரியை பொய் சொல்லி திருமணம் செய்துக்கொண்டு, வாழ்க்கைக்கு என்று ஒரு தமிழ் பெண்ணை அம்மா அப்பாவிற்காக மணந்து கொண்டு அவளையும், பிரஞ்சு காரியையும் ஒரே வீட்டில் வைத்து வாழ நினைத்து ஏமாந்து போன ஒரு ஆணின் கதை தான் இந்த படம்.
ஒவ்வொரு காட்சியிலும் செயபிரதாவும் சரி சிரஞ்சீவியும் சரி அப்படி ஒரு போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கும் படம் இது.
நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது சிரஞ்சீவி மேல் அனைவருக்கும் கோபம் பொத்துக்கொண்டு வரும். அந்த அளவிற்கு அந்த பாத்திரபடைப்பு.
அனந்துவின் கதையாக இருந்து இருந்தால், செயபிரதா பேசி இருக்கும் வசனங்களில் சீற்றம் இருந்திருக்கும். ஆனால் சிவசங்கரியின் வசனமானதால், அந்த வசங்கள் எல்லாம் மகேந்திரனின் வசனங்களில் வருவது போல் இயல்பாகவும், உண்மையில் பேசினால் எப்படி பேசுவார்களோ அப்படி இருந்தது.
அதிகபடியாக அந்த செயபிரதா பேசும் வசனம் இது ஒன்று தான் 'போடா, பாரீசு தான பரவாயில்லை' அவ்வளவு தான். இதுவே அனந்துவாக இருந்திருந்தால், சுகாசனி அதிக படங்களில் பேசி நடித்த அத்தணை வசனங்களும் இந்த ஒரு படத்திற்கு மட்டுமே வந்திருக்கும்.
தப்பிக்க நினைக்கும் அத்தனை சந்தர்பங்களும் அடிபட்டு போகும் போது, ஆதிச்ச நல்லூருக்கு நாமளே ஒரு எட்டு போய் சொல்லிட்டு வந்தால் என்ன என்று தோன்றும் அளவிற்கு கதையும் சம்பவங்களும் அருமையாக இருக்கும்.
எல்லா பாலசந்தரின் படங்களிலும் வருவது போல் ஒரு வல்லுரவு காட்சியை அதுவும் ஒரு கடிதத்தை படிப்பதற்காக என்ற நச்சு விதையை மெல்ல தூவி இருப்பார் இந்த படத்திலும். அதாவது அந்த வல்லுரவு காட்சியில் அவர் சொல்ல நினைப்பது இது தான். பெண்களுக்கு கரியம் என்று வந்துவிட்டால், மற்றது எல்லாம் ஒரு கணக்கும் இல்லை வழக்கும் இல்லை என்று சொல்வது.
இத்தணை ஆண்டுகளுக்கு முன்னே அப்படி எடுத்து இருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.........இது மட்டும் இல்லை என்றால் படம் மிகவும் அழகாக வந்த படம் என்று சொல்லாம்..........
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
0 comments:
Post a Comment